Category Archives: திருச்சி
அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில், இடையாற்று மங்கலம்
அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில், இடையாற்று மங்கலம், வாளாடி வழி, லால்குடி தாலுக்கா, திருச்சி மாவட்டம்.
+91 431 – 254 4070, 98439 51363
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
மாங்கல்யேஸ்வரர் |
உற்சவர் |
– |
|
சோமாஸ்கந்தர் |
தாயார் |
– |
|
மங்களாம்பிகை |
தல விருட்சம் |
– |
|
பவளமல்லி |
தீர்த்தம் |
– |
|
கிணறு |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
இடையாற்று மங்கலம் |
மாவட்டம் |
– |
|
திருச்சி |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
மாங்கல்ய மகரிஷி உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அகத்தியர், வசிஷ்டர், பைரவர் ஆகிய மகரிஷிகளின் திருமணத்தில், மாங்கல்ய தாரண பூஜை நிகழ்த்தியவர். இவரது தவ வலிமை அனைத்தும் அவரது உள்ளங்கைகளில் அடங்கியிருந்தது. மாலைகளை தாங்கி வானில் பறக்கும் அட்சதை தேவதைகள், மாங்கல்ய தேவதைகளுக்கெல்லாம் இவரே குரு (திருமணப்பத்திரிகைளில் மாங்கல்யத்துடன் பறப்பது போன்ற தேவதைகளைஅச்சிடும் வழக்கம் இப்போதும் உள்ளது). திருமணத்திற்கான சுப முகூர்த்த நேரத்தை அமிர்தநேரம் என்பர். இந்த நேரத்தில் இவர் யாரும் அறியாமல் சூட்சும வடிவில் இத்தலத்து, மாங்கல்யேஸ்வரரை வணங்கி, மாங்கல்ய வரம் தரும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதாக ஐதீகம். உத்திர நட்சத்திரத்திற்கு மாங்கல்ய மங்கள வரம் நிறைந்திருப்பதால்தான், அனைத்து தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவங்கள் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் நிகழ்கின்றன.
அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில், திருவானைக்காவல்
அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில், திருவானைக்காவல், திருச்சி மாவட்டம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பிரம்மதேவன் தான் செய்து வரும் படைப்புத் தொழிலைப் பெருக்க பத்து புதல்வர்களைப் பெற்றான். அப்புதல்வர்களுள் ஒருவனே தட்சன். இவன் சிவபெருமானைக் குறித்து ஆயிரம் ஆண்டுகள் கடுமையாகத் தவம் புரிந்து ஏராளமான வரங்களைப் பெற்றான். அந்த வரங்களுள் ஒன்று உமா தேவியைத் தனது மகளாக அடைந்து அவளை சிவபெருமானுக்கே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது. அந்த வரத்தின்படி இமய மலைச்சாரலில் காளிந்தி நதியில் வலம்புரிச் சங்கு உருவில் தவம் புரிந்து கொண்டிருந்த உமா தேவியை, தட்சன் கண்டான். அவன் அந்த சங்கினைக் கையில் எடுத்த மறுகணம், சங்கு வடிவம் நீங்கி அழகிய பெண் குழந்தையானாள் உமா தேவி. அவளை எடுத்து வந்து தாட்சாயணி என்ற பெயரைச் சூட்டி அன்புடன் வளர்த்து வந்தான் தட்சன். தனது ஆறாவது வயது முதலே சிவபெருமானைத் தனது கணவனாய் அடையும் நோக்குடன் ஊருக்கு வெளியே ஒரு தவமாடத்தை அமைத்து, சிவபெருமானைக் குறித்து கடுமையாக தவம் இருக்கத் தொடங்கினாள் உமாதேவி. அவளது தவத்திற்கு மெச்சிய சிவபெருமான், கூடிய விரைவில் அவளை மணம்புரிவதாய்க் கூறி மறைந்தார். அவர் கூறியது போல் தட்சன் கன்னிகாதான மந்திரங்களைக் கூறி அம்பிகையின் கரத்தை சிவபெருமானின் கரத்தில் வைத்து தத்தம் செய்தான். அடுத்த கணம் சிவபெருமான் திடீரென மறைந்தார்.