Category Archives: திருமால் ஆலயங்கள்
அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில், மோகனூர்
அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில், மோகனூர் – 637 015. நாமக்கல் மாவட்டம்
+91- 4286 – 256 100, 94429 57143 (மாற்றங்களுக்குட்பட்டவை)
மூலவர் | – | கல்யாணபிரசன்ன வெங்கட்ரமணர் |
உற்சவர் | – | சீனிவாசர் |
தாயார் | – | பத்மாவதி |
தல விருட்சம் | – | வில்வம் |
தீர்த்தம் | – | காவிரி |
ஆகமம்/பூசை | – | வைகானஸம் |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன்பு |
புராணப் பெயர் | – | மோகினியூர் |
ஊர் | – | மோகனூர் |
மாவட்டம் | – | நாமக்கல் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இப்பகுதியில் வசித்த பக்தர் ஒருவர் திருப்பதி வெங்கடாஜலபதி மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். ஒருசமயம் அவருக்கு வாதநோய் ஏற்பட்டதால், திருப்பதிக்கு செல்ல முடியவில்லை. வருத்தமடைந்த அவர், காவிரியில் மூழ்கி உயிர் துறக்க நினைத்தார். தள்ளாடியபடி நடந்து சென்று காவிரிக்கரையை அடைந்தார். அப்போது, கரையில் இருந்த ஒரு புற்றில் இருந்து நாகம் வெளிவந்தது. என்ன காரணத்தாலோ, பக்தர் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வீடு திரும்பி விட்டார். அன்றிரவில், அவரது கனவில் தோன்றிய திருமால், பாம்பு வெளிப்பட்ட புற்றுக்குள் சிலை வடிவில் இருப்பதாக கூறினார். பக்தர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். புற்றை உடைத்துப் பார்த்த போது, உள்ளே சுவாமி சிலை இருந்தது. பின்பு அந்த இடத்திலேயே ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மணக்கோலத்தில் பிரதிஷ்டை செய்தனர். சுவாமிக்கு,”கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர்” என்று பெயர் சூட்டப்பட்டது. இதுதவிர, பத்மாவதி தாயாருக்கு தனிசன்னதி கட்டப்பட்டது.
அருள்மிகு கஜேந்திரவரதர் சுவாமி திருக்கோயில், அத்தாளநல்லூர்
அருள்மிகு கஜேந்திரவரதர் சுவாமி திருக்கோயில், அத்தாளநல்லூர் – 627 426 திருநெல்வேலி மாவட்டம்.
+91- 4634 – 287195 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆதிமூலம் |
உற்சவர் | – | கஜேந்திவரதன் |
தாயார் | – | ஆண்டாள் |
தீர்த்தம் | – | தாமிரபரணி |
ஆகமம்/பூசை | – | பாஞ்சராத்ரம் |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | யானைகாத்தநல்லூர் |
ஊர் | – | அத்தாளநல்லூர் |
மாவட்டம் | – | திருநெல்வேலி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிறந்த பெருமாள் பக்தனாக இருந்த இந்திரதிம்னன் எனும் மன்னன், அகத்தியரைத் தனது குருவாக ஏற்றுக்கொண்டு அவரது ஆலோசனைப்படி ஆட்சி புரிந்து வந்தான். ஒருமுறை தன் அவைக்கு வந்த அகத்தியரை வரவேற்காமல், கேளிக்கையில் மூழ்கியிருந்தான். இதனைக்கண்டு மனம் குமுறிய அகத்தியர், தனது சீடராக இருந்து கொண்டு தம்மை மதிக்காமல் இருந்ததற்குத் தண்டனையாக அவரை யானையாக மாறி, வனத்தில் சுற்றித்திரிந்து பின் மோட்சம் பெறுவாய் என சபித்தார். அகத்தியரிடம் சாபம் பெற்ற அவன் காட்டில் யானைகளின் தலைவனாக கஜேந்திரன் என்ற பெயரில் வாழ்ந்து வந்தான்.