Category Archives: ஆலயங்கள்
வியாபாரம் விருத்தி அடைய
வியாபாரம் விருத்தி அடைய
இன்று செய்யும் தொழிலில் எந்த வகையில் செலவுகளை குறைக்க முடியும்; விற்பனையை கூட்ட இன்னும் என்ன வழி உள்ளது என்று எண்ணிப்பார். தொழில் சார்ந்த சிந்தனையிலேயே இரு. சரியான முடிவுக்கு வந்தவுடன் அதை உடனே செயல்படுத்து. கூடவே உனது தொழில் நண்பர்களை நன்கு கவனித்துவா. அவர்கள் வளர்ச்சி பெறுவது எதனால் என்பதைக் கண்டு பிடி. வெற்றி நிச்சயம். அப்போது உனக்கு இன்னும் பல வகையில் யோசனைகள் தோன்றும். வழி தான்னாலே பிறக்கும்.
இன்றைய விளம்பர உலகில் காய்கறிக் கடைக்குக் கூட இன்டர்நெட்டில் விளம்பரம் செய்யத்துவங்கி உள்ளனர். ஆகவே உனது தொழிலைப் பற்றி உன்னால் முடிந்த அளவு விளம்பரம் செய். சமீபத்தில் ஒரு பெண் தொழிலதிபர் கூறுகிறார். “வண்டிக்கு பெட்ரோல் போன்றது விளம்பரம். பெட்ரோல் இல்லா விட்டால் எப்படி வண்டி பாதியில் நின்று போகுமோ அதுபோல, எனது பொருள் எவ்வளவு தான் மார்க்கெட்டில் விற்பனையானாலும் விளம்பரத்தை நிறுத்திவிட்டால் விற்பனை சிறுத்து, தொழில் நின்று விடும்” என்றாராம். உன்னால் முடிந்த அளவு உனக்கு தெரிந்த வழிகளில் விளம்பரம் செய்.
உங்கள் அணுகுமுறையில் கோளாறு இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். நீங்கள் விற்கும் பொருள் குத்துவிளக்காக இருந்தால் விரைவில் உடையாது; அதுவே அரிசியாக இருந்தால் தீர்ந்தவுடன் வாங்கியாகவேண்டிய கட்டாயம் உள்ளது. தொழில் ஆரம்பிக்குமுன் தொழிலைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில் நுணுக்கங்களை விரைவில் தெரிந்து கொள்ளவேண்டும். மின் விளக்குகள் வந்துவிட்ட இக்காலத்தில் மண்ணெண்ணய் விளக்கு விற்றால் எப்படி வியாபாரம் பெருகும். காலத்திற்கு ஏற்ற பொருளை விற்கவேண்டும்.
இன்று எல்லாத் துறைகளுமே போட்டியில்தான் நடைபெறுகிறது. போட்டியில்லாவிட்டால் பொறுப்பு இருக்காது. போட்டி இல்லாவிட்டால் பொருளில் தரம் இருக்காது. அதைவிட போட்டி இல்லாவிட்டால் தொழில் வளர்ச்சி இருக்காது.
போட்டிநிலை கண்டு கலங்காமல், உனது தொழிலையும் மாற்றிக்கொள்ளாமல் இன்று செய்யும் தொழிலைச் சார்ந்த இன்னொன்றை ஆரம்பித்துக்கொள். அதனால் உனக்கு இன்னும் பயன் கூடும். பாதுகாப்பாகவும் இருக்கும்.
நோக்கு(பார்வை) எப்படியிருக்கிறதோ அதற்குத் தக்கபடி எண்ணங்கள் மாறும். வியாபாரத்தில் வித்தியாசமான கோணத்தில் உத்திகளைக் கையாண்டு பாருங்கள்.
பில்லி, சூனியம் ஆகியவற்றில் நம்பிக்கை வைத்து கைப்பொருளை இழக்காதீர்கள்.
அத்துடன் இயன்றால் கீழ்கண்ட ஆலயங்கள் சென்று இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்.
அட்டாள சொக்கநாதர் | மேலப்பெருங்கரை | இராமநாதபுரம் |
சந்திரசேகரர் | அத்தாணி | ஈரோடு |
பத்திரகாளி அம்மன் | அந்தியூர் | ஈரோடு |
திருக்காலடியப்பன் | காலடி | எர்ணாகுளம் |
கள்வப்பெருமாள் | திருக்கள்வனூர் | காஞ்சிபுரம் |
சக்குளத்துக்காவு |
கோட்டயம் |
|
கோயம்புத்தூர் |
கோயம்புத்தூர் |
|
கோயம்புத்தூர் |
கோயம்புத்தூர் |
|
இரத்தினகிரி முருகன் |
சரவணம்பட்டி |
கோயம்புத்தூர் |
செஞ்சேரி |
கோயம்புத்தூர் |
|
விநாயகர் | ஈச்சனாரி | கோயம்புத்தூர் |
வெங்கடேசப்பெருமாள் | மொண்டிபாளைம் | கோயம்புத்தூர் |
ஆட்கொண்டநாதர் | இரணியூர் | சிவகங்கை |
பத்திர காளியம்மன் | மடப்புரம் | சிவகங்கை |
வடபழநி ஆண்டவர் | வடபழநி | சென்னை |
கைலாசநாதர் | தாரமங்கலம் | சேலம் |
அய்யாவாடி |
தஞ்சாவூர் |
|
ஆபத்சகாயேஸ்வரர் | ஆடுதுறை | தஞ்சாவூர் |
வில்வ வனேஸ்வரர் | திருவைகாவூர் | தஞ்சாவூர் |
பிரம்மன் | கும்பகோணம் | தஞ்சாவூர் |
சௌந்தர்ராஜப் பெருமாள் | தாடிக்கொம்பு |
திண்டுக்கல் |
பஞ்சவர்ணேஸ்வரர் | உறையூர் | திருச்சி |
சமயபுரம் |
திருச்சி |
|
பிரம்மபுரீஸ்வரர் | திருப்பட்டூர் | திருச்சி |
உச்சிப்பிள்ளையார் | மலைக்கோட்டை | திருச்சி |
அம்மநாதர் | சேரன்மகாதேவி | திருநெல்வேலி |
மிளகு பிள்ளையார் | சேரன்மகாதேவி | திருநெல்வேலி |
கைலாசநாத சுவாமி | பிரம்மதேசம் | திருநெல்வேலி |
வெங்கடாசலபதி (தென்திருப்பதி) | மேலத்திருவேங்கட
நாதபுரம் |
திருநெல்வேலி |
புருஷோத்தமப்பெருமாள் | அம்பாசமுத்திரம் | திருநெல்வேலி |
கிருஷ்ணாபுரம் |
திருநெல்வேலி |
|
இராஜகோபால சுவாமி | மன்னார்கோயில் | திருநெல்வேலி |
இராமச்சந்திரப் பெருமாள் | நெடுங்குன்றம் | திருவண்ணாமலை |
மல்லிகார்ஜுனசுவாமி | பர்வதமலை, கடலாடி | திருவண்ணாமலை |
கனககிரீசுவரர் | தேவிகாபுரம் | திருவண்ணாமலை |
காயாமொழி |
தூத்துக்குடி |
|
குலசேகரன்பட்டினம் |
தூத்துக்குடி |
|
திருமலைராயப்பெருமாள் | கோம்பை | தேனி |
சனீஸ்வர பகவான் | குச்சனூர் | தேனி |
கூடல் அழகிய பெருமாள் | கூடலூர் | தேனி |
வீரட்டேஸ்வரர் | கொருக்கை | நாகப்பட்டினம் |
வீரட்டேஸ்வரர் | வழுவூர் | நாகப்பட்டினம் |
திருமறைக்காடர் | வேதாரண்யம் | நாகப்பட்டினம் |
கல்யாணராமர் | மீமிசல் | புதுக்கோட்டை |
மொரட்டாண்டி |
புதுச்சேரி |
|
தண்டாயுதபாணி | செட்டிகுளம் | பெரம்பலூர் |
கள்ளழகர் | அழகர்கோவில் | மதுரை |
யோக நரசிம்மர் | ஒத்தக்கடை, மதுரை | மதுரை |
மீனாட்சி சொக்கநாதர் | கோச்சடை | மதுரை |
சோழவந்தான் |
மதுரை |
|
திருமறைநாதர் | திருவாதவூர் | மதுரை |
பரவை |
மதுரை |
|
வீரராகவப்பெருமாள் | மதுரை | மதுரை |
வேணுகோபால சுவாமி | குராயூர் – கள்ளிக்குடி | மதுரை |
வடபத்ரசாயி(ஆண்டாள்) | ஸ்ரீ வில்லிபுத்தூர் | விருதுநகர் |
காசிவிஸ்வநாதர் | சிவகாசி | விருதுநகர் |
ஸ்ரீநிவாசப்பெருமாள் | திருவண்ணாமலை | விருதுநகர் |
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் | பாதூர் | விழுப்புரம் |
ரிஷபபுரீஸ்வரர் | மேல் சேவூர் | விழுப்புரம் |
வாஸ்து குறைபாடு நீங்க
வாஸ்து குறைபாடு நீங்க
வாழ்க்கை வளமாக அமைய வாஸ்து சாஸ்திரம், நமக்கு வழிகாட்டுகிறது. வாஸ்து முறையுடன் அமைந்த வீட்டில் அமைதியும், அன்பும், செல்வமும் பொங்கி வழியும். இங்கு முக்கியமான மூலைகளான ஈசான மூலை, அக்னி மூலை, குபேர மூலை, நிருதி ஆகிய மூலைகளில் இருக்கவேண்டிய, இருக்கக்கூடாத பொருட்களைப்பற்றிப் பார்ப்போம்.
ஈசான மூலை (வடகிழக்கு) வழியே சகலசௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது, எனவே இம்மூலையை சுத்தமாக வைக்க வேண்டும். ஈசான மூலையில் பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை, வயதுமுதிர்ந்தவர்களின் படுக்கையறைகளை அமைக்கலாம். ஈசான மூலையை அடைப்பதுபோல் நிலைப்பேழை வைக்கக்கூடாது. அம்மி, ஆட்டுக்கல், விறகு சுமை, தேவையற்ற பழைய பொருட்களையும் அடைத்து வைக்கலாகாது.
வீட்டின் பிரதான ஈசான மூலையில் கழிப்பறை, குளியலறை, செப்டிக்டேங்க், துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது. பரணில் ஈசான மூலையில் பொருட்களை வைக்கக்கூடாது.
வீட்டின் ஈசான மூலை கீழ்நிலைத் தொட்டி, கிணறு போன்றவை அமைக்க வேண்டிய இடம். ஈசான மூலையில் நீரோட்டம் இல்லாத போது, தென்மேற்கு, தென்கிழக்கு தவிர்த்து கிணறு தோண்டவும். பிறகு ஈசான மூலையில் கீழ்நிலைத் தொட்டி அமைக்கவும்.
அக்னி மூலை– தென்கிழக்கு மூலை. இங்கு சமையற்கூடம் இருக்க வேண்டும். பெண்களின் மன, உடல் நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் மூலை ஆதலால் பழுதில்லாமல் அமைக்க வேண்டும். வீட்டின் பிரதான அக்னி மூலையில் சமையற்கூடம் அமைக்க இயலா விடினும் சமையற்கட்டின் அக்னி மூலையில் அடுப்பு (மண்ணெண்ணை, எரிவாயு போன்றவை) இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். விதிவிலக்காக வாயு (வடமேற்கு) மூலையில் சமையற்கூடமும், அடுப்பும் அமைக்கலாம். அக்னி மூலையில் குடிநீர், நிலைப்பேழை, கழிப்பறை, குளியலறை, இருக்கக்கூடாது. வீட்டின் பிரதான அக்னி மூலையில் கிணறு, கழிப்பறை, குளியலறை, கழிவுத் தொட்டி,(செப்டிக்டேங்க்) துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது. வீட்டின் அக்னி மூலையில் மின்சாதனங்களை வைக்கலாம்.
செல்வம் தங்கவும், பணவிருத்திக்கும் குபேர(வடக்கு) மூலை, நிருதி (தென்மேற்கு)மூலையில் பணப்பெட்டி, நிலைப்பேழை வைக்கவும். சுவற்றில் பணப்பெட்டியை பதிப்பதாயின் நிருதியில் பதிக்கவும். வீதியைப்பார்த்துத் தான் வாயிற்படியை அமைக்க முடியும். எனவே, தெற்கு, மேற்கு வாயிற்படிகள் தவிர்க்க முடியாதவைகளே. தெற்கு, மேற்கு திசையில் தலைவாயில் அமைக்கும்படி நேரினும், ஈசானமூலை, அக்னிமூலையை சரியாக அமைத்துக் கொண்டால் போதும். தெற்கு, மேற்கு தலைவாயில் அமைந்த வீட்டின் கொல்லைப்புறமாக ஈசான,
அக்னி மூலைகள் அமைவதை கவனிக்கவும்.
கழிப்பறை,குளியல் அறைகளை வடமேற்கு (வாயு) மூலையில் அமைக்கவும். நிருதியில்(தென்மேற்கில்) படுக்கையறையை ஒட்டி கழிப்பறை அமைக்கலாம்.
கழிவுத்தொட்டி கண்டிப்பாக வடமேற்கில் தான் இருக்க வேண்டும். சில இடங்களில் விதிவிலக்காக இந்திரன் (கிழக்கில்) மூலையில் கழிப்பறை அமைக்கலாம். பொதுவாக வீட்டில் எந்த இடங்களில் எடைமிக்க பொருட்களை வைக்கலாம் என்பதற்கும் நியதி உண்டு.
- சுபதினம்
இதுபோல 10008 வகை கண்டிஷன்கள். இதில் ஏதவதொன்று சரியாக அமையாவிடில் போச்சு. வாஸ்து சாத்திரக்கரர்கள் “அதனால்தான் உங்கள் வீட்டில் இப்படியெல்லாம் கெட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பரிகாரம் செய்யவேண்டும். நான் வந்து பார்க்கக் கட்டணம் இவ்வளவு; பரிகாரம் செய்யக் கட்டணம் இவ்வளவு; என்று காசைக் கரந்துவிடுவார்கள்.” எச்சரிக்கை.
மனையடி சாஸ்திரம் புத்தகம் வாங்குங்கள். முடிந்தவரை அதில் சொல்லியபடி வீடு கட்டுங்கள். அதில் கோளாறு; இதில் கோளாறு என்று சொல்லுபவர்களின் சொற்களைக் காதில் வாங்காதீர்கள். வாழ்வில் நல்லதும் நடக்கும்; கெட்டதும் நடக்கும். வாஸ்து சரியில்லாததால்தான் கெட்டது நடக்கிறது என நம்பாதீர்கள்.
இறைநம்பிக்கை இருப்பின் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று வேண்டிக்கொள்ளுங்கள்.
அக்னிபுரீஸ்வரர் | அன்னியூர் | திருவாரூர் |
அக்னிபுரீஸ்வரர் | திருப்புகலூர் | திருவாரூர் |
மகாலிங்கேஸ்வரர் | விராலிப்பட்டி | திண்டுக்கல் |
பூமிநாதர் | மண்ணச்சநல்லூர் | திருச்சி |