Category Archives: ஆலயங்கள்
அருள் மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில்
அருள் மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில்– 625 301, மதுரை மாவட்டம்.
+91 – 452-247 0228, 247 0229 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பரமஸ்வாமி |
உற்சவர் | – | சுந்தர்ராஜப் பெருமாள்( ரிஷபத்ரிநாதர்), கல்யாணசுந்தர வல்லி |
தாயார் | – | ஸ்ரீதேவி, பூதேவி |
தல விருட்சம் | – | ஜோதி விருட்சம், சந்தனமரம் |
தீர்த்தம் | – | நூபுர கங்கை |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருமாலிருஞ்சோலை |
ஊர் | – | அழகர்கோவில் |
மாவட்டம் | – | மதுரை |
மாநிலம் | – | தமிழ்நாடு |
எமதர்ம ராஜனுக்கு சாபம் ஏற்பட்டது. இச்சாபத்தை போக்க பூலோகத்தில் விருசுபகிரி(கோயில் இருக்கும் அழகர் மலை) என்னும் இம்மலையில் தபசுசெய்தார். இம்மலை 7 மலைகளை கொண்டது.
எமதர்மராஜனின் தபசை மெச்சிப் பெருமாள் காட்சிதந்தார். இறைவனின் கருணையைப் போற்றும் விதமாக எமதர்மராஜன் பெருமாளிடம் தினந்தோறும் உன்னை ஒரு முறையாகிலும் பூஜை செய்ய வரம் தர வேண்டும் என்று கேட்டார். அதன்படியே பெருமாளும் வரம் தர, இன்றும் இக்கோயிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எமதர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம். எல்லா மக்களுக்கும் அருள் தருமாறு வேண்டிய, எமதர்ம ராஜன் விருப்பத்தின் பேரில் விஸ்வகர்மாவினால் சோமசந்த விமானம்(வட்ட வடிவ) உள்ள கோயில் கட்டப்பட்டது.
அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில், திருமோகூர்
அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில், திருமோகூர்-625 107, மதுரை மாவட்டம்.
+91- 452- 2423 444, 98654 17902 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் காலை 5.30 மணிக்கு திறக்கப்படும்.
மூலவர் | – | காளமேகப்பெருமாள் |
உற்சவர் | – | திருமோகூர் ஆப்தன் |
தாயார் | – | மோகனவல்லி |
தல விருட்சம் | – | வில்வம் |
தீர்த்தம் | – | தாளதாமரை புஷ்கரிணி, பாற்கடல் தீர்த்தம் |
ஆகமம்/பூசை | – | பாஞ்சராத்ரம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | மோகன க்ஷேத்ரம் |
ஊர் | – | திருமோகூர் |
மாவட்டம் | – | மதுரை |
மாநிலம் | – | தமிழ்நாடு |
யானை மலையின் நீளம் சுமார் 3 km. இந்த மலையின் முகப்பு யானையின் வடிவத்தை ஒத்துள்ளது.
பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் தேவர்கள், அசுரர்களுக்கிடையே சர்ச்சை உண்டானது. தங்களுக்கு உதவும்படி தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சுவாமி, மோகினி வேடத்தில் வந்தார். அசுரர்கள் அவரது அழகில் மயங்கியிருந்த வேளையில், தேவர்களுக்கு அமுதத்தைப் பரிமாறினார். இதனால் பலம் பெற்ற தேவர்கள், அசுரர்களை ஒடுக்கி வைத்தனர். பாற்கடலில் அமிர்தம் கடையும் போது அதிலிருந்து ஒரு துளி அமிர்தம் இக்கோயிலில் உள்ள குளத்தில் விழுந்ததால், இக்கோயில் குளத்திற்கு பெரிய திருப்பாற்கடல், சிறிய திருப்பாற்கடல் என்ற பெயர் உண்டானது.