Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
கடுத்துருத்தி சிவன் திருக்கோயில், கடுத்துருத்தி
அருள்மிகு கடுத்துருத்தி சிவன் திருக்கோயில், கடுத்துருத்தி, கோட்டயம் Dt, கேரளா
+91- 093874 84685
காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சிவன்(கடுத்துருத்தி) | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கடுத்துருத்தி | |
மாவட்டம் | – | கோட்டயம் | |
மாநிலம் | – | கேரளா |
முன்னொரு காலத்தில் கரண் என்ற அசுரன் மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக சிதம்பரத்தில் சிவனை நோக்கி கடும் தவம் செய்தான்.
தவத்திற்கு மகிழ்ந்த சிவன் கரணுக்கு 3 சிவலிங்கம் கொடுத்து, தென் திசையில் பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வர சொன்னார். வலக்கையில் ஒரு இலிங்கமும், இடக்கையில் ஒரு இலிங்கமும் எடுத்து கொண்ட அவன் மூன்றாவது இலிங்கத்தை எப்படி எடுத்து செல்வது என தெரியாமல், வாயில் கடித்து இருத்தி சென்று பிரதிஷ்டை செய்ததால் இத்தலம்“கடித்துருத்தி” எனப்பட்டது.
கச்சாலீஸ்வரர் திருக்கோயில், பாரிமுனை
அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயில், பாரிமுனை, சென்னை.
+91- 44 – 2522 7177
காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கச்சாலீஸ்வரர் | |
அம்மன் | – | அழகாம்பிகை | |
தல விருட்சம் | – | கல்யாணமுருங்கை | |
தீர்த்தம் | – | சிவகங்கை தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | பாரிமுனை, சென்னை | |
மாவட்டம் | – | திருவள்ளூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பக்தர் ஒருவர், காஞ்சிபுரத்தில் உள்ள கச்சாலீஸ்வரரை வணங்கிவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் பலத்த மழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. எனவே, அவரால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. அவருக்கோ ஊரில் பல வேலைகள் பாக்கியிருந்தது. “என்ன செய்வேன் இறைவா” என தவித்து நின்றார். ஆனால், மழையோ ஒரு வாரம் விடாப்பிடியாகக் கொட்டிய பின் தான் அடங்கியது. வெள்ளம் வடிய இன்னும் ஒரு வாரம் பிடித்தது. பக்தர் சிவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு வெள்ளம் வடிந்த பின் ஆற்றுக்குள் இறங்கி ஊர் வந்து சேர்ந்தார். என்ன அதிசயமோ தெரியவில்லை. அவர் செய்ய வேண்டிய அத்தனை பணிகளும் ஒன்று விடாமல் முடிக்கப்பட்டிருந்தன, தன் பக்தனுக்காக எல்லா வேலைகளையும் இறைவனே பக்தனின் வடிவில் வந்து செய்து முடித்து விட்டார். பின்னர் அவ்வூரில் சிவலிங்க பூஜை செய்தார் பக்தர். காலப்போக்கில் அங்கு கோயிலும் எழுப்பப்பட்டது.