Category Archives: வகையிடப்படாதவை

அருள்மிகு பரசுராமர் திருக் கோயில், திருவல்லம்

அருள்மிகு பரசுராமர் திருக் கோயில், திருவல்லம் – 695 026 திருவனந்தபுரம் மாவட்டம். கேரளா மாநிலம்.

+91- 471-238 0706 (மாற்றங்கலுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பரசுராமர்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருவல்லம்
மாவட்டம் திருவனந்தபுரம்
மாநிலம் கேரளா

பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியைக் கொன்ற தோஷம் நீங்க பல தலங்கள் சென்று வழிபாடு செய்தார். ஒரு முறை அவர் சிவனின் கட்டளைப்படி இத்தலம் வந்து இங்குள்ள கரமனை ஆற்றில் நீராடினார். அப்போது அவருக்கு கிடைத்த இலிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து தவம் செய்து தோஷம் நீங்கப் பெற்றார். பின் தன் தாய்க்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்தார். பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோர் பரசுராமர் பிரதிஷ்டை செய்த இலிங்கத்தை பூஜை செய்துள்ளனர்.

அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில், பள்ளிகொண்டான்

அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில், பள்ளிகொண்டான் – 635 809. வேலூர் மாவட்டம்

+91- 94439 89668, 94436 86869.

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பள்ளி கொண்ட பெருமாள்
தாயார் ரங்கநாயகி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் பள்ளி கொண்டான்
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு

மகாலட்சுமிக்கும், சரஸ்வதிக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு தீர்ப்பு கூறும்படி இருவரும் பிரம்மனிடம் சென்றனர். மகாலட்சுமி தான் பெரியவர் என பிரம்மா தீர்ப்பு கூறினார். இதனால் சரஸ்வதிக்கு கோபம் ஏற்பட்டு, பூலோகத்திலுள்ள சாசிய மலையில் தனது நிலை உயர வேண்டி தவம் செய்யத் தொடங்கினாள். இந்நிலையில் பிரம்மா பெருமாளுக்கு சிறப்பு செய்வதற்காக ஒரு யாகம் தொடங்கினார். நியதிப்படி யாகத்தை தம்பதி சமேதராக நடத்த வேண்டும். ஆனால், சரஸ்வதி யாகத்திற்கு வர மறுத்தாள். எனவே பிரம்மா, சரஸ்வதியின் அம்சமாக ஒரு பெண்ணைப் படைத்து, அவளுக்கு சாவித்திரி என பெயர் சூட்டி, அவளையே மணந்து யாகத்தை தொடங்கினார்.