Category Archives: மதுரை
மூவர் திருக்கோயில், அழகப்பன் நகர், மதுரை
அருள்மிகு மூவர் திருக்கோயில், அழகப்பன் நகர், மதுரை.
+91 94431 06262
காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சிவன் | |
அம்மன் | – | பார்வதி, சரஸ்வதி, லட்சுமி | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | அழகப்பன் நகர், மதுரை | |
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களை இறைவன் செய்கிறார். இதைக் குறிக்கும் வகையில் இந்தக் கோயிலில் படைப்புக்கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களது தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதிக்கும் இங்கு சன்னதிகள் உள்ளன. எனவே, இது மூவர் ஆலயம் எனப்படுகிறது. இங்குள்ள விநாயகர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு செல்வவளமும், வேண்டிய காரியசித்தியையும் அருளும் விதத்தில் உள்ளதால் “செல்வ சித்தி விநாயகர்” எனப் பெயர் பெற்றுள்ளார்.
மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், கோச்சடை
அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், கோச்சடை, மதுரை.
+91 93645 09621
காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சொக்கநாதர் | |
அம்மன் | – | மீனாட்சி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | சிவ தீர்த்தம் | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | கோவிச்சடையன் | |
ஊர் | – | கோச்சடை | |
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
வைகையில் பெரும் வெள்ளம் வருகிறது. வெள்ளத்தை அடைக்க மன்னர் உத்திரவிட்டார். அந்த உத்திரவின்படி வீட்டுக்கு ஒரு நபர் வைகை வெள்ளத்தை அடைக்க மண் சுமக்க வேண்டும். வந்தி எனும் வயதான பாட்டி தனக்கென ஆள்யாரும் இல்லையே என்று யோசிக்கும் வேளையில் சிவபெருமான் வாலிபன் வேடத்தில் வந்து வந்தியிடம், “பாட்டி உனக்காக நான் மண் சுமந்து போடுகிறேன், எனக்கு புட்டு தருவாயா? அதாவது நீ அவிக்கும் புட்டில் உதிர்ந்துள்ள புட்டெல்லாம் எனக்கு உதிராத புட்டெல்லாம் உனக்கு” என்று கூற வந்தியும் ஒப்புக் கொள்கிறாள். வந்தி அவிக்கும் புட்டெல்லாம் உதிர்ந்து கொண்டே இருக்க அதையெல்லாம் இவரே சாப்பிட்டுவிட்டு கரையை அடைக்க மண் சுமக்காமல் உண்ட மயக்கத்தில் அயர்ந்து தூங்கி விடுகிறார். அவ்வழியே வந்த மன்னன் கரையை அடைக்காமல் தூங்கிக் கொண்டிருப்பதால் கோபமடைந்து பிரம்பால் அடிக்கிறார். முதுகில் பிரம்படி வாங்கிய பெருமான் துள்ளி ஓடிச் சென்று ஒரு கூடையில் மண்ணை அள்ளிப் போட அதுவரை அடைக்க முடியாத வெள்ளத்துக்கு அணை போடப்பட்ட அதிசயத்தை அனைவரும் கண்டு வியக்கின்றனர். மேலும் அனைவரது முதுகிலும் பிரம்படி தடம் இருப்பது தெரிய வருகிறது. வந்தது ஈசன்தான் என்பதை மன்னர் உட்பட அனைவரும் உணர்ந்து அவன் தாள் பணிந்து வணங்குகின்றனர். இந்த திருவிளையாடல் புராண வரலாறு நிகழ்ந்த தலம் தான் இது.