Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு புன்னை ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில், வனதிருப்பதி, புன்னை நகர்

அருள்மிகு புன்னை ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில், வனதிருப்பதி, புன்னை நகர்– 628 618, குரும்பூர்நாசரேத் வழி, திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்.

+91- 4639- 278 055, 279 077, 94443 96993, 93829 06220 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஸ்ரீனிவாசப்பெருமாள்
உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள்
தாயார் பத்மாவதி தாயார், ஆண்டாள்
தல விருட்சம் புன்னை
தீர்த்தம் சரவணப்பொய்கை
ஆகமம்/பூசை பாஞ்சராத்ரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் புன்னையடி
ஊர் புன்னை நகர்
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

இத்தலம் முன்னொரு காலத்தில் புன்னை மரங்கள் சூழ்ந்த பகுதி. இது, பசுக்கள் மேயும் தலமாக இருந்துள்ளது. இதனாலேயே இத்தலத்தின் புராணப்பெயர் புன்னையடிஎன வழங்கப்பட்டது.


பெருமாளுக்கும் புன்னை மரத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலின் தல விருட்சமே புன்னைமரம் தான். அனைத்து பெருமாள் கோயில்களிலும் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் 9ம் நாள் திருவிழாவில் பெருமாள் புன்னைமர வாகனத்தில் தான் தரிசனம் தருவார். எனவே தான் புன்னை வனமாகிய இத்தலத்தில் கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைப்பதாக பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.

இத்தலம் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அருளாசியின்படி கட்டப்பட்டது. சைவ, வைணவ பேதமின்றி பெருமாளும், சிவனும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
இங்குள்ள ஆதிநாராயணர் கோயில் மிகவும் பழமையானது. அதையும் தற்போது புதுப்பித்து பெரிய கோயிலாக கட்டியுள்ளனர்.
கடலில் பாதி கடம்பா என்பார்கள். இத்தலம் தாமிரபரணி ஆற்றின் கடைசிப்பகுதியில், ஆற்றின் கரையில் முந்திரி சோலை நடுவே மிகவும் ரம்மியமாக அமைந்துள்ளது.

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், திருப்பாற்கடல்

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், திருப்பாற்கடல் போஸ்ட்,காவேரிப்பாக்கம் வாலாஜாபேட்டை தாலுக்கா, வேலூர் மாவட்டம்.

+91 4177 254 929, 94868 77896, 94861 39289

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்
உற்சவர்
தாயார் அலர்மேல் மங்கை
தல விருட்சம் வில்வம்,துளசி
தீர்த்தம் புண்டரீக தீர்த்தம்
ஆகமம்/பூசை வைகானஸம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் நாராயண சதுர்வேதி மங்கலம்
ஊர் திருப்பாற்கடல்
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு

புண்டரீக மகரிஷி பெருமாள் கோயில்களுக்கு யாத்திரை சென்றார். நாராயண சதுர்வேதிமங்கலம் என்னும் தலத்தில் அவர் நுழைந்ததும், அங்கு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தார். பெருமாள் கோயிலுக்கு பதிலாக சிவாலயத்துக்குள் வந்துவிட்டோமே என வெளியே வந்த போது, சிவன் ஒரு முதியவர் வேடத்தில் அங்கு வந்து, ரிஷியே! நீங்கள் உள்ளே சென்று வந்தது பெருமாள் சன்னதி தான், என்றார். ரிஷியோ மறுத்தார். முதியவர் மறுபடியும் ரிஷியை மூலஸ்தானத்திற்குள் அழைத்து சென்று, அங்கிருந்த ஆவுடையின் மேல் ஏறி நின்று பெருமாளாகப் பிரசன்னமாகி தரிசனம் தந்து,”சிவன் வேறு, விஷ்ணு வேறு கிடையாது; இரண்டும் ஒன்று தான்என்றார். அத்துடன், அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் தரிசனம் தந்து,”ரிஷியே! உங்களால் திருப்பாற்கடல் சென்று இந்த மூன்று கோலங்களிலும் தரிசிக்க இயலாது என்பதால் இங்கேயே அந்த தரிசனத்தை தருகிறேன். உங்களுக்கு இந்த மூன்று கோலங்களையும் இங்கு காண்பித்ததால், இத்தலமும் இன்று முதல் திருப்பாற்கடல் என அழைக்கப்படும்என்று அருளினார். புண்டரீக மகரிஷிக்காக, பெருமாள் பிரசன்னமானதால் இங்குள்ள பெருமாள் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆனார். இவளுடன், அலர்மேலு மங்கை தாயார் அருள் செய்கிறாள்.