Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பெரம்பூர்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பெரம்பூர், தரங்கம்பாடி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 -253 202, 94866 31196

(மாற்றங்களுக்குட்பட்டவை)

மூலவர்

சுப்பிரமணிய சுவாமி

உற்சவர்

முருகன்

அம்மன்

வள்ளி, தெய்வானை

தலவிருட்சம்

பிரம்பில்

தீர்த்தம்

புஷ்கரணி

பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

பிரம்ம மங்களபுரம்

ஊர்

பெரம்பூர்

மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

தட்சனின் மகளாக தாட்சாயணி என்னும் பெயரில் பார்வதிதேவி பிறந்து சிவனை மணந்தாள். ஒரு சமயம் தட்சன், சிவனை அழைக்காமல் யாகம் ஒன்றை நடத்தினான். இதில் பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் கலந்து கொண்டார். இதனால் அவருக்கு சாபம் ஏற்பட்டது. பிரம்மா சிவனிடம் சாப விமோசனம் வேண்டினார். மனமிரங்கிய சிவன் பூலோகத்தில் தீர்த்தம் உண்டாக்கி என்னை வழிபட்டால் சாபம் நீங்கும் என்றார். அதன்படி வழுவூர் என்னுமிடத்தில் வீரட்டேஸ்வரர் என்னும் பெயரில் சிவலிங்கம் எழுப்பி வழிபட்டு பிரம்மா சாபம் நீங்கப்பெற்றார். அத்துடன் இத்தலத்தின் அருகில் உள்ள பிரம்ம மங்களபுரத்தில் (பெரம்பூர்) தந்தைக்கு உபதேசம் செய்த சுப்பிரமணியரை வணங்கி ஞான உபதேசமும் பெற்றார்.

தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்த சூரபத்மனை முருகப்பெருமான் அழித்தார். மயிலாகவும், சேவலாகவும் மாறிய சூரபத்மன் முருகனின் ஞான உபதேசம் பெற விரும்பினான். பிரம்மனுக்கும், மயிலுக்கும் முருகன் ஞான உபதேசம் செய்ததால், இத்தல முருகன் ஞான குருவாக விளங்குகிறார். பெரும்பாலான முருகன் கோயில்களில் மயிலின் தலை வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால் இங்கு முருகனின் இடது பக்கம் திரும்பியிருப்பது சிறப்பம்சமாகும்.

அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில், மணக்கால்

அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில், மணக்கால், லால்குடிக்கு அருகில், திருச்சி மாவட்டம்.

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சுப்ரமண்யசுவாமி

அம்மன்

வள்ளி, தெய்வானை

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

மணக்கால்

மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

இந்த உலகையே ஆள்பவர் சிவன். அவரது நெற்றிப்பொறியிலிருந்து தோன்றியவர் முருகன். ஒருமுறை பிரம்மனுக்கு ஓம்என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாததால் அவரை சிறையில் அடைத்தார் முருகன். அப்போது சிவபெருமான் முருகனிடம் பிரணவ மந்திரத்தின் பொருளை தனக்கு உபதேசிக்கும்படி கூறினார். முருகனும் தனது அப்பனான சிவனின் காதில் உபதேசம் செய்தார். தான் அறிந்து கொண்ட உபதேசத்தை சிவன் இவ்வுலகம் முழுவதும் அறிவித்தார். அதன்படி திருமாலும் பிரணவ மந்திரத்தின் பொருளைத் தெரிந்து கொண்டார். தனக்கு சிவன் மூலமாக மந்திர உபதேசம் செய்த முருகனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பெருமாள் தனது திருவிழாவின் போது, இங்குள்ள முருகன் கோயிலுக்கு எழுந்தருளுகிறார் எனத் தலவரலாறு கூறுகிறது. இந்த முருகனின் ஆலய வளாகத்தில் யஜுர் வேத பாடசாலை அமைத்திருப்பதால், எப்போதும் வேதமந்திர ஒலி இங்கே நிறைந்திருக்கிறது. அந்த மந்திரங்களின் அதிர்வு நாள் தோறும் இங்கு வரும் பக்தர்களின் உடற்பிணி, மனநோய்களைப் போக்குவது கண்கூடு. தன்னை ஆராதிக்கும் அனைவருக்கும் மணக்கால் முருகன் தன் அருளை வாரி வழங்குவதில் வள்ளலாகவே திகழ்கிறான் என்று பக்தர்கள் சொல்வது நிதர்சனமான உண்மை. கிழக்கு திசை நோக்கிய ஆலயம். உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம். கருவறையில் சுப்ரமண்ய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் வலது புறம் உற்சவர் திருமேனி உள்ளது. இந்த ஊரின் மத்தியில் உள்ள வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் ஆவணி மாதம் நடைபெறும் திருவிழாவின்போதுதான் பெருமாள், தன் மருமகனான முருகனைப் பார்க்க ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் இங்கே வந்து சற்றுநேரம் தங்கி சேவை சாதிப்பார்.