Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம்
அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம் – 627 401. திருநெல்வேலி மாவட்டம்.
+91- 4634 – 251 445 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 8 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வேணுகோபாலன்(கிருஷ்ணசுவாமி) |
உற்சவர் | – | வேணுகோபாலர் |
தாயார் | – | ருக்மிணி, சத்யபாமா |
தல விருட்சம் | – | பாதிரி, பவளமல்லி |
தீர்த்தம் | – | ஹரிஹரதீர்த்தம் |
ஆகமம்/பூசை | – | பாஞ்சராத்ரம் |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | புன்னைவனக்ஷேத்ரம் |
ஊர் | – | அம்பாசமுத்திரம் |
மாவட்டம் | – | திருநெல்வேலி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சேர மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். பெருமாள் பக்தனான அம்மன்னனுக்கு, சுவாமிக்குத் தனிக்கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஒருசமயம் பெருமாள் அவனது கனவில் தோன்றி, தாமிரபரணி நதிக்கரையில், புன்னை வனத்தைச் சுட்டிக்காட்டி அவ்விடத்தில் தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார். தான் கனவில் கண்டபடியே ருக்மிணி, சத்யபாமாவுடன் வேணுகோபாலருக்கு சிலை வடித்து, இங்கு கோயில் எழுப்பினான். சுவாமிக்கு கிருஷ்ணசுவாமி என்ற பெயரும் உண்டு. இக்கோயில், “கிருஷ்ணன் கோயில்‘ என்றால்தான் தெரியும்.
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், ராமேஸ்வரம்
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், ராமேஸ்வரம் – 623 526. ராமநாதபுரம் மாவட்டம்.
+91-4573 – 221 223, 97912 45363 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 – மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கோதண்டராமர் |
உற்சவர் | – | ராமர் |
தீர்த்தம் | – | ரத்னாகர தீர்த்தம் |
ஆகமம்/பூசை | – | வைகானஸம் |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | கோதண்டம் |
ஊர் | – | ராமேஸ்வரம் |
மாவட்டம் | – | ராமநாதபுரம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
விபீஷணன் தன் சகோதரன் இராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை இராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினான். இராவணன் அவனது கருத்தை ஏற்க மறுத்ததோடு, காலால் எட்டி உதைக்கச் சென்றான். எனவே, விபீஷணன் இராவணனைப் பிரிந்து இராமபிரானிடம் வந்தான். இராமபிரான் இராமேஸ்வரத்தில் தங்கியிருந்ததை அறிந்த அவன் அவரைச் சந்தித்து ஆசிபெற்றான். அவனது நற்குணத்தை அறிந்த ராமன், அவனைத் தனது சகோதரனாக ஏற்றுக்கொண்டார். மேலும், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே முறைப்படி விபீஷணனுக்கு இலங்கை வேந்தனாகப் பட்டாபிஷேகம் செய்து வைத்தார். இந்த நிகழ்வு இத்தலத்தில் நிகழ்ந்ததாக ஐதீகம். இதனடிப்படையில் இங்கு ராமருக்கு கோயில் எழுப்பப்பட்டது. கோதண்டராமர் என்ற திருநாமம் அவருக்குச் சூட்டப்பட்டது.