Category Archives: ஆலயங்கள்
ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மானந்தகுடி
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மானந்தகுடி, திருவாரூர் மாவட்டம்.
+91- 4366 239389
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஏகாம்பரேஸ்வரர் | |
உற்சவர் | – | சந்திரசேகரர் | |
அம்மன் | – | காமாட்சி | |
தீர்த்தம் | – | அனுமன் தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | மானந்தகுடி | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
கார்த்தவீரியன் எனும் பக்தன் ஒருவன் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தான். ஒருசமயம் அவன் சிவபூஜை செய்து கொண்டிருந்தபோது, ஆஞ்சநேயர் அவனது பூஜைக்கு தொந்தரவு செய்தார். இதனால் கோபமடைந்த கார்த்தவீரியன், ஆஞ்சநேயரை சபித்து விட்டான். தவறை உணர்ந்த ஆஞ்சநேயர், விமோசனம் வேண்டி இத்தலத்திற்கு வந்தார். சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவன் அவருக்கு அம்பிகையுடன் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தருளினார். அந்த மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடினார் ஆஞ்சநேயர். எனவே இத்தலம் “அனுமன் ஆனந்த குடி” என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் “மானந்தகுடி” என்று மருவியது.
ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், செட்டிகுளம்
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், செட்டிகுளம், பெரம்பலூர் மாவட்டம்.
+9144 2742 0836, 99441 17450, 99768 42058
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஏகாம்பரேஸ்வரர் | |
அம்மன் | – | காமாட்சி அம்மன் | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | பிரம்ம தீர்த்தம் | |
ஊர் | – | செட்டிகுளம் | |
மாவட்டம் | – | பெரம்பலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முன்னொறு காலத்தில் கடம்ப வனமாக இந்த ஊர் இருந்திருக்கிறது. வணிகன் ஒருவன் இக்கடம்பவனத்தில் இரவு நேரத்தில் தங்க நேர்ந்தது. அப்போது நள்ளிரவில் திடீரென்று அவன் கண்ணெதிரில் ஓர் ஒளி மிகுந்த தீப்பிழம்பும் அத்தீம்பிழம்பின் நடுவே ஒர் சிவலிங்கமும் தோன்றி தேவர்களும் முனிவர்களும் வழிபடுகின்ற காட்சி பளிச்சென்று தோன்றி மறைந்தது. இந்த காட்சியைக் கண்ட வணிகன் மயிர்கூச்செறிந்து சோழமன்னனிடம் தெரிவித்தான். சோழனின் அரண்மனையில் விருந்தினராய் தங்கியிருந்த குலசேகர பாண்டியன் இதை கேள்வியுற்று பாண்டியனும் சோழனும் அந்த இடத்தை சென்றடைந்தனர்.