Category Archives: விழுப்புரம்
அருள்மிகு பச்சையம்மன்(சப்தகன்னி) கோயில், குமாரை, விழுப்புரம்
அருள்மிகு பச்சையம்மன்(சப்தகன்னி) கோயில், குமாரை, விழுப்புரம் மாவட்டம்.
***********************************************************************************************
தமிழகம் முழுக்க உள்ள கிராமங்களில் எண்ணற்ற எல்லை தெய்வங்கள் உண்டு. அவற்றின் வரலாறுகளும் சிறப்புகளும் மெய்சிலிர்க்கச் செய்பவை. கேட்கக் கேட்கத் திகட்டாத அந்த கிராம தெய்வங்கள் கதைகளில், ஏழு பெண் தெய்வங்களின் கதை பிரசித்தி பெற்றது. அவற்றில் ஒரு சுவைமிக்க வரலாறு இங்கே…
பொதிகை மலை அடிவாரத்தில் வாழ்ந்த ஒரு விவசாயிக்கு ஏழு பெண் பிள்ளைகள் இருந்தனர். அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்க முடியாமல் பெற்றோர் தவிக்க, அந்த ஏழு கன்னிப் பெண்களும் ஆற்றங்கரையில் மண்ணால் சிவலிங்கம் செய்து, தங்கள் பெற்றோரின் கவலையைப் போக்குமாறு சிவபெருமானை வேண்டினர்.
அவர்கள் பக்திக்கு இரங்கிய சிவபெருமான் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார். ஒரு விவசாய இளைஞன்போல உருவெடுத்து அங்கு சென்று, பூஜை செய்து கொண்டிருந்த பெண்களைத் தழுவ முயன்றார். “யாரோ ஒருவன் வந்து நம்மை மானபங்கப்படுத்தப் பார்க்கிறான” என்று மிரண்டு போன பெண்கள், திசைக்குகு ஒருவராகக் காட்டிற்குள் ஓடி ஒளிந்தனர்.
இப்படிப் பிரிந்துபோன சகோதரிகள் மீண்டும் ஒன்று சேர ஓராண்டு ஆகிவிட்டது. அந்த ஏழு சகோதரிகளில் காத்தாயி என்பவள் மட்டும் இடுப்பில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு வந்தாள்.
மற்ற சகோதரிகள் குழப்பமடைந்து,”உனக்கு ஏது இந்தக் குழந்தை?” எனக் கேட்டனர்.
அதற்கு காத்தாயி,”பூசை செய்தபோது நம்மைத் துரத்திய அந்த ஆண்மகன் என்னைப் பிடித்து பலவந்தப்படுத்தி விட்டான். அதனால் உண்டானது இந்தக் குழந்தை” என்றாள்.
ஆனால் அதை சகோதரிகள் நம்பவில்லை.
“என்னை நீங்கள் நம்பவில்லையா? என்மீதே சந்தேகப்படுகிறீர்களே. நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அழுதபடி கேட்டாள்.
“நீயும் உன் குழந்தையும் தீயில் இறங்கி வந்தால் நீ சொல்வதை உண்மை என நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என்றனர் மற்ற சகோதரிகள்.
அதன்படியே தீ மூட்டிய காத்தாயி, அதில் தன் குழந்தையோடு இறங்கி நடந்து வந்தாள்.
அப்போது அவர்களுக்குக் காட்சி கொடுத்த சிவ பெருமான்,”இவையெல்லாம் என் திருவிளையாடல் களில் ஒன்று. நீங்களெல்லாம் எம்மைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்த அந்த ஏழு ஊர்களிலேயே தெய் வங்களாய் குடிகொண்டு மக்களின் துயரங்களைப் போக்குங்கள். மக்களும் உங்களையே முதன்மைப் படுத்துவார்கள். உங்களுக்குக் காவலர்(ஏவலர்) களாக பூமாலையப்பர், செம்மலையப்பர், முத்தையா, ராயப்பா, கருப்பையா உள்ளிட்ட ஏழு முனிகளும் உடனிருந்து செயல்படுவார்கள்” என்றருளி மறைந்தார். அவர்களும் அவ்வாறே கோவில் கொண்டார்கள்.
அருள்மிகு அங்காளபரமேசுவரி திருக்கோயில், மேல்மலையனூர்
அருள்மிகு அங்காளபரமேசுவரி திருக்கோயில், மேல்மலையனூர் – 604 204. விழுப்புரம் மாவட்டம்.
+91 – 4145 – 234 291
காலை 7 மணிமுதல் மதியம் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணிமுதல் இரவு 8 மணிவரையிலும் திறந்திருக்கும் இந்த சன்னதி அமாவாசையன்று இரவு முழுவதும் திறந்திருக்கும்.
மூலவர்: – அங்காளபரமேஸ்வரி
தல விருட்சம்: – வில்வம்
பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர்: – மேல்மலையனூர்
மாநிலம்: – தமிழ்நாடு
ஒரு முறை தட்சன் தன் மகளான தாட்சாயினியை சிவனுக்கு திருமணம் செய்து வைத்தார். உலகநாயகனான சிவனுக்கு மாமனாராகி விட்டதால் தட்சனுக்கு கர்வம் ஏற்பட்டது. சிவனை பார்க்க கைலாயத்திற்கு சென்ற தட்சனை நந்தி தடுத்தார். இதனால் கோபமடைந்த தட்சன், சிவபெருமானை அழைக்காமலேயே யாகம் ஒன்றை நடத்தினார்.