Category Archives: வகையிடப்படாதவை

அருள்மிகு ராமச்சந்திர பெருமாள் திருக்கோயில், நெடுங்குன்றம்

அருள்மிகு ராமச்சந்திர பெருமாள் திருக்கோயில், நெடுங்குன்றம், திருவண்ணாமலை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர்
உற்சவர் விஜயராஜன்
தாயார் செங்கமலவல்லி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் சிவதீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் நெடுங்குன்றம்
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

இலங்கையில் இராவணனோடு யுத்தம் நடத்தி விட்டு அயோத்தி நோக்கி ராமர் சீதை லட்சுமணரோடு செல்லும் போது இவ்விடத்திற்கு வந்துள்ளார். அப்போது இங்குள்ள மலையில் தவம் செய்து கொண்டிருந்த சுகப்பிரம்ம ரிஷியின் ஆசிரமம் சென்றார். இராமனைக்கண்ட ரிஷி மகிழ்ச்சிக் கடலில் திளைத்தார். தாம் சேமித்து வைத்திருந்த அரிய சாஸ்திரங்கள் எழுதிய ஓலைச் சுவடியை இராமனிடம் கொடுத்தார். அதை இராமர் பணிவுடன் பெற்றுக் கொண்டாராம். ஆனந்தத்தில் மிதந்து, தம்பியாகிய இலட்சுமணரை தம் வலப்புறம் இருக்கச் செய்தார். இடப்பாகத்தில் சீதையை அமரச் செய்தார். ரிஷியிடம் வாங்கிய ஓலைச் சுவடியைப் படிக்குமாறு அனுமனிடம் கொடுத்தார். அனுமனும் பத்மாசனத்தில் அமர்ந்து படிக்கலானார். வேதத்தின் உட்கருத்தை கேட்டு இன்புற்று, முக்திகோபணிஷத் என்ற உபநிஷத்தை அனுமனுக்கு உபதேசித்தார் என்று தலவரலாறு கூறுகிறது.

அருள்மிகு ரகுமாயீ சமேத பாண்டுரங்கன் திருக்கோயில், தென்னாங்கூர்

அருள்மிகு ரகுமாயீ சமேத பாண்டுரங்கன் திருக்கோயில், தென்னாங்கூர் – 604 408. திருவண்ணாமலை மாவட்டம்

+91-4183-225 808 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பாண்டுரங்கன்
தாயார் ரகுமாயீ
தல விருட்சம் தமால மரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் தென்னாங்கூர்
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

மகாராஷ்டிராவிலுள்ள பண்டரிபுரம் கோயிலைப் போன்றே வந்தவாசி அருகே தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில் உள்ளது. இங்கு ரகுமாயீ சமேத பாண்டுரங்கனை தரிசிக்கலாம். ஞானானந்த சுவாமிகளின் சீடர் ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் அமைக்கப்பட்ட இக்கோயில், நாமாநந்த கிரி சுவாமிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இயந்திர வழிபாட்டின் அடிப்படையான ஸ்ரீசக்ர அதிதேவதைகள் அனைத்தும் இங்கு இருப்பது விசேஷம்.