Category Archives: பாடல் பெற்றவை
அருள்மிகு சிவலோகத் தியாகராஜ சுவாமி திருக்கோயில், ஆச்சாள்புரம், சீர்காழி
அருள்மிகு சிவலோகத் தியாகராஜ சுவாமி திருக்கோயில், ஆச்சாள்புரம், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4364 – 278 272 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சிவலோகத்தியாகர் | |
உற்சவர் | – | திருஞான சம்பந்தர் | |
அம்மன் | – | திருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதி நாயகி | |
தல விருட்சம் | – | மாமரம் | |
தீர்த்தம் | – | பஞ்சாக்கர, பிருகு, அசுவ, வசிஷ்ட, அத்திரி, சமத்கனி, வியாச மிருகண்டு தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | சிவலோகபுரம், நல்லூர்பெருமணம், திருமண நல்லூர், திருமணவை | |
ஊர் | – | ஆச்சாள்புரம் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சம்பந்தர் |
சீர்காழியில் சிவபாத இருதயரின் மகனாக அவதரித்தவர் சம்பந்தர். இவருக்கு 16 வயது நடக்கும் போது, இவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி தந்தை கூறினார். முதலில் மறுத்த சம்பந்தர், பின் “இறைவனின் விளையாட்டு தான் இது” என்று சம்மதித்தார். மயிலாப்பூரில் சிவநேச செட்டியாரின் மகளைப் பெண் பார்த்து முடித்தனர். அவள் திடீரென இறந்து போனாள். அவளுக்கு உயிர் கொடுத்த சம்பந்தர் அவளைத் தன் மகளாக ஏற்றார். அப்பெண் இறைப்பணியில் மூழ்கி விட்டார். இதன்பிறகு, சிவபாத இருதயர், நல்லூரில் உள்ள நம்பியாண்டார் நம்பியின் மகள் மங்கை நல்லாளை நிச்சயித்தார்.
ஞானசம்பந்தரும் மணக்கோலம் பூண்டார். ஆச்சாள்புரம் கோயிலில் திருமணம் நடக்க இருந்தது. திருநீலக்க நாயனார் மணவிழா சடங்குகளை செய்தார். சம்பந்தர் அக்னியை வலம் வரும் போது,”இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மை சூழ்ந்ததே; இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன்” என்று கூறி, “கல்லூர்ப் பெருமணம்” எனத் தொடங்கும் பதிகம் பாடி, சிவனின் திருவடியில் சேரும் நினைவோடு இறைவனை வழிபட்டார். அப்போது எல்லாம் வல்ல ஈசன் ஜோதிப்பிழம்பாக தோன்றி, “நீயும் உனது மனைவியும் திருமணம் காண வந்தோர் அனைவரும் இந்த ஜோதியில் கலந்து விடுக” என்று அருள்புரிந்தார்.
அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர்
அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை, சென்னை மாவட்டம்.
+91 – 44 – 2441 0477 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6மணி முதல் மணி 12வரை, மாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மருந்தீஸ்வரர் | |
உற்சவர் | – | தியாகராஜர் | |
அம்மன் | – | திரிபுரசுந்தரி | |
தல விருட்சம் | – | வன்னி | |
தீர்த்தம் | – | பஞ்ச தீர்த்தம் | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருவான்மீகியூர் | |
ஊர் | – | திருவான்மியூர் | |
மாவட்டம் | – | சென்னை | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் |
வசிஷ்டமுனிவர் செய்த சிவபூஜைக்காக, இந்திரன் தன்னிடமிருந்த காமதேனுவை அவருடன் அனுப்பி வைத்தான். பூஜை நேரத்தில் காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்யவே கோபம்கொண்ட முனிவர், அதனை புனிதத்தன்மை இழந்து காட்டுப்பசுவாக மாறும்படி சபித்தார். கலங்கிய காமதேனு, தனக்கு விமோசனம் கேட்க, இத்தலத்தில் வன்னி மரத்தடியில் சுயம்புலிங்கமாக உள்ள சிவனை வணங்கினால் விமோசனம் உண்டு என்றார். அதன்படி, இங்கு வந்த காமதேனு, சுயம்புவாய் இருந்த சிவன் மீது தினசரி பால் சுரந்து விமோசனம் பெற்றது. இதனால், இங்குள்ள இறைவன் “பால்வண்ணநாதர்” என்றும் அழைக்கப்படுகிறார்.
கொள்ளைக்காரராக இருந்த வால்மீகி, திருந்திட எண்ணம் கொண்டு இங்குள்ள சிவனை வணங்கி வந்தார். ஒருமுறை, அவர் சிவனை தரிசிக்க வந்தபோது, அவரைக்கண்டு பயந்த காமதேனு ஓடியது. அப்போது இங்கிருந்த இலிங்கத்தை அறியாமல் மிதித்ததில் சுவாமியின் மேனியில் தடம் பதிந்தது. இன்றும்கூட, சுவாமியின் தலையிலும், மார்பிலும் பசு மிதித்த தடம் இருக்கிறது.