Category Archives: பரிகார தலங்கள்
அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில், அவிநாசி
அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில், அவிநாசி, கோயம்புத்தூர் மாவட்டம்.
+91- 4296 – 273 113, +91- 94431 39503
காலை 5 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 5 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அவிநாசி ஈஸ்வரர் (அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்) | |
அம்மன் | – | கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி | |
தல விருட்சம் | – | பாதிரிமரம் | |
தீர்த்தம் | – | காசிக்கிணறு, நாககன்னிகைத் தீர்த்தம், ஐராவதத் தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருப்புக்கொளியூர் அவிநாசி, திருஅவிநாசி | |
ஊர் | – | அவிநாசி | |
மாவட்டம் | – | கோயம்புத்தூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சுந்தரர் |
சுந்தரர், இவ்வூரில் உள்ள தெருவின் வழியே சென்ற போது எதிரெதிராக இருந்த இரு வீடுகளில், ஒரு வீட்டில் பூணூல் கல்யாணம் நடப்பதையும், மற்றொரு வீட்டில் பெற்றோர் சோகமாக இருப்பதையும் கண்டார். இதற்கான காரணத்தை விசாரிக்கையில், இரு வீட்டிலும் நான்கு வயதுடைய பையன்கள் இருந்ததாகவும், அதில் இவர்களது பையனை முதலை இழுத்து சென்று விட்டதாகவும், இவர்களது பையனும் இருந்திருந்தால் அவனுக்கும் பூணூல் கல்யாணம் நடத்தியிருக்கலாம் என்ற வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனை அறிந்த சுந்தரர் இத்தல இறைவனைக் கோயிலுக்கு வெளியே நின்று மனமுருகி பிரார்த்தனை செய்தார். அவிநாசியப்பரின் அருளால் முதலை வாய்க்குள் 3 ஆண்டுகளுக்கு முன் போன பையன் 7 வயது வளர்ச்சியுடன் வெளியே வந்தான். இவனை பெற்றோரிடம் அழைத்து சென்று அவர்களது விருப்பப்படி பூணூல் கல்யாணமும் நடத்தி வைத்தார். இது இத்தலத்தில் முக்கிய நிகழ்ச்சியாகும். ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில் 3 நாட்கள் “முதலைவாய்ப்பிள்ளை உற்ஸவம்” நடக்கிறது.
அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், கொடுமுடி
அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், திருப்பாண்டிக் கொடுமுடி, கொடுமுடி, ஈரோடு மாவட்டம்.
+91- 4204-222 375 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மகுடேஸ்வரர் | |
அம்மன் | – | திரிபுர சுந்தரி, மதுரபாஷினி | |
தல விருட்சம் | – | வன்னி | |
தீர்த்தம் | – | தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 2000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருப்பாண்டிக்கொடுமுடி | |
ஊர் | – | கொடுமுடி | |
மாவட்டம் | – | ஈரோடு | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சுந்தரர் |
ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யார் வலிமை மிக்கவர் என்பதில் போட்டி எழுந்தது. அவர்கள் மேரு மலையை நடுவில் வைத்தனர். ஆதிசேஷன் மேருவை கட்டி அணைத்துக்கொண்டான். வாயு பகவான் தனது வேகத்தால் ஆதிசேஷனை மேருவிலிருந்து தள்ள முயன்றார். காற்று படுவேகமாக வீசியபோது மேருமலை சிதறி ஏழு துண்டுகளாக விழுந்தது. ஒவ்வொன்றும் இரத்தினமாக மாறி இலிங்கமாக ஆனது. கொடுமுடி தலத்தில் வைரக்கல்லால் ஆன இலிங்கமாக இறைவன் குடியிருந்ததாக ஐதீகம். இது ஒரு நாகர் ஸ்தலம். நாகதோஷம் நீங்க இங்கு பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர். இங்கே மூன்று முகம் கொண்ட பிரம்மனை தரிசிக்கலாம். வன்னி மரத்தடியில் இவர் அருள்பாலிக்கிறார். வன்னி மரத்தை இன்னொரு முகமாக பாவித்துக் கொள்ள வேண்டும். அகத்தியர், பரத்வாஜர் ஆகிய முனிவர்களுக்கு இங்கு இறைவன் திருமண கோலத்தில் காட்சிதந்தார். ஆதிசேஷனால் உருவான கோயில் என்பதால், இங்கு நாகர்வழிபாடு விசேஷம். ஆஞ்சநேயர் கோரமான பல்லுடன் இங்கே காட்சி தருகிறார். சஞ்சீவி மலையை கொண்டு வருவதற்காக வடக்கு நோக்கி செல்வது போன்ற தோற்றத்தில் உள்ளார். வாலில்மணி கட்டப்பட்டுள்ளது. பெருமாள் சன்னதியின் உட்புறத்தில் ஒரு தூணில் “வியாக்ரபாத விநாயகரின்” சிற்பம் உள்ளது. புலியின் காலும், யானையின் முகமும் கொண்ட இந்த விநாயகர் மிகவும் அபூர்வமானவர். இங்கே ஈசன், “மகுடேஸ்வரர், மலைக் கொளுந்தீஸ்வரர்” என்றும், அம்பாள்,”சவுந்தரநாயகி, வடிவுடைய நாயகி” என்றும் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகின்றனர். அமாவாசை நாட்களில் பிதுர் தர்ப்பணம் செய்ய காவிரிக்கரையில் ஏராளமானோர் கூடுகிறார்கள். அறுபதாம் கல்யாணம், ஆயுள்ஹோமம் ஆகியவை நடத்த இத்தலம் விசேஷமானது. இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை. மிகவும் பழமையான இந்தமரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாளானாலும் தண்ணீர் கெடுவதில்லை. பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும்போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டுத்தான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள்.