Category Archives: சக்தி ஆலயங்கள்

அருள்மிகு செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில், சிம்மக்கல், மதுரை

அருள்மிகு செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில், சிம்மக்கல், மதுரை-625 001.
********************************************************************************************
மதுரைமாவட்டம்.
********************

+91- 98655 82272

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – செல்லத்தம்மன், கண்ணகி

தல விருட்சம்: – வில்வம், அரசு

தீர்த்தம்: – வைகை

ஆகமம்/பூஜை: – சாக்தாகமம்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – மதுரையம்பதி

ஊர்: – மதுரை

மாவட்டம்: – மதுரை

மாநிலம்: – தமிழ்நாடு

காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த கண்ணகி, கோவலன் இருவரும் பிழைப்பிற்காக மதுரைக்கு வந்தனர். அவர்களை வழியில் சந்தித்த கவுந்தியடிகள் என்னும் பெண் துறவி, அவர்களை மதுரையிலுள்ள மாதரி என்பவளின் வீட்டில் அடைக்கலமாக தங்கச் செய்தாள். கண்ணகியின் கணவன் கோவலன், மனைவியின் சிலம்பை விற்று தொழில் துவங்கலாம் என்ற நோக்கத்தில் ஊருக்குள் சென்றான்.

இவ்வேளையில், அவ்வூரை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவியின் சிலம்பை அபகரித்த அரண்மனை பொற்கொல்லன், அந்தப் பழியை கோவலன் மீது போட்டான். இதை தீர விசாரிக்காத பாண்டியன், கோவலனுக்கு மரண தண்டனை கொடுத்துவிட்டார்.

கணவனை இழந்த கண்ணகி கோபத்துடன் பாண்டியன் சபையில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினாள்.

தவறை உணர்ந்த மன்னனும், ராணியும் அக்கணமே உயிர்விட்டனர். பிற்காலத்தில் கண்ணகியின் கற்புத்திறனை உணர்ந்த மக்கள், அவளைத் தெய்வமாகவே வழிபட்டனர். அவள் தங்கியிருந்த இந்த இடத்தில் சிலை வடித்து கோயில் எழுப்பினர். செண்பகப்பாண்டியன் காலத்தில் இது அம்மன் கோயிலாகி விட்டது.

இத்தலவிநாயகர் அனுக்கை விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் துர்க்கை, மீனாட்சி சுந்தரேசுவரர், அய்யனார், காலபைரவர் ஆகியோர் இருக்கின்றனர். முன் மண்டப தூண்களில் அட்ட(8) காளி சிற்பங்கள் உள்ளன.

அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், சுண்டக்காமுத்தூர்

அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், சுண்டக்காமுத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம்.
*********************************************************************************************************

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – செல்லாண்டியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – சுண்டக்காமுத்தூர்

மாவட்டம்: – கோயம்புத்தூர்

மாநிலம்: – தமிழ்நாடு

சுமார் 200 வருடங்களுக்கு முன்பு, இந்தப் பகுதியில் சுண்டைக்காய் விளைச்சல் அமோகமாக இருக்கும். இதனால் சுண்டைக்காய்முத்தூர் என்றே ஊரின் பெயரும் அமைந்தது. ஒருநாள், சுண்டைக்காய் பயிரிட்ட நிலத்தில் ஏதோவொன்று தட்டுப்பட, அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து நிலத்தை தோண்டினர். அப்போது, பூமியில் இருந்து அம்மனின் விக்ரகம் தென்பட்டது. அப்போது அங்கிருந்த பெண்,”நான் செல்லாண்டி ஆத்தா வந்திருக்கேன். இங்கேயே குடியிருக்கப் போகிறேன்என அருள் வந்து ஆடினாள். இதையடுத்து அம்மன் விக்ரகத்தை அருகிலேயே பிரதிட்டை செய்து, சிறிய கோயில் எழுப்பி வழிபடத் துவங்கினர்.

கோயில் பிரகாரத்தில் கருப்பணசாமியும் அவரது வாகனமான குதிரையும் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மன் விளைநிலத்திலிருந்து வந்து காடு மேடுகளை செழிக்கச் செய்வதால் இந்த முறை என்ன பயிரிட வேண்டும் என அம்மனிடம் உத்தரவு கேட்கும் வழக்கம் இன்றைக்கும் உள்ளது. என்னென்ன விதைக்க வேண்டும் என்பதை தனித்தனி சீட்டுகளில் எழுதி, அம்மனுக்கு முன்னே போடுவார்களாம். பிறகு, அங்கிருப்பவர்களில் எவர் மீதாவது அம்மன் அருள் இறங்கும். அவர் எடுத்து தரும் சீட்டில் என்ன உள்ளதோ, அதையே அந்த வருடம் பயிரிடுவர். இதனால் விளைச்சல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.