Category Archives: பாடல் பெறாதவை

வீரசேகரர் திருக்கோயில், சாக்கோட்டை

அருள்மிகு வீரசேகரர் திருக்கோயில், சாக்கோட்டை, சிவகங்கை மாவட்டம்.

+91- 4565 – 272 117, 99943 84649

காலை 6 மணி முதல்12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீரசேகரர் (திருமுடித்தழும்பர்)
அம்மன் உமையாம்பிகை
தல விருட்சம் வீரை மரம்
தீர்த்தம் சோழா குளம்
ஆகமம் காரணாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வீரைவனம்
ஊர் சாக்கோட்டை
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதிக்கு வந்த வேடுவன் ஒருவன், ஒருமரத்தின் அருகிலிருந்த வள்ளிக்கிழங்கு கொடியைக் கடப்பாரை கொண்டு தோண்டினான். அந்த இடத்தில் இருந்து இரத்தம் பீறிட்டது. ஆச்சர்யமடைந்த அவன், நிலத்திற்கு கீழே பார்த்தபோது, இலிங்கம் ஒன்று இருந்தது.

சிவன் நிகழ்த்திய இந்த அதிசயத்தை வேடுவன் மன்னரிடம் கூறினான். இதைக்கேட்டதுமே, சிவனின் திருவிளையாடலை அறிந்த மன்னர் இவ்விடத்தில் கோயில் கட்டினார். பின்னர், குஷ்டநோயால் பாதிக்கப்பட்டிருந்த மன்னர் குணமானார்.

ஒரு சமயம், இங்கு வந்த பாண்டிய மன்னன் ஒருவர், சிவன் நிகழ்த்திய அதிசயம் குறித்து நம்பாமல் சந்தேகம் கொண்டான். அவர் சுவாமியை முதல் முறை வலம் வந்தபோது, அங்கிருந்த வீரை மரம், பலா மரமாக மாறியது. மன்னன், திகைப்புற்று சிவனை வணங்கி மன்னிப்பு கேட்டான். அம்மரத்திலிருக்கும் கனியை உண்டால், அவனது நோய்கள் தீரும் என்று கூறி சுவாமி அருளினார். மன்னர், அப்பழத்தை உண்ட பிறகு, அம்மரம் மீண்டும் வீரை மரமாகவே மாறியது. சிவனை வணங்கிவிட்டு, இம்மரத்தை வணங்கினால் எண்ணியது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

மதுரையில் பாண்டிய மன்னரிடம் பணியாற்றிய மாணிக்கவாசகர் குதிரைகள் வாங்கச் சென்றபோது, இவ்வழியே சென்றார். அப்போது, சிவனுக்கு தன்னிடமிருந்த புழுங்கல் அரிசியை சமைத்து நைவேத்யமாக படைத்தார். அன்று முதல், இங்கு புழுங்கல் அரிசி சாதமே நைவேத்யமாக படைக்கப்படுகிறது.

ஒருசமயம், குழந்தை இல்லாத பக்தர் ஒருவர் தன்னிடமிருந்த பசுக்களில் சிலவற்றை அந்தணர் ஒருவருக்கு தானமாக கொடுத்துவிட்டு, மீதியை மற்றொருவருக்கு விற்று விட்டார். அந்தணரின் வீட்டில் நின்ற பசுக்கள், விற்கப்பட்ட பசுக்களை தேடிச் சென்று விட்டன. பசுக்களை வாங்கியவர், அவற்றையும் தொழுவத்தில் கட்டி விட்டார். இதையறிந்த அந்தணர் அவரிடம் சென்று, தனது பசுக்களை தரும்படி கேட்டார். பசுக்களை வாங்கியவர் அதிக ஆசையால் தராமல் வாக்குவாதம் செய்தார். இவ்வழக்கு மன்னனிடம் சென்றது. மன்னன், இத்தலத்து சிவனை சாட்சியாக வைத்து, உண்மை கூறி, தீர்த்தத்தில் மூழ்கி எழும்படி கூறினார். அதன்படி, இருவரும் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்திட அந்தணரை ஏமாற்றியவன் தனது கண்களை இழந்தான். பின், அவன் பசுக்களை திருப்பி ஒப்படைத்து சிவனிடம் மன்னிப்பு பெற்றான். இவ்வாறு, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டு அவர்களை ஏமாற்றுபவர்களை இத்தலத்து இறைவன் உடனடியாக தண்டிப்பவராக இருக்கிறார்.

வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில், அம்பாசமுத்திரம்

அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 99525 01968

காலை6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீரமார்த்தாண்டேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் நித்யகல்யாணி
தீர்த்தம் ஹரிஹரதீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் அம்பாசமுத்திரம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் இப்பகுதியை வீரமார்த்தாண்டன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். சிவபக்தனான அம்மன்னன், சிவனுக்கு தனிக்கோயில் கட்ட வேண்டுமென விரும்பினான். ஆனால் அவனால் எந்த இடத்தில் கோயில் கட்டுவதென தெரியவில்லை. ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய சிவன், இத்தலத்தைச் சுட்டிக்காட்டி தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்பின் மன்னன் இத்தலத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பினான். சிவன் மன்னனின் பெயரால், “வீரமார்த்தாண்டேஸ்வரர்என்று பெயர் பெற்றார்.