Category Archives: மதுரை
அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் கோயில், சோழவந்தான் வழி, குருவித்துறை
அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் கோயில், சோழவந்தான் வழி, குருவித்துறை, மதுரை மாவட்டம்.
+91- 98425 06568 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
சித்திரரத வல்லப பெருமாள் |
தாயார் |
– |
|
செண்பகவல்லி |
பழமை |
– |
|
1000 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
குருவித்துறை |
மாவட்டம் |
– |
|
மதுரை |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. அசுரர்களில் நிறைய பேர் மாண்டனர். மாண்டுபோன அசுரர்களை எல்லாம் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் மிருத்யசஞ்சீவினி என்ற மந்திரம் மூலம் உயிர் பெறச்செய்து காப்பாற்றி வந்தார். அந்த மந்திரத்தை கற்றுக்கொள்ள விரும்பிய தேவர்கள், வியாழ பகவானின் (குரு) மகன் கசனை அழைத்து, “உனது தியாகத்தால் தான் அசுரர்களை வெல்ல முடியும். எனவே நீ அசுர குரு சுக்கிராச்சாரியாரிடம் சென்று குருகுல வாசம் செய்து மிருத்யசஞ்சீவினி மந்திரத்தை உபதேசம் பெற்று வர வேண்டும்” என்றார்கள். தேவர்கள் கூறியதுபோலவே கசனும் தன் தந்தை வியாழபகவானிடம், “நான் திரும்பி வரும் போது பிரம்மச்சாரியாகத்தான் வருவேன்” என்று சபதம் செய்து விட்டு, அவரது ஆசியுடன் அசுரகுருவிடம் சென்றான். அசுரலோகம் சென்ற அவன், சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவள் மூலமாக சுக்ராச்சாரியாரிடம் மந்திரம் கற்றுக் கொண்டான். இதையெல்லாம் கண்காணித்து வந்த அசுரர்கள் கசன் உயிரோடு இருந்தால் அசுரர்குலத்திற்கு ஆபத்து வந்துவிடும் என நினைத்து கசனை கொன்றுவிடத் தீர்மானித்தார்கள். அதன்படி கசனை கொன்று தீயிலிட்டு சாம்பலாக்கி அசுரகுரு குடிக்கும் பானத்தில் கலக்கி கொடுத்து விட்டார்கள். அசுரகுருவும் ஏதும் அறியாமல் குடித்து விட்டார். கசனை காணாத தேவயானி, தன் தந்தை சுக்கிராச்சாரியாரிடம் கசனின் இருப்பிடத்தை கண்டறியும்படி வேண்டினாள். அசுரகுருவும் தன் ஞான திருஷ்டியால் கசன் தன் வயிற்றில் இருப்பதை அறிந்து தன் மகளை தேற்றினார். தேவயானியின் விருப்பப்படி மிருத்யசஞ்சீவினி மந்திரம் மூலம் கசனை உயிர் பெறச் செய்தார்.
அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில், குராயூர்-கள்ளிக்குடி
அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில், குராயூர்–கள்ளிக்குடி, மதுரை மாவட்டம்.
+91 452-269 3141, 98432- 93141 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
வேணுகோபால சுவாமி |
தாயார் |
– |
|
பாமா, ருக்மணி |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
குராயூர்–கள்ளிக்குடி |
மாவட்டம் |
– |
|
மதுரை |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
தென்காசியைத் தலைநகராகக் கொண்டு 14ம் நூற்றாண்டில் ஆண்ட வென்று மாலையிட்ட வீரபண்டியன், பெருமாளுக்கு ஒரு கோயில் எழுப்ப விரும்பினான். அவனது நாடு விரிந்து பரந்திருந்தது. அவன் மதுரைக்கும் அடிக்கடி சென்று வருபவன். கள்ளிக்குடியை அடைந்த நேரத்தில் அவனுக்கு ஸ்ரீமந் நாராயணனின் நினைவு மனதில் எழுந்தது. இதை நாராயணனின் சித்தமாகவே உணர்ந்த அவன், நினைவு எழுந்த இடத்திலேயே பெருமாளுக்கு கோயில் அமைத்தான். சுவாமிக்கு வேணுகோபாலன் என்று பெயரிட்டான். அதன்பின் வீரபாண்டியன், பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டியன் ஆகியோர் கோயிலை விரிவுபடுத்தினர்.
அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்தக் கோயில் தற்போது சிதிலமடைந்துள்ளது. கருவறையில், புல்லாங்குழல் இசைக்கும் கோலத்தில் பாமா, ருக்மணி சமேதராக வேணுகோபால சுவாமி எழுந்தருளியுள்ளார். சிறிய தோற்றம் உடையவராக இருந்தாலும் நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய பலனை அளிக்கிறார். ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வார் வாழ்ந்த புளியமரம் பூப்பதும், காய்ப்பதும் இல்லை என்ற சிறப்பை பெற்றிருப்பது போல், இங்குள்ள நந்தவனத்திலுள்ள புளியமரமும் பூப்பதும், காய்ப்பதும் இல்லை என்ற சிறப்பை பெற்றுள்ளது.