Category Archives: ஆலயங்கள்
காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில், ஆறகழூர்
அருள்மிகு காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில், ஆறகழூர், சேலம் மாவட்டம்.
+91- 94430 24649
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | காயநிர்மாலேஸ்வரர் , காமநாதீஸ்வரர் | |
அம்மன் | – | பெரியநாயகி | |
தல விருட்சம் | – | மகிழம் | |
தீர்த்தம் | – | அக்னி தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | அகழியூர் | |
ஊர் | – | ஆறகழூர் | |
மாவட்டம் | – | சேலம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிவதல யாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவர் பிரதிஷ்டை செய்த இலிங்கத்தில் ஜோதி வடிவாக அமர்ந்தார் சிவன். காலப்போக்கில் இந்த இலிங்கம் மண்ணில் புதைந்தது.
காசிநாதசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம்
அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.
+91- 4634 – 253 921, +91- 98423 31372
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணிமுதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | காசிநாதசுவாமி (காசிபநாதர்), எரித்தாட்கொண்டார் |
அம்மன் | – | மரகதாம்பிகை |
தல விருட்சம் | – | நெல்லி |
தீர்த்தம் | – | தாமிரபரணி |
ஆகமம் | – | சிவாகமம் |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | அம்பாள்சமுத்திரம் |
ஊர் | – | அம்பாசமுத்திரம் |
மாவட்டம் | – | திருநெல்வேலி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஒருசமயம் காசிப முனிவர் சிவனை வேண்டி, ஒரு யாகம் நடத்தினார். சிவன் அவருக்கு காட்சி தந்தார். அவரிடம் காசிபர், தனக்கு பூஜை செய்ய இலிங்க வடிவம் வேண்டுமென்றார். அவரது வேண்டுதலை ஏற்ற சிவன், அப்படியே சிவலிங்கமாக மாறினார். அந்த இலிங்கத்தை காசிபர் இங்கு பிரதிஷ்டை செய்து, வழிபட்டார். காசிபரால் பூஜிக்கப்பட்டவர் என்பதால் சுவாமி, “காசிபநாதர்” என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இப்பெயர், “காசிநாதர்” என மருவியது.