Category Archives: தூத்துக்குடி

அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில், திருத்தொலைவில்லி மங்கலம்

அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில், நவதிருப்பதி, திருத்தொலைவில்லி மங்கலம்– 628 752, தூத்துக்குடி மாவட்டம்.

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஸ்ரீநிவாசன்
உற்சவர் ஸ்ரீதேவர் பிரான்
தாயார் அலமேலுமங்கை தாயார், பத்மாவதி தாயார்
தீர்த்தம் தாமிரபரணி தீர்த்தம், வருணத்தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் திருத்தொலைவில்லி மங்கலம்
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

இத்தலம், தென்திருப்பேரை அருகிலேயே உள்ளது. இங்கு இரண்டு கோயில்கள் உள்ளது. இவை இரண்டும் இரட்‌டைத்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. ஷேத்திரத்தில் ஒரே திவ்ய தேசமாக கருதப்படுகிறது. கோயில் அடர்ந்த காட்டில் அமைந்துள்ளது. அருகில் வீடுகள் அதிகம் இல்‌லை. அர்ச்சகர்கள் வரும் நேரம் அறிந்து சென்று தரிசனம் செய்வது நல்லது. நம்மாழ்வார் 11 பாசுரங்களைப் பாடியுள்ளார். நவகிரகங்களில் ராகு கேது என்ற இரு சாயாகிரகங்களுக்கு உரிய தலங்களாக விளங்குகிறது.

அருள்மிக மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில், தென்திருப்பேரை

அருள்மிக மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில், தென்திருப்பேரை – 628 623, தூத்துக்குடி மாவட்டம்.

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மகரநெடுங் கு‌ழைக்காதர்
உற்சவர் நிகரில் முகில் வண்ணன்
தாயார் குழைக்காது வல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார்
தீர்த்தம் சுக்ரபுஷ்கரணி, சங்க தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பேரை
ஊர் தென்திருப்பேரை
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

இங்குள்ள ஆலயம் மிகப்பெரியதாகும். பூதேவி, துர்வாசர் உபதேசித்த அஷ்டாட்சர மந்திரத்தை ஜபித்து, தவம் செய்து, தாமிரபரணியில் மூழ்கி எழும்போது இரண்டுபெரிய குண்டலங்களைப் பெற்றாள். ஸ்ரீபேரை என்ற திருநாமம் பெற்றாள். பங்குனி பவுர்ணமியில் தாமிரபரணியில் பெற்ற மீன்வடிவமுள்ள இரண்டு குண்டலங்களைப் பெருமாளுக்கு சமர்ப்பிக்க, பகவான் அவைகளை அணிந்ததால் மகரநெடுங்கு‌ழைக்காதன் என்ற நாமம் பெற்றார். பூமி‌தேவி ஸ்ரீபேரை என்ற நாமம் பெற்றதால், இத்தலத்திற்குத் திருப்பேரை என்ற பெயர் ஏற்பட்டது. வருணன் குருவை நிந்த‌ை செய்த பாவம் விலக பங்குனி பவுர்ணமியில் பகவானுக்கு திருமஞ்சனம் செய்து, பாவம் விலகி நன்‌மை அடைந்ததாகத் தல வரலாறு கூறுகிறது.