Category Archives: பாடல் பெறாதவை
பத்மகிரீஸ்வரர் (காளஹஸ்தீஸ்வரர்) அபிராமி திருக்கோயில், திண்டுக்கல்
அருள்மிகு பத்மகிரீஸ்வரர் (காளஹஸ்தீஸ்வரர்) அபிராமி திருக்கோயில், திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம்.
+91-51- 2433 229, 2460 903
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | காளகத்தீஸ்வரர் , பத்மகிரீஸ்வரர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | ஞானம்பிகை, அபிராமியம்பிகை | |
தல விருட்சம் | – | நெல்லி மரம் | |
தீர்த்தம் | – | ஐந்து தீர்த்தம் | |
ஆகமம் | – | காரணாகமம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திண்டீச்சுரம் | |
ஊர் | – | திண்டுக்கல் | |
மாவட்டம் | – | திண்டுக்கல் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பிரம்மா தனக்கு ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக இங்கு சிவனை வேண்டித் தவமிருந்தார். சிவன் அவருக்கு ஒரு பத்ம(தாமரை)த் தடாகத்தின் மத்தியில் எழுந்தருளினார். இதனால் இவர் “பத்மகிரீஸ்வரர்” என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் திண்டிமாசுரன் என்னும் அசுரன், பக்தர்களைத் துன்புறுத்தவே, சிவன் அவனை அழிக்கச் சென்றார். சிவனின் பார்வை பட்டதுமே திருந்திய அசுரன், தன் பெயரால் இத்தலம் திகழ வேண்டுமென வேண்டினான். சிவனும் அவ்வாறே அருளவே இத்தலம், “திண்டீஸ்வரம்” எனப் பெயர் பெற்றது.
பாடகலிங்கசுவாமி (பாடகப்பிள்ளையார்) திருக்கோயில், மலையான்குளம்
அருள்மிகு பாடகலிங்கசுவாமி (பாடகப்பிள்ளையார்) திருக்கோயில், மலையான்குளம், திருநெல்வேலி மாவட்டம்.
+91- 4634 – 254 721, 93603 12580
இக்கோயில் புதன், சனிக்கிழமையில் மட்டும் காலை 10 – மதியம் 2 மணிவரையிலும், மற்ற நாட்களில் காலை 8 – 10 மணி வரையில் மட்டும் திறந்திருக்கும். பிற நேரங்களில் சுவாமியை தரிசிக்கச் செல்வோர், அர்ச்சகரை முன்கூட்டியே போனில் தொடர்பு கொண்டுவிட்டு செல்வது நல்லது.
மூலவர் | – | பாடகலிங்கம், மகாலிங்கம் | |
அம்மன் | – | பாடகலிங்கநாச்சியார் | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | பாடகலிங்க தெப்பம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | மலையான்குளம் | |
மாவட்டம் | – | திருநெல்வேலி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட கேரள மன்னர் ஒருவரின் மனைவி, தனியே வனத்தைச் சுற்றிப்பார்க்க சென்றார். நீண்ட தூரம் வந்த அவளுக்குத் தாகம் உண்டாது. அருகில் ஒரு பள்ளத்தில் சுனை இருந்ததைக் கண்டு, அதில் நீர் பருகுவதற்காக இறங்கினாள். அப்போது தான் அணிந்திருந்த பாடகத்தை (காலில் அணியும் “தண்டை” என்னும் ஆபரணம்) கரையில் கழற்றி வைத்துவிட்டுச் சென்றாள். சுனையில் நீர் பருகிய அவள், மீண்டும் கரையேற முடியவில்லை. பயத்தில் அவள் கூச்சலிடவே, அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சென்று பார்த்தனர். மன்னரின் மனைவி சுனைக்குள் இருந்ததைக் கண்ட அவர்கள், மன்னருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இங்கு வந்து மனைவியை மீட்டார். அவள் சுனையின் கரையில் வைத்த பாடகங்கள் இரண்டும், சற்று தூரத்தில் ஒரு மூங்கில் கன்றில் சிக்கியிருந்தது. அதை எடுப்பதற்காக மன்னன் ஒரு கோடரியால் மூங்கிலை வெட்டினாள். அதிலிருந்து ரத்தம் பீறிட்டது. பயந்த மன்னரும், மனைவியும் அரண்மனைக்கு திரும்பிவிட்டனர். மறுநாள் அரசவை குருவை அழைத்துக்கொண்டு மன்னர் அங்கு சென்றார்.