Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு சாமாண்டியம்மன் திருக்கோயில், சாமாண்டிபுரம்
அருள்மிகு சாமாண்டியம்மன் திருக்கோயில், சாமாண்டிபுரம் – 625 516, கம்பம், தேனி மாவட்டம்.
+91- 99441 16258, 97893 42921 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 8 – மதியம் 1.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சாமாண்டியம்மன் |
தல விருட்சம் | – | மஞ்சள் அரளி, செவ்வரளி |
தீர்த்தம் | – | சுரபி தீர்த்தம் |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன்பு |
ஊர் | – | கம்பம் சாமாண்டிபுரம் |
மாவட்டம் | – | தேனி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முன்னொருகாலத்தில் வளையல்காரர் ஒருவர், இவ்வழியாக வியாபாரம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, இவ்விடத்தில் இருந்த புற்றில் இருந்து ஒரு பெண்ணின் கை மட்டும் வெளியே நீண்டது. வளையல்காரரோ அதிர்ந்து விட்டார். அப்போது,”ஐயா. என் கையில் வளையல் போடுங்கள்” என்று ஒரு அசரீரி ஒலித்தது. பயந்த வளையல்காரர் இங்கிருந்து ஓடிவிட்டார்.
அவர் இவ்வழியாக திரும்பி வரும்போதும், அதேபோலவே கை நீண்டு தனக்கு வளையல் அணிவிக்கும்படி கேட்டது. வளையல்காரரும் பயத்திலேயே கையில் அணிவித்தார். பின் ஊருக்குள் வந்த வளையல்காரர் நடந்ததைக் கூறவே, மக்கள் இங்கு வந்தனர். அப்போது ஒரு பக்தர் வாயிலாக தோன்றிய சாமுண்டீசுவரி, தானே புற்றில் குடியிருப்பதாகக் கூறினாள். எனவே, மக்கள் இங்கு சாமுண்டீசுவரிக்கு கோயில் கட்டினர்.
இத்தலத்தில் அம்பிகை புற்று வடிவில் அருள்பாலிக்கிறாள். இத்தலத்தில் வளையல் பிரசாதமாகத் தரப்படுகிறது. பிரகாரத்தில் விநாயகர், முருகன், கருப்பசாமி, ராக்காச்சி ஆகியோர் இருக்கின்றனர்.
அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில், படவேடு
அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில், படவேடு, திருவண்ணாமலை மாவட்டம்.
+04181 248 224, 248 424 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6.40 பகல் 1மணி, மாலை 3 இரவு 8.30 மணி வரை – வெள்ளி, ஞாயிறு மற்றும் விசேட நாட்களில் தரிசன நேரம் மாறுபடும்.
மூலவர் | – | ரேணுகாம்பாள் |
தல விருட்சம் | – | மாமரம் |
தீர்த்தம் | – | கமண்டலநதி |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன்பு |
ஊர் | – | படவேடு |
மாவட்டம் | – | திருவண்ணாமலை |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ரேணுகாதேவி இரைவத மகாராஜனின் மகளாக பிறந்து ஜமதக்னி முனிவரை மணம் முடித்து பரசுராமரைப் பெற்றெடுக்கிறாள். கற்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவள். கணவரது பூஜைக்கு தனது சக்தியை பயன்படுத்தி, தினமும் ஆற்றுமணலில் செய்த புது பானையால் கமண்டலநதியிலிருந்து தண்ணீர் கொண்டு செல்வது வழக்கம். ஒருமுறை வான்வெளியில் சென்ற கந்தர் வனின் அழகைக் கண்டு ஆச்சரியப்பட்டதால், சக்தியிழந்து ஆற்று மணலில் குடம் செய்ய முடியாமல் போனது. தன் மனைவியின் கற்புத்திறன் மீது சந்தேகம் கொண்ட, ஜமதக்னி முனிவர், தன் மகன் பரசுராமரிடம், தாயைக் கொல்லும்படி ஆணையிட்டார். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதற்கேற்ப பரசுராமரும் தாய் ரேணுகா தேவியை வெட்டினார்.