Category Archives: சக்தி ஆலயங்கள்

அருள்மிகு நாககாளியம்மன் திருக்கோயில், முத்துதேவன்பட்டி

அருள்மிகு நாககாளியம்மன் திருக்கோயில், முத்துதேவன்பட்டி-625 531 தேனி.
***************************************************************************************

+91- 97889 31246, 96779 91616 (மாற்றங்களுக்குட்பட்டவை)

செவ்வாய், வெள்ளியில் காலை 5- 9 மணி, மாலை 5.30- இரவு 9 மணி. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நள்ளிரவு 1 மணி வரை.

மூலவர்: – நாககாளியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – முத்துதேவன்பட்டி

மாவட்டம்: – தேனி

மாநிலம்: – தமிழ்நாடு

திருமண பாக்கியத்தை வழங்கும் நாக காளியம்மன் முத்துதேவன்பட்டியில் அருள்பாலிக்கிறாள். இவளுக்கு மாதம் ஒருமுறை, பிரபல கோயில்களில் அம்பாள் அலங்காரம் செய்யப்படுவதும், அதை மாதம் முழுவதும் கலைக்காமல் வைத்திருப்பதும் விசேடம்.

முற்காலத்தில் இப்பகுதியில் சங்குப்பூ செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தன. இங்கு ஒரு புற்று இருந்தது. அவ்வூர் சிவபக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்பிகை,”தான் புற்றுக்குள் இருப்பதாக உணர்த்தினாள்.” அதன்படி புற்றைப் பார்த்த போது, அதற்குள் அம்பாளின் சுயம்பு வடிவம் இருந்ததைக் கண்டனர். பின், அம்பிகைக்கு சிலை வடித்து, புற்றுக்கு மேலேயே பிரதிட்டை செய்து கோயில் எழுப்பினர். புற்றில் தானாகத் தோன்றியதால் அம்பிகைக்கு சுயம்பு நாககாளியம்மன்என்று பெயர் சூட்டப்பட்டது.

அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில், கெங்கமுத்தூர்

அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில், கெங்கமுத்தூர், பாலமேடு, மதுரை மாவட்டம்.
***********************************************************************************************

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த நாகம்மனை தரிசிக்க செல்லலாம்.

மூலவர்: – நாகம்மாள்

தல விருட்சம்: – வேம்பு

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – பாலமேடு, கெங்கமுத்தூர்

மாவட்டம்: – மதுரை

மாநிலம்: – தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் அம்மன், பசுமையான தென்னஞ்சோலைக் குள்ளே புற்றாக வளர்ந்து காட்சி அளித்து வந்தாள்.

நாளடைவில் தாய் கருமாரி, வேம்பு மரத்தடியில் சக்தியாக உருமாறி நின்றாள் இந்த சக்திசொரூபம் தான் ஒருமுறை ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு நாக அம்மனாக மாறினாள்.

வெள்ளத்தில் வலம் வந்த நாகம்மாள், இந்த இடத்தைத்தான் தனக்குரிய இடமாக தேர்ந்தெடுத்தாள். அத்துடன் மக்களுக்கு அருள் வழங்கும் வகையில் கருமாரியையும், பெரிய நாகம்மானையும், ராக்காயியையும் தன்னுடன் இணைத்து ஒன்று சேர்ந்து ஒங்கார சொரூபமான நாகம்மாள்என்ற திருநாமத்துடன் விளங்குகிறாள்.

பார்வதியின் 108 அவதாரத்தில் ஒன்றுதான் இந்த நாகம்மாள் அவதாரம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத்தான், அன்னை பராசக்தி, நாகம்மாள் அவதாரம் எடுத்துள்ளாள் என்கிறது புராணம்.