Category Archives: திருமால் ஆலயங்கள்

அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில், திருச்சேறை

அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில், திருச்சேறை– 612605 தஞ்சாவூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாரநாதன்
தாயார் சாரநாயகி பஞ்சலெட்சுமி
தீர்த்தம் சார புஷ்கரிணி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருச்சாரம்
ஊர் திருச்சேறை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்து மண்ணை எடுத்து ஒரு கடம் செய்து அதில் வேதங்களை வைத்துக் காப்பாற்றியதாகப் புராணங்கள் கூறுகிறது. ஒரு முறை காவிரித்தாய் பெருமாளிடம்,”அனைவரும் கங்கையே உயர்ந்தவள். அங்கு சென்று நீராடினால் பாவங்கள் தொலையும் என்று பெருமை பேசுகிறார்கள். அத்தகைய பெருமை எனக்கும் வேண்டும்எனக் கேட்டு இத்தல சாரபுஷ்கரணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார். “தனக்கு இந்த பெருமை மட்டும் போதாதுஎன காவிரி கூறியவுடன், கருடவ வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி கொடுத்து, “வேண்டும் வரம் கேள்என்றார். அதற்கு காவிரி,”தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும். கங்கையிலும் மேன்மை எனக்கு தந்தருள வேண்டும்என்றாள். பெருமாளும் அப்படியே செய்தார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம்.

அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், திருநாகேஸ்வரம்

அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், திருநாகேஸ்வரம், கும்பகோணம் – 612 204. தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435 – 246 3385, 246 3685 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்    –    ஒப்பிலியப்பன்(திருவிண்ணகரப்பன்)
உற்சவர்    –    பொன்னப்பன்
தாயார்    –    பூமாதேவி
தீர்த்தம்    –    அஹோத்ரபுஷ்கரணி
ஆகமம்    –    வைகானஸம்
பழமை    –    1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்    –    திருவிண்ணகரம்
ஊர்    –    திருநாகேஸ்வரம்
மாவட்டம்    –    தஞ்சாவூர்
மாநிலம்    –    தமிழ்நாடு


மகாவிஷ்ணுவின் மனைவியும், இலட்சுமியின் ஒரு அம்சமுமான பூமாதேவி, விஷ்ணுவிடம், “எப்போதும் மகாலட்சுமியை மட்டும் மார்பில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அந்த பாக்கியத்தை தாருங்கள்” என்று கேட்டாள். மகாவிஷ்ணு அவளிடம்,”நீ பூலோகத்தில் ஒரு ரிஷியின் மகளாக, திருத்துழாய்(துளசி) என்ற பெயரில் பிறந்து இந்த பேற்றைப் பெறுவாய்” என்றார்.

இச்சமயத்தில், என்றும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேய மகரிஷி, மகாலட்சுமியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டி தவமிருந்தார். இலட்சுமியின் அம்சமான பூமாதேவி, குழந்தை வடிவில் ஒரு துளசிச்செடிக்கு கீழே கிடப்பதைக் கண்டார். தன் ஞானதிருஷ்டியால் அவள் இலட்சுமியின் அம்சம் என்பதை அறிந்து, துளசி எனப் பெயர்சூட்டி வளர்த்து வந்தார். திருமண வயது வந்த போது, திருமால், ஒரு முதியவர் வேடத்தில் சென்று அவரிடம் பெண் கேட்டார். மார்க்கண்டேயர் சம்மதிக்கவில்லை.