Category Archives: சிவ ஆலயங்கள்
அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருப்பரங்குன்றம்
அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்.
+91- 452- 248 2248, 248 2648, 98653- 70393, 98421- 93244, 94433 – 82946 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 5.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சத்தியகிரீஸ்வரர்(பரங்குன்றநாதர்) | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | ஆவுடைநாயகி | |
தல விருட்சம் | – | கல்லத்தி | |
தீர்த்தம் | – | லட்சுமி தீர்த்தம், சரவணபொய்கை உட்பட 11 தீர்த்தங்கள் | |
ஆகமம் | – | காமிகம், காரணம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | தென்பரங்குன்றம் | |
ஊர் | – | திருப்பரங்குன்றம் | |
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் |
மகிஷாசுரன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க அம்பாள், நவநாயகிகளாக வடிவம் எடுத்து ஒன்பது நாட்கள் அவனுடன் போரிட்டாள். ஒன்பதாம் நாளில் அவள் துர்க்கையம்மனாக மாறி அவனை வதம் செய்தாள். இதனால் அவளுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க சிவனை வணங்கினாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தான் இத்தலத்தில் மலையின் வடிவில் இருப்பதாகவும், இங்கு தன்னை வணங்கிவர சாபம் நீங்கப்பெறும் என்றார். அதன்படி துர்க்கையம்மன் இங்கு வந்து இலிங்க வடிவ மலையாக இருக்கும் சிவனைத் தவம் செய்து வணங்கினாள். மேலும் மலையிலேயே ஒரு இலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து பூஜித்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன் தோஷத்தை போக்கியருளினார்.
அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில், ஆப்புடையார் கோயில், செல்லூர்
அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில், ஆப்புடையார் கோயில், செல்லூர், மதுரை மாவட்டம்.
+91 452 253 0173, 94436 76174 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆப்புடையார், இடபுரேசர் (ரிஷபுரேசர்), அன்னவிநோதன், ஆப்பனூர் நாதர் | |
அம்மன் | – | சுகந்த குந்தளாம்பிகை, குரவங்கழ் குழலி | |
தல விருட்சம் | – | கொன்றை | |
தீர்த்தம் | – | வைகை, இடபதீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருவாப்பனூர், திருஆப்புடையார் கோவில் | |
ஊர் | – | செல்லூர், மதுரை | |
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
சோழாந்தகன் என்ற மன்னன் ஒரு சிவபக்தன். இவனது ஆட்சியில் காலம் தவறாமல் மழை பொழிந்து, விளைச்சல் பெருகி மக்கள் இன்பமாக வாழ்ந்தனர். இதற்கு காரணம் இவனது சிறந்த சிவபக்தி தான். இவன் எப்போதும் சிவபூஜை செய்த பின்பு தான் சாப்பிடுவான். ஒரு முறை இவன் வேட்டையாடக் காட்டிற்கு சென்றான். அப்போது ஒர் அழகிய மானைப்பார்த்தான். விரட்டினான். ஆனால் இவனது பிடியில் சிக்கவில்லை. மானை விரட்டிய களைப்பால் மயங்கிய மன்னன் நடுக்காட்டில் விழுந்து விட்டான். பயந்து போன இவனது பாதுகாப்பு வீரர்கள், மன்னனின் களைப்பு தீர உணவை அருந்தக் கூறினர். ஆனால் சிவபூஜை செய்யாமல் சாப்பிடமாட்டேன் என்பதை உறுதியாகத் தெரிவித்தான். புத்திசாலி அமைச்சர் ஒருத்தர், அந்த காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து தரையில் ஆப்பு அடித்தார். அதைக்காட்டி, “மன்னா, இங்கே ஒரு சுயம்பு இலிங்கம் உள்ளது. நீங்கள் அதை பூஜை செய்த பின் உணவருந்தலாமே” என்று யோசனை கூறினார். களைப்பிலிருந்த மன்னனும் அந்த ஆப்பை சுயம்புலிங்கம் என நினைத்து வணங்கி உணவருந்தி விட்டான். களைப்பு நீங்கிய பிறகுதான், தாம் வணங்கியது இலிங்கம் அல்ல – அது ஒர் ஆப்பு என்பதை உணர்ந்து மிக வருந்தினான்.