Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர்
அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர் – 686 109. ஆழப்புழை மாவட்டம், கேரளா மாநிலம்.
+91- 94461 93002 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 4.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பாம்பணையப்பன் (கமலநாதன்) |
தாயார் | – | கமலவல்லி நாச்சியார் |
தீர்த்தம் | – | பம்பை தீர்த்தம் |
ஆகமம்/பூசை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | திருவண்வண்டூர் |
மாவட்டம் | – | ஆழப்புழா |
மாநிலம் | – | கேரளா |
ஒரு முறை பிரம்மனுக்கும் நாரதருக்கும் வாக்குவாதம் உண்டாகிறது. இதில் நாரதனை பிரம்மா சபித்து விடுகிறார். இதனால் வருத்தமடைந்த நாரதர் பிரம்மனை விட்டுப் பிரிந்து இத்தலம் வந்து பெருமாளை நோக்கி கடும் தவம் புரிந்து, சகல சிருஷ்டிகளையும் பற்றிய தத்துவ ஞானத்தை தனக்கு போதிக்க வேண்டுமென வேண்டுகிறார். இவரது தவத்தால் மகிழ்ந்த பெருமாள் வேண்டிய வரம் தந்தருளினார். எனவே பெருமாளே அனைத்தும் என்றும், அவரை வழிபடும் முறை மற்றும் துதிப்பாடல்கள் அடங்கியதாக நாலாயிரம் அடிகள் கொண்ட “நாரதீய புராணம்” என்ற நூலை இத்தலத்தில் நாரதர் அருளியதாக வரலாறு கூறுகிறது.
அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில், திருப்புலியூர் (குட்டநாடு)
அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில், திருப்புலியூர் (குட்டநாடு) – 689 510, ஆழப்புழா மாவட்டம் கேரளா மாநிலம்.
+91- 94478 00291 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மாயப்பிரான் |
தாயார் | – | பொற்கொடி நாச்சியார் |
தீர்த்தம் | – | பிரக்ஞாசரஸ் தீர்த்தம் |
பழமை | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | திருப்புலியூர் (குட்டநாடு) |
மாவட்டம் | – | ஆழப்புழா |
மாநிலம் | – | கேரளா |
ஒரு முறை சிபிச்சக்கரவர்த்தியின் மகனான விருஷாதர்பி என்பவன் இப்பகுதியை அரசாண்டு வந்தான். அப்போது அவனுக்கு ஏதோ ஒரு சாபத்தினால் கடுமையான நோய் உண்டானது. அத்துடன் அவனது நாட்டில் கொடிய வறுமையும் ஏற்பட்டது. அச்சமயம் இந்த நாட்டிற்கு சப்தரிஷிகள் வருகை புரிந்தனர். அவர்களிடம் மன்னன், தனக்கும் தன் நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பெரிய ஆபத்தை போக்கினால்தான், தன்னால் தானம் ஏதும் கொடுக்க முடியும் என கூறினான். தானம் என்ற சொல்லைக்கேட்ட ரிஷிகள் கோபத்துடன்,”மன்னா! உன் போன்ற மன்னர்களிடம் தானம் பெறுவது மிகப்பெரிய பாவமாகும்” என மறுத்துவிட்டனர். ஆனாலும் மன்னன் ரிஷிகளுக்கு கொடுப்பதற்காக மந்திரிகள் மூலம் தங்கத்தையும், பழங்களையும் அனுப்பி வைத்தான். இதையும் முனிவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். ரிஷிகளின் இந்த செயலால் மன்னன் கோபமடைந்தான். மாபெரும் யாகம் ஒன்றை நடத்தி அதில் தோன்றிய தேவதையை, சப்தரிஷிகளை கொல்வதற்காக அனுப்பி வைத்தான். இதனையறிந்த ரிஷிகள் தங்களை காக்க மகாவிஷ்ணுவை வேண்டினர்.