Category Archives: பாடல் பெற்றவை
அருள்மிகு முல்லைவன நாதர் உடனுறை அணிகொண்ட கோதையம்மை திருக்கோயில், திருமுல்லைவாசல்
அருள்மிகு முல்லைவன நாதர் உடனுறை அணிகொண்ட கோதையம்மை திருக்கோயில், திருமுல்லைவாசல், நகாப்பட்டினம் மாவட்டம்.
+91-94865 24626 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 8 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | முல்லைவனநாதர், மாசிலாமணீசர் (யூதிகா பரமேஸ்வரர்) | |
அம்மன் | – | அணிகொண்ட கோதையம்மை, (சத்தியானந்த சவுந்தரி) | |
தல விருட்சம் | – | முல்லை | |
தீர்த்தம் | – | பிரம்ம, சந்திர தீர்த்தங்கள் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | தென்திருமுல்லைவாயில் | |
ஊர் | – | திருமுல்லைவாசல் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
கரிகால் சோழனின் பாட்டனார் முதலாம் கிள்ளி வளவன் சரும நோயால் மிகவும் வேதனைப்பட்டான். நோய் தீரவேண்டுமானால் சிவத்தலம் ஒன்றில் உள்ள தீர்த்தத்தில் நீராட வேண்டுமென அரண்மனை வைத்தியர்கள் கூறினர். நோய் தீர, தன் பரிவாரங்களுடன் இத்தலத்தின் அருகில் உள்ள கடலில் நீராட வந்தான். அப்போது இந்த பகுதி முழுவதும் முல்லைக் கொடிகளாக இருந்தது. எனவே இவர்கள் வந்த குதிரையின் குளம்பு முல்லைக் கொடிகளில் சிக்கிக் கொண்டது. அதற்கு மேல் குதிரைகளால் நகர முடியவில்லை.
முல்லைக் கொடிகளை கிள்ளிவளவன் வாளால் வெட்டும் போது, அதன் கீழேயிருந்த சுயம்பு மூர்த்தியின் மீது பட்டு இரத்தம் பெருகியது. அதிர்ச்சியடைந்த கிள்ளிவளவன், ஏதோ ஒரு உயிரை வெட்டி விட்டோமே எனப் பார்க்க, அங்கே இலிங்கம் ஒன்று இரத்தம் வழியக் காட்சியளித்தது. தெரியாமல் மாபெரும் தவறு செய்து விட்டோமே என வருந்திய வளவன், தன்னைத்தானே வெட்ட முற்பட்டான். உடனே ஈசன் பார்வதியுடன் ரிஷபாரூடராக காட்சி தந்து கிள்ளிவளவனைக் காப்பாற்றினார். எனவே தான் இத்தலத்திற்கு “திருமுல்லை வாசல்” என்று பெயர் வந்தது. இலிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இன்றும் காணலாம்.
அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப்பள்ளி
அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப்பள்ளி, கோயிலடிப் பாளையம், நாகப்பட்டினம் மாவட்டம்.
+91-4364- 292 309 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திருமேனியழகர் | |
அம்மன் | – | வடிவாம்பிகை | |
தல விருட்சம் | – | கண்ட மரம், தாழை | |
தீர்த்தம் | – | மயேந்திர தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருமகேந்திரப் பள்ளி | |
ஊர் | – | மகேந்திரப் பள்ளி | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சம்பந்தர் |
இந்திரன், கவுதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டதால், அவரிடம் உடம்பெல்லாம் கண்ணாகும்படி சாபம் பெற்றான். விமோசனத்திற்காக பூலோகம் வந்த அவன், பல தலங்களில் இலிங்கப் பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டான். அதில் ஒன்று மகேந்திரப்பள்ளியாகும். சிறப்பு மிக்க (மகா)இந்திரன் வழிபட்டதால், “மகேந்திரப்பள்ளி” என்ற சிறப்பு பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.
சிவன், அம்பாள் இருவரும் மிகவும் அழகாக காட்சி தருகின்றனர். எனவே சுவாமி, “திருமேனி யழகர்” என்றும், அம்பாள் “வடிவாம்பிகை” என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இங்கு வந்த திருஞானசம்பந்தர், சுவாமியை, “அழகர்” எனக் குறிப்பிட்டு பாடியிருக்கிறார். மதுரை அருகிலுள்ள அழகர் கோவிலில் உள்ளபெருமாள் “சுந்தரராஜன்” என்று சமஸ்கிருதத்திலும், “அழகர்” என்று தமிழிலும் வழங்கப்படுகிறார். அதுபோல, இத்தலத்தில் சிவன் “அழகர்” என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.