Category Archives: சிவகங்கை
சோமநாத சுவாமி திருக்கோயில், மானாமதுரை
அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை சோமநாத சுவாமி திருக்கோயில், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்.
+91 – 4574 268906
காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சோமேஸ்வரர் (திருபதகேசர்) | |
உற்சவர் | – | சோமநாதர் | |
அம்மன் | – | ஆனந்தவல்லி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | மதுகூபம், சந்திரபுஷ்கரணி | |
ஆகமம் | – | காரண ஆகமம் | |
பழமை | – | 1000வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | ஸ்தூலகர்ணபுரம், சந்திரப்பட்டிணம் | |
ஊர் | – | மானாமதுரை | |
மாவட்டம் | – | சிவகங்கை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இருபத்தேழு நட்சத்திர தேவதையர்களின் கணவனான சந்திரன், ஒரு முறை தனது ஊழ்வினை காரணமாக ரோகிணியின் மீது மட்டும் கூடுதலான அன்பு காட்டிப் பிற மனைவியரைப் புறக்கணித்து வந்தான். இதனால் மற்ற மனைவியர் அனைவரும் மிகுந்த துன்பமுற்று, தம் கணவன் சசோதரி ஒருத்தியிடம் மட்டும் அன்பு காட்டி வருவதை தங்களது தந்தை தட்சனிடம் முறையிட்டனர். இதனால் கடும் கோபங்கொண்ட அவன், தனது தவ வலிமையால் சந்திரனுக்கு சயரோகம் (தொழுநோய்) பீடிக்கும் படி சாபம் கொடுத்தான். இதனால் சந்திரன் சயரோக நோயினால் பாதிக்கப்பட்டு நாள்படப்பட அவனது கலைகள் சிறிது சிறிதாக தேயத்தொடங்கின.
ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில், இடைக்காட்டூர்
அருள்மிகு ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில், இடைக்காட்டூர், சிவகங்கை மாவட்டம்.
+91- 94438 33300
காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை மணி 6 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆழிகண்டீஸ்வரர் (மணிகண்டீஸ்வரர்) | |
அம்மன் | – | சவுந்தர்யநாயகி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | வைகை | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | இடைக்காட்டூர் | |
மாவட்டம் | – | சிவகங்கை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முற்காலத்தில் இத்தலத்தில் நந்தர், யசோதை என்னும் தம்பதியர் வசித்து வந்தனர். அவர்களது மகனாக பிறந்தவர் இடைக்காடர். இல்லறம், துறவறம் என இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதால் இவர், “இடைக்காடர்” எனக் கூறுகின்றனர். அப்படி இருந்தும் எப்படி சித்தர் நிலைக்குச் சென்றார் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.