Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில், கும்பகோணம்
அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில், கும்பகோணம்-612001 தஞ்சாவூர் மாவட்டம்
+91- 94422 26413 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 8 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆதிவராகப்பெருமாள் |
உற்சவர் | – | ஆதிவராகர் |
தாயார் | – | அம்புஜவல்லி |
தீர்த்தம் | – | வராகதீர்த்தம் |
ஆகமம்/பூசை | – | பாஞ்சராத்ரம் |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | கும்பகோணம் |
மாவட்டம் | – | தஞ்சாவூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஒருசமயம் இரண்யாட்சன் என்னும் அசுரன், பூமியை பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். தன்னை மீட்கும்படி, பூமாதேவி திருமாலிடம் வேண்டினாள். திருமால் வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் சென்று பூமியை மீட்டு வந்தார். இவரே இத்தலத்தில் வராகமூர்த்தியாக அருள்புரிகிறார்.
கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா உண்டாவதற்கு முன்பாகவே இவர், இத்தலத்தில் எழுந்தருளியிருந்தார். எனவே இவரை,”ஆதிவராகர்” என்று அழைக்கின்றனர். இவரே இங்குள்ள பெருமாள்களுக்கெல்லாம் முந்தியவர். மாசிமகத்திருவிழாவின்போது, கும்பகோணத்திலுள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, வரதராஜர், ராஜகோபாலர் மற்றும் இத்தலத்து மூர்த்தி ஆகிய ஐவரும் காவிரிக்கரைக்கு தீர்த்த நீராட எழுந்தருளுகின்றனர்.
அருள்மிகு ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில், கல்லிடைக்குறிச்சி
அருள்மிகு ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில், கல்லிடைக்குறிச்சி – 627 416. திருநெல்வேலி மாவட்டம்.
+91- 4634 – 250 302, 94431 59402 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆதிவராகப்பெருமாள் |
உற்சவர் | – | லட்சுமிபதி |
தாயார் | – | பூமாதேவி |
தல விருட்சம் | – | |
தீர்த்தம் | – | தாமிரபரணி |
ஆகமம்/பூசை | – | வைகானஸம் |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | கல்யாணபுரி, திருக்கரந்தை |
ஊர் | – | கல்லிடைக்குறிச்சி |
மாவட்டம் | – | திருநெல்வேலி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
தல வரலாறு:
குபேரன், ஒரு சாப விமோசனத்திற்காக பூலோகம் வந்தான். பல தலங்களில் சிவனை தரிசித்த அவன், பெருமாளை தரிசிக்க விரும்பினான். எனவே, வராகப்பெருமாளுக்கு ஒரு சிலை வடித்து, தாமிரபரணி நதிக்கரையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். காலப்போக்கில் இந்த சுவாமி இருந்த இடம் மறைந்துவிட்டது. ஒருசமயம் இங்கு வசித்த பெருமாள் பக்தர் ஒருவர் கனவில் தோன்றிய சுவாமி, தான் தாமிரபரணி நதிக்கரையில் இத்தலத்தில் இருப்பதாக உணர்த்தினார். அதன்பின் பக்தர் அச்சிலை இருந்ததைக் கண்டார். பின்பு இங்கு கோயில் எழுப்பப்பட்டது.
மூலஸ்தானத்தில் ஆதிவராகர், பத்ம பீடத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது மடியில் அமர்ந்திருக்கும் பூமாதேவி, சுவாமியின் திருமுகத்தை பார்த்தபடி இருக்கிறாள். எப்போதும் தாயாருடன் சேர்ந்து காட்சி தருவதால் சுவாமிக்கு, “நித்ய கல்யாணப்பெருமாள்” என்றும் பெயர் உண்டு. தலத்திற்கும், “கல்யாணபுரி” என்ற புராணப்பெயர் உண்டு. திருமணம் ஆகாதவர்கள் இங்கு உற்சவ மூர்த்திக்கு, திருமஞ்சனம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். இதனால், விரைவில் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.