Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், திருநாகேஸ்வரம்

அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், திருநாகேஸ்வரம், கும்பகோணம் – 612 204. தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435 – 246 3385, 246 3685 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்    –    ஒப்பிலியப்பன்(திருவிண்ணகரப்பன்)
உற்சவர்    –    பொன்னப்பன்
தாயார்    –    பூமாதேவி
தீர்த்தம்    –    அஹோத்ரபுஷ்கரணி
ஆகமம்    –    வைகானஸம்
பழமை    –    1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்    –    திருவிண்ணகரம்
ஊர்    –    திருநாகேஸ்வரம்
மாவட்டம்    –    தஞ்சாவூர்
மாநிலம்    –    தமிழ்நாடு


மகாவிஷ்ணுவின் மனைவியும், இலட்சுமியின் ஒரு அம்சமுமான பூமாதேவி, விஷ்ணுவிடம், “எப்போதும் மகாலட்சுமியை மட்டும் மார்பில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அந்த பாக்கியத்தை தாருங்கள்” என்று கேட்டாள். மகாவிஷ்ணு அவளிடம்,”நீ பூலோகத்தில் ஒரு ரிஷியின் மகளாக, திருத்துழாய்(துளசி) என்ற பெயரில் பிறந்து இந்த பேற்றைப் பெறுவாய்” என்றார்.

இச்சமயத்தில், என்றும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேய மகரிஷி, மகாலட்சுமியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டி தவமிருந்தார். இலட்சுமியின் அம்சமான பூமாதேவி, குழந்தை வடிவில் ஒரு துளசிச்செடிக்கு கீழே கிடப்பதைக் கண்டார். தன் ஞானதிருஷ்டியால் அவள் இலட்சுமியின் அம்சம் என்பதை அறிந்து, துளசி எனப் பெயர்சூட்டி வளர்த்து வந்தார். திருமண வயது வந்த போது, திருமால், ஒரு முதியவர் வேடத்தில் சென்று அவரிடம் பெண் கேட்டார். மார்க்கண்டேயர் சம்மதிக்கவில்லை.

அருள்மிகு நீலமேகப்பெருமாள் கோயில் (மாமணிக்கோயில்), தஞ்சாவூர்

அருள்மிகு நீலமேகப்பெருமாள் கோயில் (மாமணிக்கோயில்), தஞ்சாவூர் – 613 003.

+91- 4362 – 223 384 (மாற்றங்களுக்குட்பட்டது)

வீரநரசிம்ம பெருமாள் கோயில் காலை 7 – 12 மணி, மாலை 5 – 8.30 மணி வரையில் திறந்திருக்கும்.    மற்ற இரண்டு கோயில்களுக்கு செல்ல இங்கிருந்து அர்ச்சகரை அழைத்துச் செல்லவேண்டும்.

மூலவர் நீலமேகர், வீரநரசிம்மர், மணிகுன்றர்
உற்சவர் நாராயணர்
தாயார் செங்கமலவல்லி, தஞ்சைநாயகி, அம்புஜவல்லி
தல விருட்சம் மகிழமரம்
தீர்த்தம் அமிர்த தீர்த்தம்
ஆகமம் வைகானஸம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தஞ்சமாபுரி
ஊர் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

பராசரர் எனும் மகரிஷி பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை, மணிமுக்தா நதியில் இட்டு அதன் கரையில் ஆசிரமம் அமைத்து, தவம் செய்து வந்தார். அப்போது சிவனிடம் சாகாவரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் எனும் மூன்று கொடிய அசுரர்கள் பராசரரையும், அவருடன் தவம் செய்து வந்த முனிவர்களையும் தொல்லை செய்தனர். பராசரர் அவர்களிடம் அசுர குணங்களை விட்டுவிடும்படி சொல்லிப் பார்த்தார். அவர்களோ கேட்பதாக இல்லை. எனவே அசுரர்களை அழிக்கும்படி சிவனிடம் வேண்டினார் பராசரர். சிவன் மாயா சக்தியாக காளிதேவியை அனுப்பி அசுரர்களை வதம் செய்தார். ஆனால், அசுரர்கள் மூவரும் அமிர்தம் கலந்திருந்த தீர்த்தத்தை பருகி மீண்டும், மீண்டும் உயிர் பெற்று முனிவர்களை கொடுமைப்படுத்தினர்.