Category Archives: திண்டுக்கல்

அருள் மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல்

அருள் மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல் – 624001, திண்டுக்கல் மாவட்டம்.
**********************************************************************************************************

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர்: – மாரியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – திண்டீஸ்வரம்

ஊர்: – திண்டுக்கல்

மாவட்டம்: – திண்டுக்கல்

மாநிலம்: – தமிழ்நாடு

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் சிலை மட்டுமே இருந்தது. மலைக்கோட்டையின் கீழ் திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர் ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை வைத்தனர். அதுவே திண்டுக்கல் மக்களுக்கு கோட்டை மாரியம்மனாகவும்காவல் தெய்வமாக உள்ளது.

இக்கோயிலுக்குகென்று சிறப்பு வாயில்கள் மூன்று உள்ளது. அம்மன் ஊர்வலக் காலங்களில் வெளியே செல்வது முன்புறமாக செல்லும். பின்புற வாயில்கள் மலைக்கோட்டையை ஒட்டியுள்ளது.

சன்னதியின் உள்புறத்தில் நுழைவாயிலில் கொடிக்கம்பம் அமைந்துள்ளது. தாமிரத்தால் கலந்து செய்யப்பட்டுள்ளது.

அம்மன் சன்னதியை ஒட்டி முன்புறம் தெற்குப்பக்கம் விநாயகர் கோவிலும், வடக்குப்பக்கம் மதுரைவீரன் கோயில், முன்புற வடக்கில் நவக்கிரங்கள், பின்பக்கம் தென்புறம் முனீஸ்வர சுவாமி சன்னதி, வடபுறம் கருப்பணசாமி சன்னதி உள்ளது. காளியம்மன் சிலை, துர்கை சிலை உள்ளது.

மேலும் விழாக்காலத்தில் சிம்மவாகனம், ரிடப வாகனம், குதிரை வாகனம், ஆகிய வாகனங்களில் அம்மன் காட்சிதருவார்.

இந்த அம்மன் சிலையின் அடிப்பகுதி, பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதைந்து இருப்பது சிறப்பாகும். மற்ற தெய்வங்களின் சிலைகள் இப்படி இருக்காது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திண்டுக்கல் மாவட்டம் வாஸ்து சாஸ்திரப்படி அமைந்துள்ளது. மேற்கு திசையில் மலையும், அதன் மீது கோட்டையும் அமைந்துள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோட்டை இன்றும் அழியாமல் உள்ளது.