Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
அருள்மிகு கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோயில், ஈரோடு
அருள்மிகு கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோயில், ஈரோடு, ஈரோடு மாவட்டம்.
காலை 6 – 12, மாலை 4.30 – 9 மணி வரை திறந்திருக்கும்.
வைகுண்டத்தின் காவலர்களான ஜெயன், விஜயன் இருவரும் மகாவிஷ்ணுவின் மீது பக்தி கொண்டு, எப்போதும் அவரைப் பிரியாமல் இருந்தனர். ஒருசமயம் மகாவிஷ்ணுவைப் பார்க்க வந்த ரிஷிகள் சிலர் காவலர்களை கடந்து உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை உள்ளே அனுமதிக்காததால் சண்டை ஏற்பட்டது. இதையடுத்து வெளியே வந்த பெருமாள், காவலர்களை பூலோகத்தில் பிறக்க சாபமிட்டார். அவர்கள் இரண்யன் – இரண்யாட்சன், ராவணன் – கும்ப கர்ணன், கம்சன் – சிசுபாலன் என பிறந்து மகாவிஷ்ணுவால் வதம் செய்யப்பட்டனர். இப்பிறவிகள் முடிந்த பிறகு மீண்டும் அவர்கள் மகாவிஷ்ணுவிடம் திரும்பி அவருக்கு சேவை செய்ய வேண்டி தாழ்பணிந்து நின்றனர். இவ்வாறு அவர்கள் கருவறைக்குள்ளேயே தாழ்பணிந்து நிற்பதை இந்தக் கோயிலில் காணலாம்.
அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில், கரூர்
அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில், கரூர்,கரூர் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கல்யாண வெங்கடரமணர் |
தாயார் | – | லட்சுமி |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | கரூர் |
மாவட்டம் | – | கரூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
மூன்றாம் குலோத்துங்க சோழன் அரசவையில் புலவராக இருந்த டங்கணாச்சாரி என்பவர் தன் மனைவி சுந்தராம்பிகையுடன் வாழ்ந்து வந்தார். அவர் சிவன் மீது அன்பு கொண்டவர். வேறு எந்தக் கடவுளையும் வணங்க மாட்டார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குழந்தை இல்லாத சுந்தராம்பிகை திருப்பதி வெங்கடாசலபதியிடம், தனக்கு குழந்தை பிறந்தால் ஐந்து வயதில் திருப்பதிக்கு கூட்டி வந்து மொட்டை போடுவதாக பிரார்த்தித்துக் கொண்டாள். வெங்கடேசனின் அருளால் சுந்தாரம்பிகை கருவுற்றாள். தம்பதியர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் சுந்தராம்பிகை குழந்தைக்காக வெங்கடா சலபதியிடம் வேண்டிக் கொண்டது டங்கணாச்சாரிக்கு தெரியாது. குழந்தையும் பிறந்தது. குழந்தைக்கு “குண்டலாச்சாரி” எனப் பெயர் சூட்டினர். ஐந்து வயது ஆனதும் வேண்டிக் கொண்டபடி, நேர்த்திக்கடனை செலுத்தக் கணவரிடம் அனுமதி கேட்டாள் சுந்தராம்பிகை. டங்கணாச்சாரி வெகுண்டார். “இந்த உலகில் சிவனைத் தவிர சக்தியுள்ள கடவுள் வேறு யாருமில்லை. எனக்கு சிவன் அருளால் தான் குழந்தை பிறந்தது. நீ திருப்பதிக்கு செல்லக்கூடாது” என்று கட்டளையிட்டார். சுந்தராம்பிகை கலங்கினாள். தவமிருந்து பெற்ற மகனுக்கு, வேண்டுதலை நிறைவேற் றாவிட்டால், ஏதாவது ஆபத்து வருமோ எனக்கலங்கினாள். இந்தக் கவலையில் அவளது உடல்நிலை மோசமானது. இதைச் சிறுவன் கவனித்தான். அம்மாவின் கவலைக்கு காரணம் கேட்டான். அவனுக்கு புரியும்படியாக அம்மா நடந்த விபரத்தைச் சொன்னாள். “இதற்காகவா கவலைப் படுகிறாய். நான் அந்த திருப்பதி வெங்கடாசலப் பெருமாளை இங்கேயே வரவழைக்கிறேன்” என்றான். அம்மா சிறுவனின் பேச்சை விளையாட்டாக எடுத்துக்கொண்டாள். சிறுவன் தன் ஊரிலுள்ள தான்தோன்றி மலைக்கு சென்றான். “திருப்பதி வெங்கடாசலபதியே! என் அன்னையின் கவலை தீர்க்க இந்த மலைக்கு வா. என் அம்மாவைக் காப்பாற்று. என் அம்மாவின் உயிர் போனால் நானும் இறந்து விடுவேன்” என்று அழுதான். அப்போது ஒரு துறவி அங்கு வந்தார். அவனைத் தேற்றி அழுகைக்கான காரணம் கேட்டார்.