Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

அருள்மிகு முக்கண் நாற்கை ஆஞ்சநேயசுவாமி ஆலயம் மற்றும் அருள்மிகு ராஜகோபாலசுவாமி ஆலயம், அனந்தமங்கலம்

அருள்மிகு முக்கண் நாற்கை ஆஞ்சநேயசுவாமி ஆலயம் மற்றும் அருள்மிகு ராஜகோபாலசுவாமி ஆலயம், அனந்தமங்கலம்-609 307, நாகப்பட்டினம் மாவட்டம்,

+04364 -289888 (மாற்றங்களுக்குட்பட்டது)

சீதையை மீட்க இலங்கைக்குச் சென்றுவிட்டு வெற்றியுடன் ஸ்ரீராமபிரான் தனது பரிவாரங்களுடன் அயோத்திக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அவர்கள் வரும் வழியில் இருந்த பாரத்துவாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கி இளைப்பாறினார்கள். அந்த நேரத்தில் அங்கு வந்த நாரத முனிவர்,” நடந்து முடிந்துவிட்ட யுத்தத்தில் பல அரக்கர்கள் மடிந்துவிட்டாலும், இன்னமும் சில அரக்கர்கள் தப்பி வந்து கடலுக்கு அடியில் அமர்ந்து கொண்டு, மேலும் அரிய சக்தியைப் பெற தவம் செய்தவாறு உள்ளனர். அவர்கள் மீண்டும் சக்தியைப் பெற்றுவிட்டால் அவர்களை அடக்க முடியாமல் போய்விடும். ஆகவே, அவர்கள் தவ வலிமை பெறு முன் அவர்களை அழித்து விட வேண்டும்என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில், காரிசேரி

அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில், காரிசேரி– 626 119 விருதுநகர் மாவட்டம்.

+91- 98423 – 64059 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமை காலை 8 – மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் லட்சுமி நாராயணர்
தாயார் லட்சுமி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் காரிசேரி
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் வத்திராயிருப்பு அருகிலுள்ள சதுரகிரி மலை மகாலிங்க சுவாமி கோயிலில் வசித்த சில சித்தர்கள் நவபாஷாணத்தில் ஒரு லட்சுமி நாராயணர் சிலை செய்து வழிபட்டு வந்தனர். ஒருசமயம் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, சிலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, காரிசேரியில் கரை ஒதுங்கியது. சிலையை எடுத்த மக்கள், இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர்.