Category Archives: சிவகங்கை
அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயில், வேம்பத்தூர்
அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயில், வேம்பத்தூர் – 630 565. சிவகங்கை மாவட்டம்.
+91- 4575- 236 284, +91-4575-236 337 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் |
தாயார் | – | பூமிநீளா (உற்சவர்: ஸ்ரீதேவி,பூதேவி) |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | வேம்பத்தூர் |
மாவட்டம் | – | சிவகங்கை |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முன்னொரு காலத்தில் குலசேகரபாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்ட போது, கடும் வறட்சி ஏற்பட்டது. இவன் சோழ இளவரசியைத் திருமணம் செய்திருந்தான். சோழநாட்டில் நீர் நிறைந்து பயிர் விளைந்து செழிப்பாக இருக்கும் பூமியைப் பார்த்து ஆச்சரியப்பட்டான் பாண்டியன். இவன் தன் மாமனாரிடம்,”எங்கள் நாட்டில் ஏற்பட்ட வறட்சி நீங்க என்ன செய்ய வேண்டும்?” என்றான். “காசியிலிருந்து 2008 அந்தணர்களை அழைத்து வந்து உன் நாட்டில் யாகம் செய்தால் மழை பொழியும். பயிர் செழிக்கும்” என்றார் சோழன். யாகம் நடத்த 2008 அந்தணர்கள் குடும்பத்துடன் வந்தனர். யாகம் சிறப்பாக நடந்து மழை பொழிந்தது. விளைச்சல் பெருகியது. மன்னனுக்கு அளவில்லாத ஆனந்தம். யாகம் செய்த அந்தணர்களுக்கு அவர்களது பெயரிலேயே நிலம் கொடுத்து இங்கேயே தங்க ஏற்பாடு செய்தான். நிலப்பட்டா கொடுக்கும் போது, 2007 அந்தணர்கள் வந்து விட்டனர். 2008வது அந்தணரான கணபதி என்பவரை மட்டும் காணவில்லை. மன்னனுக்கு வருத்தம். என்ன செய்வதென்று தெரியவில்லை. சிறிது நேரத்தில் அந்த முழு முதற்கடவுளான விநாயகரே, அந்தணர் வடிவில் நேரில் வந்து,”நான் தான் கணபதி” என்று கூறி நிலத்தைப் பெற்றுக்கொண்டார். அப்படிப் பெற்றுக்கொண்ட நிலம் தான் வேம்பத்தூர். இந்த கணபதி ஊரின் குளக்கரையில் இன்றும் “2008 கணபதி” என்ற பெயரில் வீற்றிருந்து வேதம் சொல்லி தருவதாக ஐதீகம்.
இங்குள்ள மக்களில் பலர் பண்டிதர்களாகவும், ஆகம சாஸ்திரங்களிலும், மருத்துவத்திலும் வல்லுனர்களாகவும் விளங்குகிறார்கள்.
அருள்மிகு வெட்டுடையா காளி கோயில், அரியாக்குறிச்சி
அருள்மிகு வெட்டுடையா காளி கோயில், கொல்லங்குடி வழி, விட்டனேரி போஸ்ட், அரியாக்குறிச்சி– 623 556. சிவகங்கை மாவட்டம்.
+91-90479 28314, 93633 34311 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, பவுர்ணமி நாட்களில் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வெட்டுடையா காளி |
தல விருட்சம் | – | ஈச்சமரம் |
தீர்த்தம் | – | தெப்பம் |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன்பு |
ஊர் | – | கொல்லங்குடி |
மாவட்டம் | – | சிவகங்கை |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிவன் பிட்சாடனாராகவும், திருமால் மோகினியாகவும் அவதாரம் எடுத்தபோது, அவர்களது இணைப்பில் உருவானவர் ஐயப்பன். இவரையே மக்கள் சாஸ்தா என்றும், அய்யனார் என்றும் காவல் தெய்வமாக வழிபடுகின்றனர்.
முற்காலத்தில் இவ்வூரில் வசித்த ஒரு பக்தரின் கனவில் தோன்றிய அய்யனார், தனது சிலை வடிவம் ஈச்ச மரக்காடான இங்கு இருப்பதாக உணர்த்தினார். அதன்படி, பக்தர் இங்கு வந்து குறிப்பிட்ட இடத்தில் தோண்டினார். ஓரிடத்தில் கோடரி வெட்டுப்பட்டு, சிலை கிடைக்கப்பெற்றது. இதன் காரணமாக இவருக்கு “வெட்டுடையார்” அய்யனார் என்றே பெயர் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் இந்த ஊரில் அய்யனார் கோயில் தான் இருந்தது. இதை நிறுவியவர் யார் என்பது தெரியவில்லை.
ஒரு சாரார் கருத்து:
வெட்டுடையாரைக் கருப்பவேளார், காரிவேளார் என்ற பக்தர்கள் பூசித்து வந்தனர். ஒருசமயம் நள்ளிரவில் அய்யனார் சன்னதிக்கு அருகில் ஒரு ஈச்சமரத்தடியில் பேரொளி மின்னியதைக் கண்டனர். மறுநாள் காலையில் அங்கு அம்பிகையின் இயந்திரம் இருந்தது. அவ்விடத்தில் அம்பிகைக்கு சிலை வடித்து பிரதிட்டை செய்தனர். சுவாமியின் பெயரால் அவளுக்கு “வெட்டுடையார் காளி” என்றே பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் இவள் பிரசித்தி பெறவே, இவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்பெற்றது.