Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு சுந்தரவரதராஜப்பெருமாள் கோயில், நல்லூர்
அருள்மிகு சுந்தரவரதராஜப்பெருமாள் கோயில், நல்லூர், திருவண்ணாமலை மாவட்டம்
திறக்கும் நேரம்: காலை 8 – 12மணி, மாலை 4 – 8 மணி.
முன்னொரு காலத்தில் தலயாத்திரை சென்ற அந்தணர்கள் சிலர் இங்கு தங்கினர். தாங்கள் கொண்டு வந்திருந்த பெருமாள் சிலையை வைத்து பூஜை செய்தனர். மறுநாள் அவர்கள் கிளம்பியபோது, இவ்விடத்தில் இருந்து சிலையை எடுக்க முடியவில்லை. அப்போது மகாவிஷ்ணு காட்சிகொடுத்து, தான் இத்தலத்தில் தங்க விரும்புவதாகக் கூறினார். அந்தணர்கள் மகிழ்ச்சியுடன், இங்கு கோயில் எழுப்பினர். நாளடைவில் இந்தக் கோயில் பாழடையவே, பிற்காலத்தில் புதிய கோயில் கட்டப்பட்டது. சுவாமி காண்போரை வசீகரிக்கும் அழகுடன் காட்சியளிப்பதால், “சுந்தர வரதராஜர்” என்று அழைக்கப்படுகிறார்.
பெருமாள் எதிரே, கருடாழ்வார் வணங்கியபடிதான் பார்த்திருப்பீர்கள். அரிதாக, ஸ்ரீவில்லிப்புத்தூர் போன்ற ஒரு சில தலங்களில் சுவாமியின் அருகில் அவர் இருக்கிறார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகிலுள்ள நல்லூர் சுந்தரவரதராஜப்பெருமாள் கோயிலில் கருடாழ்வார், பெருமாளின் திருவடியின் கீழ் அமர்ந்து, வணங்கிய கோலத்தில் உள்ளார்.
அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயில், வேம்பத்தூர்
அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயில், வேம்பத்தூர் – 630 565. சிவகங்கை மாவட்டம்.
+91- 4575- 236 284, +91-4575-236 337 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் |
தாயார் | – | பூமிநீளா (உற்சவர்: ஸ்ரீதேவி,பூதேவி) |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | வேம்பத்தூர் |
மாவட்டம் | – | சிவகங்கை |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முன்னொரு காலத்தில் குலசேகரபாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்ட போது, கடும் வறட்சி ஏற்பட்டது. இவன் சோழ இளவரசியைத் திருமணம் செய்திருந்தான். சோழநாட்டில் நீர் நிறைந்து பயிர் விளைந்து செழிப்பாக இருக்கும் பூமியைப் பார்த்து ஆச்சரியப்பட்டான் பாண்டியன். இவன் தன் மாமனாரிடம்,”எங்கள் நாட்டில் ஏற்பட்ட வறட்சி நீங்க என்ன செய்ய வேண்டும்?” என்றான். “காசியிலிருந்து 2008 அந்தணர்களை அழைத்து வந்து உன் நாட்டில் யாகம் செய்தால் மழை பொழியும். பயிர் செழிக்கும்” என்றார் சோழன். யாகம் நடத்த 2008 அந்தணர்கள் குடும்பத்துடன் வந்தனர். யாகம் சிறப்பாக நடந்து மழை பொழிந்தது. விளைச்சல் பெருகியது. மன்னனுக்கு அளவில்லாத ஆனந்தம். யாகம் செய்த அந்தணர்களுக்கு அவர்களது பெயரிலேயே நிலம் கொடுத்து இங்கேயே தங்க ஏற்பாடு செய்தான். நிலப்பட்டா கொடுக்கும் போது, 2007 அந்தணர்கள் வந்து விட்டனர். 2008வது அந்தணரான கணபதி என்பவரை மட்டும் காணவில்லை. மன்னனுக்கு வருத்தம். என்ன செய்வதென்று தெரியவில்லை. சிறிது நேரத்தில் அந்த முழு முதற்கடவுளான விநாயகரே, அந்தணர் வடிவில் நேரில் வந்து,”நான் தான் கணபதி” என்று கூறி நிலத்தைப் பெற்றுக்கொண்டார். அப்படிப் பெற்றுக்கொண்ட நிலம் தான் வேம்பத்தூர். இந்த கணபதி ஊரின் குளக்கரையில் இன்றும் “2008 கணபதி” என்ற பெயரில் வீற்றிருந்து வேதம் சொல்லி தருவதாக ஐதீகம்.
இங்குள்ள மக்களில் பலர் பண்டிதர்களாகவும், ஆகம சாஸ்திரங்களிலும், மருத்துவத்திலும் வல்லுனர்களாகவும் விளங்குகிறார்கள்.