Category Archives: தூத்துக்குடி
அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம்
அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி அருகில், தூத்துக்குடி மாவட்டம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சுப்ரமணியர் | |
தீர்த்தம் | – | தாமிரபரணி | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | ஸ்ரீவைகுண்டம் | |
மாவட்டம் | – | தூத்துக்குடி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
கோயிலுக்கு எதிரில், சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்த வேம்பும் அரசும் பின்னிப் பிணைந்தபடி நிற்க, மரத்தடியில் நாகர் விக்கிரகங்கள் அமைந்துள்ளன. சனிக் கிழமைகளில் (புரட்டாசி சனியில் வழிபடுவது கூடுதல் விசேஷம்) தாமிரபரணியில் நீராடி, ஈரத்துணியுடனேயே சென்று பச்சரிசி, எள் ஆகியவற்றை நாகர் சிலைகளின் மீது தூவி, மஞ்சள் மற்றும் பாலால் அபிஷேகித்து வழிபட, சர்ப்ப தோஷம் நீங்கும்; சகல சௌபாக்கியங்களுடன் வாழ்க்கை அமையும்; பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வள்ளி – தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் இந்த முருகப்பனை மனதாரப் பிரார்த்தித்தால், நினைத்தது நிறைவேறும்.
அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகுமலை
அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகுமலை, தூத்துக்குடி மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கழுகாசல மூர்த்தி (முருகன்) | |
அம்மன் | – | வள்ளி, தெய்வானை | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கழுகு மலை | |
மாவட்டம் | – | தூத்துக்குடி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இராவணனால் ஜடாயு கொல்லப்பட்டார். இராமனால் இறுதிக் காரியங்கள் செய்யப்பட்டு ஜென்ம சாபல்யம் பெற்றார். இதை அனுமார் மூலம் அறிந்த ஜடாயுவின் தம்பி சம்பாதி என்ற கழுகு, இராமனிடம், தன்னால் “என் சகோதரனுக்கு ஈமக்கிரியை செய்ய இயலாமல் போயிற்றே; இதனால் ஏற்பட்ட பாவம் எப்போது தீரும்? எங்கு போய் இதைக் களைவது?” என்றார். அதற்கு இராமன், “நீ கஜமுகபர்வதத்தி்ல் உள்ள தீர்த்தத்தில் நீராடி, பூஜை செய்து வந்தால் இதற்கான விடை கிடைக்கும்” என்றார். இதன்பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. சம்பாதி முனிவர் கஜமுக பர்வதத்திலேயே தங்கியிருந்தார். அப்போது, முருகன் சூரபத்மனை வதம் செய்வதற்காக இவ்வழியாக வந்தார்.
அந்நேரத்தில் முனிவர்களையும், மக்களையும் சூரபத்மனின் தம்பி தாரகாசூரன் துன்புறுத்திக் கொண்டிருந்தான். முருகன் தாரகாசூரனை ஐப்பசி பஞ்சமி திதியில் வதம் செய்தார். வதம் செய்த களைப்பு தீர, கஜமுக பர்வதத்தில் ஓய்வெடுத்தார். அவருக்கு தங்கும் இடம் தந்தார் சம்பாதி. அத்துடன் சூரபத்மனின் இருப்பிடத்தையும் காட்டினார். இதனால் மகிழ்ந்த முருகன் சம்பாதிக்கு முக்தி தந்தார். இதனால் சம்பாதி தன் சகோதரனுக்கு ஈமக்கிரியைகள் செய்ய முடியாத பாவம் நீங்கியது. கழுகு முனிவரான சம்பாதி வசித்த கஜமுக பர்வதமே அவரது பெயரால் ‘கழுகுமலை‘ எனப் பெயர் பெற்றது.