Category Archives: பாடல் பெற்றவை
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு, காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44-2627 2430, 2627 2487 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வேதபுரீஸ்வரர் | |
அம்மன் | – | பாலாம்பிகை | |
தல விருட்சம் | – | வெள்வேல மரம் | |
தீர்த்தம் | – | வேத தீர்த்தம், பாலி நதி | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருவேற்காடு | |
ஊர் | – | திருவேற்காடு | |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
சிவபெருமான் பார்வதியை திருமணம் செய்து கொண்ட காலத்தில், தேவர் முதலியோர் இமயமலையை அடைந்ததால், வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதை சரிசெய்ய இறைவன் அகத்தியரைத் தென்திசைக்கு அனுப்பினார். அகத்தியர் இறைவனின் திருமணக்காட்சியை காண இயலவில்லையே என்ற வருத்தத்துடன் சென்றார். அப்போது இறைவன்,”நீ தென் திசை நோக்கி செல்லும் போது உமக்கு திருமண காட்சியை காட்டுவோம்” என அருள்புரிந்து அனுப்பி வைத்தார். அகத்தியர் திருவேற்காடு அடைந்த போது இறைவன் பார்வதியுடனான திருமணக்கோலத்தை காட்டி அருளினார்.
பிருகு முனிவரின் சாபத்தால் பெருமாள், ஜமத்கனி முனிவருக்கும், ரேணுகைக்கும் மகனாக அவதரித்தார். பரசுராமர் எனப் பெயர் பெற்றார். அவர் இத்தல இறைவனை வழிபட வந்தபோது அவருடன் ரேணுகையும் உடன் வந்தார். ரேணுகை, இங்கேயே தங்கிக் கோயில் கொண்டாள். அதுவே, புகழ்பெற்ற,”கருமாரியம்மன் கோயில்” என்ற பெயரில் விளங்குகிறது. பிரளய காலத்தில் இந்த உலகம் அழிக்கப்பட்ட பின், சிவன் மீண்டும் இந்த உலகை படைக்க விரும்பினார். முதலில் வெள்ளத்தை வற்றச்செய்து பின் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை இத்தலத்தில் வெள்ளெருக்கு மரங்களாக வடிவெடுக்குமாறு கட்டளையிட்டார். அதன்படி இத்தலத்தில் வேதங்கள் வெள்வேல மரங்களாக மாறி இறைவனை வழிபட்டு வந்தன. இவ்வூரின் தல விருட்சம் வெள்வேல மரமாகும். இதனால் இத்தலம் “திருவேற்காடு” என அழைக்கப்படுகிறது.
அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், எலுமியன்கோட்டூர்
அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், எலுமியன்கோட்டூர், திருஇலம்பையங்கோட்டூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44 – 2769 2412, 94448 65714 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை மணி முதல் இரவு மணி வரை திறந்திருக்கும். கோயிலுக்கு செல்பவர்கள் முன்னதாகவே அர்ச்சகரிடம் போனில் தொடர்பு கொண்டு செல்வது நல்லது.
மூலவர் | – | தெய்வநாயகேஸ்வரர் | |
அம்மன் | – | கனககுசாம்பிகை | |
தல விருட்சம் | – | மரமல்லிகை | |
தீர்த்தம் | – | மல்லிகா புஷ்கரணி | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | இலம்பையங்கோட்டூர், திருவிலம்பையங்கோட்டூர் | |
ஊர் | – | எலுமியன்கோட்டூர் | |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | திருஞானசம்பந்தர் |
தேவர்களைக் கொடுமைப்படுத்திய திரிபுர அசுரர்களை சம்காரம் செய்வதற்காக, மரமல்லிகை வனமாக இருந்த இவ்வழியே சிவன் சென்றார். அப்போது, சிவனுடன் சென்ற தேவர்கள் விநாயகரை வணங்காமல் சென்றதால், அவர் சிவனது தேரின் அச்சை முறித்தார். தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. தேர் கீழே கவிழாமல் மகாவிஷ்ணு தாங்கிபிடித்தார். அப்போது, சிவன் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை இவ்விடத்தில் விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார்.
ஒருசமயம், சிவத்தலங்களுக்கு சென்று பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சிறுவன் மற்றும் முதியவர் வடிவில் சென்ற சிவன், அவரிடம் “இவ்விடத்தில் சிவன் குடிகொண்டிருக்கிறார். அவரைக்குறித்து பதிகம் பாடு” என்றார். அதன்படி, இங்கு வந்த சம்பந்தர், சிவன் இருந்த இடத்தை தேடிவிட்டு, அவரைக் காண முடியாமல் திரும்பினார். மீண்டும் பசு வடிவில் சென்று அவரை மறித்த சிவன், தான் இருக்கும் இடத்தை காட்டினார். அதன்பின், சம்பந்தர் சிவனை குறித்து பதிகம் பாடினார்.
அரம்பையர்களான(தேவலோக கன்னிகள்) அரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் இத்தலத்திற்கு வந்து, தங்களது அழகு என்றும் குறையாது இருக்க அருளும்படி சிவனை வேண்டித் தவம் இருந்தனர். அவர்களுக்கு சிவன், “யோக தெட்சிணாமூர்த்தி“யாகக் காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படியாக அருளினார். இவர், கோஷ்டத்தில் சின்முத்திரையுடனான வலக்கையை இதயத்தில் வைத்தபடி, வலது பாதத்தை மடக்கி, யோகபட்டையுடன் அபூர்வ கோலத்தில் காட்சி தருகிறார். பேரின்ப நிலையில் உள்ள இவரை வணங்கினால் காண்போரை வசீகரிக்கும் முகப்பொலிவையும், மனஅழகையும் பெறலாம். குறிப்பாக பெண்கள் வணங்கினால் கூடுதல் அழகைப்பெறுவர் என்பது நம்பிக்கை.