Category Archives: பாடல் பெறாதவை

பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில், ஆனந்த தாண்டவபுரம்

அருள்மிகு பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில், ஆனந்த தாண்டவபுரம், மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பஞ்சவடீஸ்வரர்
அம்மன் பிரஹன்நாயகி, கல்யாணசுந்தரி
தல விருட்சம் பவளமல்லி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் ஆனந்ததாண்டவபுரம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

மானக்கஞ்சாறர் என்னும் வேளாளர் படைக்குத் தலைமை வகித்து நடத்தியவர்; அன்பிலும் சிவபக்தியிலும் கட்டுண்டு கிடந்தார். தன் மனைவியுடன் சிவனடியார்களுக்குச் சேவை செய்வதே கடமை என்று வாழ்ந்த மானக்கஞ்சாறருக்கு, தனக்கொரு வாரிசு இல்லையே என்று ஒரே ஒரு குறை. நாள்தோறும் தவறாமல் சிவவழிபாடு செய்யும் கல்யாணசுந்தரியும் கஞ்சாறரரும், வாரிசு வரம் கேட்டுப் பிரார்த்தித்து வந்தனர். இவர்களது வேண்டுதல் நிறைவேறும் காலமும் வந்தது. கஞ்சாறரின் மனைவி கருவுற்றாள்; உரிய காலத்தில் அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள். “நாங்கள் எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ; எங்களுக்குக் குழந்தைச் செல்வத்தைத் தந்துவிட்டாய்! இறைவா!” என மகிழ்ந்தவர்கள், மகளுக்கு புண்ணியவர்த்தினி எனும் பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். காலங்கள் ஓடின. கருகருவென நீண்ட கூந்தலுடன், அழகு ததும்பக் காட்சி அளித்த மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் நாளும் வந்தது. சிவபக்தியில் திளைக்கும் கலிக்காமன் என்னும் இளைஞனைத் தன் மகளுக்கு மணம் முடிக்க ஏற்பாடுகள் செய்தார் கஞ்சாறர். இதையறிந்த ஊர்மக்கள், “மாமனாரும் சிவபக்தர்; மருமகப் பிள்ளையும் சிவபக்தர்எனக் கொண்டாடினர். வெகுவிமரிசையாக திருமண ஏற்பாடுகள் நடக்க, முகூர்த்த நாளும் நெருங்கியது. அடியவர் வீட்டுத் திருமண வைபவத்துக்கு, ஆண்டவன் வராமல் இருப்பானா? திருமணத்துக்கு முதல் நாள். காவி உடையும், கழுத்தில் உருத்திராட்ச மாலைகளும் அணிந்து, மேனி முழுவதும் திருநீறு தரித்தபடி சிவனடியார் ஒருவர் வந்தார். அவர் மாவிரதியர். அதாவது சிரசின் முடியை ஐந்து பிரிகளாக்கி பூணூலாக அணிந்துகொள்ளும் வழக்கம் உள்ளவர்.

பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில், சுருட்டப்பள்ளி

அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில், சுருட்டப்பள்ளி, சித்தூர், ஆந்திரா.

+91- 8576-278 599

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பள்ளிகொண்ட சிவன், வால்மீகிஸ்வரர்
அம்மன் மரகதாம்பிகை
தல விருட்சம் வில்வம்
பழமை 2000-3000 வருடங்களுக்கு முன்
ஊர் சுருட்டப்பள்ளி
மாவட்டம் சித்தூர்
மாநிலம் ஆந்திரா

துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தான் இந்திரன். அசுரர்கள் அவனது ராஜ்யத்தைப் பிடித்தனர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து, அமுதம் உண்டு பலம் பெற வேண்டும் என தேவகுரு கூறினார்.

திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர். வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்ற சிவனை வேண்டினர். சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்து வரக் கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி சிவனிடம் தந்தார். அப்போது அனைத்து தேவர்களும்,”சிவபெருமானே. இந்த விஷத்தை வெளியில் வீசினாலும், தாங்களே உண்டாலும் அனைத்து ஜீவராசிகளும் அழியும். இந்த இக்கட்டான் சூழ்நிலையிலிருந்து எங்களைக் காத்திடுங்கள்என மன்றாடினார்.