அருள்மிகு பரமேஸ்வரி உடனுறை பரமசுந்தரர் திருக்கோயில், வாழ்க்கை புத்தகளூர்
அருள்மிகு பரமேஸ்வரி உடனுறை பரமசுந்தரர் திருக்கோயில், வாழ்க்கை புத்தகளூர், நன்னிலம் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.
+91 44 28152533, 9840053289, 9940053289
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
பரமசுந்தரர் |
அம்மன் |
– |
|
பரமேஸ்வரி |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
நன்னிலம் |
மாவட்டம் |
– |
|
திருவாரூர் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புத்தகை என்ற மகாமுனிவர் சிவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். சில நாட்களில் அவரைச் சுற்றி புற்றுகள் சூழ்ந்தது. அவரது கை மட்டும் இந்த சிவனை (ஸ்ரீ பரமசுந்தரர்) நோக்கியே இருந்தது. ஓம் நமச்சிவாய என்ற ஒலி மட்டும் வந்ததாகவும், அவருடைய தல வலிமையை மெச்சிய சிவன் அவருக்கு தரிசனம் தந்து, இங்கு எழுந்தருளினார் என்றும் கூறப்படுகிறது. எம்பெருமான் இம்முனிவருக்கு காட்சி அளித்ததால் இந்த ஊர் திருப்புத்தகை என்றும் நாளடைவில் புத்தகளூர் என மருவி வழங்கப்படுகிறது. இதற்குச் சான்றாக இன்றும் இந்த ஊரில் நிறைய பாம்புகளும், பாம்பு புற்றுகளும் காணப்படுகின்றன. பாம்புகள் யாரையும் கடிப்பதில்லை.
கல்வெட்டு தகவலின்படி இன்றும் இந்த ஊர் கோயிலானது 10வது பாம்பு ஊர் என்று கூறப்படுகிறது. திருநாகேஸ்வரம், திருபாம்பிரத்திற்கு இணையாக பாம்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக கோயில் அருகே நிறைய பெரிய பெரிய புற்றுகள் உள்ளன. இன்றும் ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் பாம்பானது சிவன்மேல் எந்தவித பயம் இல்லாமல் படுத்துக்கொண்டு மக்களுக்கு காட்சி அளிக்கிறது. அடிக்கடி சிவன் அருகிலே பாம்பானது சட்டை உரிப்பதும் ரொம்ப அதிசயமாகும். ஆனால் எத்தனை புகைப்படம், எப்படி எடுத்தாலும் பாம்பு மாத்திரம் காட்சி அளிக்கவில்லை என்பது உலக அதிசயம். ஆனால் பாம்புகள் கடிப்பதோ, கஷ்டமோ கொடுப்பதில்லை.
இந்த நிகழ்வுக்கு சான்றாக தெட்சிணாமூர்த்திக்கு பின்புறம் கல்வெட்டு உள்ளது. அதன்படி கி.பி. 917 ஆம் ஆண்டு முதலாம் பராந்தக சோழனால் திருப்பணி செய்யப்பட்டது, என்றும் இந்த கோயிலுக்காக நிறைய தானங்கள் அவன் கொடுத்தாகவும் தகவல் உள்ளது. பரமசுந்தரர், அமரசுந்தரர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது அங்குள்ள குருவானவர் ஞானகுரு என்றும் ஞானகாரகன் என்றும் தெரிவிக்கிறது.
கல்வெட்டுக்கள் மூலம் சுவாமி பரமசுந்தரர் என்று அறியப்படுகிறது. மிகவும் அழகாக, நேர்த்தியாக ஆவுடையாருடன் காட்சி அளிக்கிறார்.
அம்பாள் மிகவும் அழகான தோற்றத்துடன் லட்சணமாக காட்சி அளிக்கிறாள்.
வேறு எங்கேயுமே காணமுடியாத அழகான சிலை. தெட்சிணாமூர்த்தி பின்புறமே எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிலையின் பின்புறம் கல்வெட்டு இருப்பது அதிசயமாகும். மற்ற சிலைகள் எதுவும் காணப்படவில்லை. கோயிலின் அருகே நிறைய புற்றுகள், பாம்புகள் இருப்பதாலும், செவ்வாய், வெள்ளி பாம்புக்கு பால் ஊற்ற இராகு, கேது, நாக தோஷம் போகும் என்கின்றனர். இது இராகு, கேதுவிற்குரிய பரிகாரஸ்தலங்களில் ஒன்றாகும்.
திருவிழா:
சிவராத்திரி.
கோரிக்கைகள்:
தெட்சிணாமூர்த்தி இங்கு ஞானகுருவாக உள்ளதால் நமக்கு ஞானத்தையும், கல்வி அறிவினையும், மனஅமைதியும் கொடுக்கின்றார். அவரை வியாழக்கிழமைகளில் வழிபட மனக்குழப்பம் நீங்கி சித்தம் தெளியும் என்பது நம்பிக்கை. பரமேஸ்வரியை ஞாயிறு அன்று வழிபட கல்யாணம் நடைபெறுவதாக கூறுகின்றார்கள்.
நேர்த்திக்கடன்:
சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply