அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில், வேதபுரி
அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில், வேதபுரி,தேனி மாவட்டம்.
+91- 4546- 253 908 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பிரஜ்ஞா தட்சிணாமூர்த்தி | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | வேதபுரி | |
மாவட்டம் | – | தேனி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஞானக் கடவுள் தெட்சிணாமூர்த்திக்குத் தனிக் கோயில் தேனி அருகே உள்ள வேதபுரியில் அமைந் துள்ளது. இத்தலம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. மூலவர் பிரஜ்ஞா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங்கள் அஸ்திவாரத்தின் கீழ் முறைப்படி வைக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தில் நமசிவாய பஞ்சாட்சர மந்திரத்தை குறிக்கும் வகையில் 5 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன.
கோயிலில் காலை பூஜை நேரங்களில் மட்டுமே தேங்காய் உடைக்கலாம். கேந்திப்பூ, கோழிக் கொண்டைப்பூ போன்றவைகளை பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாது. கொண்டைக் கடலைகளை மாலையாக கட்டி கொண்டு வருவதைத் தவிர்த்து பாக்கெட்டுகளாக கொண்டு வர வேண்டும். சுவாமிக்கு மாலை அணிவிக்க விரும்புபவர்கள் வில்வ மாலை கொண்டு வரலாம். கற்பூரம் ஏற்றுவதும் இக்கோயிலில் தடை செய்யப் பட்டுள்ளது.
மகா மண்டபத்தின் நீளம் 108 அடி, அகலம் 54 அடியாக உள்ளது. பக்தர்கள் மண்டபத்தின் எப்பகுதியில் இருந்தும் சுவாமியை நன்றாக தரிசிக்கும் வகையில் மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மூலவரையும், விமானத்தையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.
திருவிழா:
5 கால பூஜைகள் இங்கு நடக்கிறது. அதிகாலை 5க்கு விஸ்வரூப தரிசனம், 5.30 மற்றும் 11க்கு காளீஸ்வர பூஜை, காலை 8க்கு தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், 8.30க்கு காலசந்தி பூஜை, 11.30க்கு உச்சிகால பூஜையும் நடக்கிறது. 12 மணிக்கு நடை சாத்தப்படும். பின்பு மாலை 5க்கு நடைதிறக்கப்படும். தொடர்ந்து மாலை 6 க்கு காளீஸ்வர பூஜை, 6.30க்கு மஹா தீபாராதனை, இரவு 7.45க்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறும். 8க்கு திருக்காப்பிடுதல் வைபவம் நடைபெறும். இது தவிர வியாழக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். மூலவருக்கு 16வித உபச்சாரங்களுடன் சாயரட்ஷை பூஜை, தொடர்ந்து சகஸ்ர நாம பூஜையும் நடைபெறும். மேலும் சிறப்பு அபிஷேக, ஆராதனை தீபாராதனையும் இதில் இடம்பெறும். பிரதோஷ நாட்களில் மாலை 4.30 முதல் இரவு 8.30 வரை நந்திக்கும், சிவனுக்கும் பல்வேறு சிறப்பு ஆராதனை வழிபாடுகள் நடக்கும்.
வேண்டுகோள்:
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply