Category Archives: சிவ ஆலயங்கள்

தஞ்சைப் பெரியகோயில்-பிராட்டி

தஞ்சைப் பெரியகோயில்-பிராட்டி
*************************************
தஞ்சைப் பெரிய கோயில் அம்மை பெரியநாயகியைக் கண்குளிரக் காணுங்கள்.

திரு உத்திரகோச மங்கை

ஈசனின் திருநாமங்கள் பாதாள லிங்கேசுவரன், பிரளயாகேசுவரன், துரிதாபகன், கல்யாணசுந்தரன்.

அன்னையின் திருநாமங்கள் மங்களேசுவரி, மங்களதாவினி, புட்பதனி, சுந்தர நாயகி, பூண்முலையாள், கல்யாண சுந்தரி

திரு = அழகு
உத்ரம் = உபதேசம்
கோசம் = இரகசியம்
மங்கை = பெண்

மூலவர் மங்களநாதர்
சிறப்பு சுயம்பு
அன்னை மங்களேசுவரி
அற்புதம் மரகத நடராசர்
தலமரம் இலந்தை
தீர்த்தம் அக்கினி தீர்த்தம்
பதிகம் தேவாரம்
ஊர் உத்திரகோச மங்கை
மாவட்டம் இராமநாதபுரம்
புராணப் பெயர் பதலி கிராமம்

மண்டோதரிக்குத் திருமணமாகாத காலம். அவள் ஈசனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தாள். ஈசன் அவளுக்குக் காட்சி தந்தபின்தான் அவளுக்குத் திருமணம் ஆயிற்று. அப்போது ஈசன் தனக்குத்தனே சூட்டிக்கொண்ட நாமம் மங்களநாதன்.