Category Archives: திண்டுக்கல்
பெரியாவுடையார் கோயில், மானூர்
அருள்மிகு பெரியாவுடையார் கோயில், மானூர், திண்டுக்கல் மாவட்டம்.
+91- 4545 – 242 551
காலை 8 மணி முதல் மாலை 6 மணி மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பெரியாவுடையார், (பிரகதீஸ்வரர்) | |
உற்சவர் | – | நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர், பிரதோச தாண்டவர் | |
தல விருட்சம் | – | கடம்பமரம் | |
தீர்த்தம் | – | சண்முகநதி | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | மானூர் | |
மாவட்டம் | – | திண்டுக்கல் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பழனி நகரில் எழுந்தருளிய பெரியநாயகிக்கு நாயக்கர் காலத்தில் கோயில் கட்டப்பட்டது. ஆனால் சிவபெருமானோ தன்னை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட திருவிளையாடல் புரிந்தார். விராட மகாராஜாவுக்கு வேட்டையாடுவது என்றால் மிகவும் விருப்பம். ஒருநாள் சிவன் மான் உருவம் கொண்டு மன்னன் முன்பு தோன்றினார். மானின் அழகில் மயங்கிய மன்னன் அதைப்பிடிக்கத் துரத்தினான். மானும் மன்னின் பிடியில் சிக்காமல் இலிங்க வடிவில் வீற்றிருக்கும் புதர் அருகில் வந்து மறைந்து கொண்டது.
மானைக் காணாததால் கோபம் கொண்ட மன்னன் அம்பெய்தான். புதரில் உள்ளே ஒரு புற்று இருந்தது. அங்கு ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அம்பு எய்ததும், புற்றிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. பயந்து போன மன்னன் புதரை விலகி பார்த்த போது, அம்பு புதருக்குள் இருந்த புற்றுக்குள் இருந்த இலிங்கத்தின் மீது பட்டு ரத்தம் வடிந்தது. இறைவனிடம், அறியாமல் செய்த தவறுக்கு மன்னிக்கும் படி வேண்டினான் மன்னன். இறைவனும் அசரீரியாக தம்மை வெளிப்படுத்தவே இப்படி திருவிளையாடல் புரிந்தோம் என்று கூறினார். இறைவனின் கட்டளைப்படியே மன்னனும் அந்த இடத்தில் கருவறை அமைத்து பூஜை செய்து வந்தான். மன்னன், மானைத்துரத்தி வந்ததால் இந்த ஊர் மானூர் ஆனது. அம்பு பட்ட தழும்பை, இலிங்கத்தின் மேல் இப்போதும் காணலாம்.
கைலாயத்தில் ஞானப்பழம் முருகனுக்கு கிடைக்காமல் விநாயகருக்கு கிடைத்து விடுகிறது. இதனால் கோபம் கொண்ட முருகன் பழனி மலைக்கு வந்து விடுகிறார். முருகனைத் தேடிக்கொண்டு சிவனும் சக்தியும் பூலோகத்தில் பழனி மலைக்கு அருகில் வந்து இறங்குகிறார்கள். அப்படி இறங்கிய இடத்தின் இயற்கை எழிலை கண்ட சிவன் அங்கேயே வீற்றிருந்து அருள்பாலிக்க நினைத்துவிட்டார். ஆனால் உமையவளோ தன் மகன் முருகனைக் காண பழனிக்கே செல்ல அனுமதிக்கும்படி சிவனிடம் வேண்ட சிவனும் சம்மதிக்கிறார். பிரிய மனமில்லாமல் நாயகி விடை பெற்றதால் அன்னை “பிரியா நாயகி” என்றும், விடை கொடுக்க மனமில்லாமல் சிவன் விடை கொடுத்ததால் “பிரியாவிடையார்” என்றும் அழைக்கப்பட்டார்கள். இதுவே காலப்போக்கில் மருவி “பெரியாவுடையார் – பெரியநாயகி” ஆனது. பார்வதி முருகனைத் தேடி சென்று விட்டதால் இங்கு அம்மனுக்கென தனி சன்னதி எதுவும் கிடையாது. இருந்தாலும் சக்தி வேறு சிவம் வேறு என இல்லாமல் இரண்டும் ஒன்றானதால் இங்குள்ள சிவனை வழிபட்டாலே சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும்.
பத்மகிரீஸ்வரர் (காளஹஸ்தீஸ்வரர்) அபிராமி திருக்கோயில், திண்டுக்கல்
அருள்மிகு பத்மகிரீஸ்வரர் (காளஹஸ்தீஸ்வரர்) அபிராமி திருக்கோயில், திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம்.
+91-51- 2433 229, 2460 903
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | காளகத்தீஸ்வரர் , பத்மகிரீஸ்வரர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | ஞானம்பிகை, அபிராமியம்பிகை | |
தல விருட்சம் | – | நெல்லி மரம் | |
தீர்த்தம் | – | ஐந்து தீர்த்தம் | |
ஆகமம் | – | காரணாகமம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திண்டீச்சுரம் | |
ஊர் | – | திண்டுக்கல் | |
மாவட்டம் | – | திண்டுக்கல் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பிரம்மா தனக்கு ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக இங்கு சிவனை வேண்டித் தவமிருந்தார். சிவன் அவருக்கு ஒரு பத்ம(தாமரை)த் தடாகத்தின் மத்தியில் எழுந்தருளினார். இதனால் இவர் “பத்மகிரீஸ்வரர்” என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் திண்டிமாசுரன் என்னும் அசுரன், பக்தர்களைத் துன்புறுத்தவே, சிவன் அவனை அழிக்கச் சென்றார். சிவனின் பார்வை பட்டதுமே திருந்திய அசுரன், தன் பெயரால் இத்தலம் திகழ வேண்டுமென வேண்டினான். சிவனும் அவ்வாறே அருளவே இத்தலம், “திண்டீஸ்வரம்” எனப் பெயர் பெற்றது.