Category Archives: பாடல் பெறாதவை
வாலீஸ்வரர் திருக்கோயில், கோலியனூர்
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், கோலியனூர், விழுப்புரம் மாவட்டம்.
+91- 4146- 231 159, +91-94432 93061
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வாலீஸ்வரர் | |
அம்மன் | – | பெரியநாயகி | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கோலியனூர் | |
மாவட்டம் | – | விழுப்புரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
மகிஷாசுரன், கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிவு உண்டாக வேண்டுமென்ற வரம் பெற்றிருந்தான். தான் பெற்ற வரத்தால், தேவர்களைத் துன்புறுத்தினான். தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.
சிவன், அம்பிகையிடம், மகிஷாசுரனை வதம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பிகை, தன்னிலிருந்து பிராமி, மகேசுவரி, கவுமாரி, வைணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி என ஏழு சக்திகளைக் தோற்றுவித்தாள். “சப்தகன்னியர்” எனப்பட்ட இவர்கள் மகிஷாசுரனை அழித்தனர். இதனால் அவர்களுக்கு தோஷம் உண்டானது.
வளவநாதீஸ்வரர் திருக்கோயில், வளையாத்தூர்
அருள்மிகு வளவநாதீஸ்வரர் திருக்கோயில், வளையாத்தூர், வேலூர் மாவட்டம்.
+91 99769 99793, 98436 43840
காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். மற்ற நேரங்களில் அர்ச்சகரை அழைத்து வந்து சுவாமியை தரிசிக்கலாம்.
மூலவர் | – | வளவநாதீஸ்வரர் | |
உற்சவர் | – | சந்திரசேகரர் | |
அம்மன் | – | பெரியநாயகி | |
தல விருட்சம் | – | வன்னி | |
தீர்த்தம் | – | சிவதீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | சிவபாதநல்லூர் | |
ஊர் | – | வளையாத்தூர் | |
மாவட்டம் | – | வேலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த மன்னர் ஒருவர், தீவிர சிவபக்தராக இருந்தார். மக்கள் சிறப்பாக வாழவும், விவசாய நிலம் செழித்து வளரவும் அருள்புரியும் சிவனுக்கு, தம் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். ஆனால், அவருக்கு எங்கு, எப்படி கோயில் அமைப்பதெனத் தெரியவில்லை. ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய சிவன், இந்த இடத்தை குறிப்பால் உணர்த்தினர். அதன்படி, மன்னர் இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பினார். இங்கு அருளும் சிவன் மக்களுக்கு வேண்டும் வளத்தை தந்தருளியதால் “வளவநாதீஸ்வரர்” என்றே பெயர் பெற்றார். மக்களின் பிரார்த்தனைகளுக்கேற்ப வளைந்து கொடுத்து அருள் செய்பவர் என்பதாலும், இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். பல்லவர், சோழர், சம்புவராயர், நாயக்கர் மற்றும் விஜயநகரப் பேரரசர்களால் திருப்பணி செய்யப்பட்ட புராதனமான கோயில் இது.