Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு சிவசுப்பிரமணியசாமி திருக்கோயில், வில்லுடையான் பட்டு
அருள்மிகு சிவசுப்பிரமணியசாமி திருக்கோயில், வில்லுடையான் பட்டு, கடலூர் மாவட்டம் .
+91-94434 45055 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
சிவசுப்பிரமணியர் |
|
அம்மன் | – |
வள்ளி, தெய்வானை |
|
தலவிருட்சம் | – |
வன்னிமரம் |
|
தீர்த்தம் | – |
கோயிலுக்கு எதிரில் உள்ள குளம் |
|
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – |
வில்லுடையான் பட்டு |
|
மாவட்டம் | – | கடலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சில யுகங்களுக்கு முன்பு காடாக இருந்த இந்தப் பகுதியில் தேவர்களும், ரிஷிகளும் தவம் செய்தனர். அவர்களின் தவத்தைக் காக்க முருகன் வில்லேந்தி காவல் காத்தார். அதாவது, சூரசம்காரத்தின் போது தான் முருகனுக்கு வேல் கிடைத்தது. அதுவரை அவரது ஆயுதமாக வில் தான் இருந்துள்ளது. எனவே இது மிகவும் பழமை வாய்ந்த தலமாகும். முருகன் முதலில் ஜோதியாகவும், பின்னர் வில்லும் அம்பும் ஏந்திய வீரனாகவும் காட்சியளித்தார் என்றும் தல வரலாறு கூறுகிறது.
கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கொடிமரத்திற்கு முன்பாக பெரிய அளவில் ஏழு வேல்கள் முருகனின் உத்தரவுக்காக காத்திருக்கும் சேவகர்கள் போல காட்சியளிக்கிறது. அடுத்து இருபுறங்களிலும் 8 அடி உயர துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் சிவசுப்பிரமணியசாமி வள்ளி, தெய்வானையுடன் கையில் வில்லும் அம்பும் ஏந்தி பாதங்களில் இறகு அணிந்து அருள்பாலிக்கிறார். இந்த மூலஸ்தான சிற்பம் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது என்பது சிறப்பம்சமாகும். கோயிலில் காணிக்கையாக பாதக்குறடுகளை செலுத்தும் பழக்கம் இங்கு உள்ளது. கோயிலுக்கு எதிரே அரசும், வேம்பும் உள்ளது. மரத்தின் அடியில் விநாயகப்பெருமான், நாகதேவதைகள் சன்னதியும், கோயிலின் பின்புறம் வன்னிமரமும், நவக்கிரக சன்னதியும் அமைந்துள்ளது.
அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புதுவண்டிப்பாளையம்
அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புதுவண்டிப்பாளையம், கடலூர் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
சிவசுப்பிரமணிய சுவாமி |
|
அம்மன் | – |
வள்ளி, தெய்வானை |
|
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – |
புதுவண்டிப்பாளையம் |
|
மாவட்டம் | – | கடலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சமயக்குரவர் நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசர் சமணர்களின் கொடுமைக்கு ஆளானார். சமணர்களின் தலைவனும், அரசனுமான மகேந்திரவர்மன் அவரைக் கல்லோடு சேர்த்துக் கட்டி, வங்கக் கடலில் வீசி எறிந்தான். இருந்தும் அந்த கல்லையே தெப்பமாக்கி “நமசிவாய” என்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்து திருப்பாதிரிப்புலியூருக்கு தென் திசை நோக்கி மிதந்து வந்து, கெடில நதி வாயிலாகக் கரையேறினார் நாவுக்கரசர். இவருக்கு சிவன் பார்வதியுடன் ரிஷப வாகனத்திலும், முருகப்பெருமான் மயில் வாகனத்திலும் காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் இத்தலத்தில் முருகனுக்கு தனி கோயில் அமைக்கப்பட்டது.
அப்பர் பெருமான் கரையேறிய அருங்காட்சியினை ஆண்டு தோறும் சித்திரை அனுஷத்தில் கொண்டாடுவார்கள். அப்படிக் கொண்டாடும்போது திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி உடனாய பாடலீஸ்வரரும், புதுவண்டிப்பாளையம் முருகப்பெருமானும் அந்த தலத்துக்கு எழுந்தருளி அப்பருக்கும், பக்தர்களுக்கும் காட்சி கொடுக்கின்றனர். இத்தலம் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தலம்.