அருள்மிகு அழகிய சாந்த மணவாளப் பெருமாள் திருக்கோயில், அர்ஜுனாபுரம், வத்திராயிருப்பு
அருள்மிகு அழகிய சாந்த மணவாளப் பெருமாள் திருக்கோயில், அர்ஜுனாபுரம், வத்திராயிருப்பு, விருதுநகர் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
அழகிய சாந்த மணவாளப்பெருமாள் |
உற்சவர் |
– |
|
அழகிய சாந்த மணவாளப்பெருமாள் |
தாயார் |
– |
|
பத்மாவதி தாயார் |
தல விருட்சம் |
– |
|
உறங்காப்புளி |
தீர்த்தம் |
– |
|
இறங்காக்கிணறு |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் |
– |
|
தர்மாரண்ய க்ஷேத்திரம் |
ஊர் |
– |
|
வத்திராயிருப்பு |
மாவட்டம் |
– |
|
விருதுநகர் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
வத்திராயிருப்பு பகுதியை புராணகாலத்தில் தர்மாரண்ய க்ஷேத்திரம் என்று அழைத்தனர். இங்குள்ள மலைப்பகுதி “தர்மாத்ரி” என்று குறிக்கப்படுகிறது. அர்ஜுனன் தீர்த்தயாத்திரை செய்தபோது, இப்பகுதிமக்கள் வறட்சியால் நீரின்றி தவித்ததைக் கண்டு வருந்தினார். உடனே, தன் வில்லை எடுத்து பூமியை நோக்கி அம்பு தொடுத்தார். அந்த இடத்தில் அழகிய பொய்கை உருவானது. அப்பொய்கை அர்ஜுனப் பொய்கை என்றும், அங்கிருந்து உற்பத்தியான நதி “அர்ஜுனாநதி” என்றும் பெயர் பெற்றது. ரிஷிகளிடம் ஸ்ரீதேவியான லட்சுமி தாயார், “பூலோகத்தில் தவம் செய்வதற்கு சிறந்த இடம் எது?” என்று கேட்டாள். அவர்கள் இத்தலத்தைப் பற்றி சொன்னதும், அங்கு வந்தாள். இடத்தைப் பார்த்தவுடனேயே அவள் முகம் மலர்ந்தது. “லட்சுமி முகம் மலர்ந்த இடம்” என்பதால் “”ஸ்ரீவக்தரம்” (திருமகள் திருமுகம்) என்னும் பொருளில் இத்தலம் அழைக்கப்பட்டுவந்தது. பின்னாளில் “ஸ்ரீ வக்த்ரபுரம்” என்றாகி வத்திராயிருப்பு என்று மருவியதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீதேவி தாயார் இவ்வூரில் தவம் செய்து, திருத்தங்கல் என்னும் திருத்தலத்தில் மகாவிஷ்ணுவை திருமணம் செய்ததாக பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.
அருள்மிகு நம்பெருமாள் திருக்கோயில், சோலைக்கவுண்டன்பட்டி
அருள்மிகு நம்பெருமாள் திருக்கோயில், சோலைக்கவுண்டன்பட்டி, விருதுநகர் மாவட்டம்.
+91- 4562 – 394 299, 324 299, 94889 62220
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
திருவேங்கடமுடையான் (சீனிவாசப்பெருமாள்) |
தாயார் |
– |
|
ஸ்ரீதேவி, பூதேவி |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
சோலைக்கவுண்டன்பட்டி |
மாவட்டம் |
– |
|
விருதுநகர் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
என்ன இராசி, என்ன நட்சத்திரம் என தெரியாவிட்டாலும் விருதுநகரிலிருந்து 8 கி.மீ., தூரத்தில் உள்ள சோலைக்கவுண்டன்பட்டி சீனிவாசப்பெருமாள் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்தால் அதன் பலன் அவரவர் இராசி, நட்சத்திரத்திற்கு வந்து சேர்ந்து விடும் எனக் கோயில் தல வரலாறு கூறுகிறது. இப்படி அந்தந்த இராசி, நட்சத்திரத்திற்குரிய பலனை பெருமாள் அள்ளிவழங்குவதால் இவரை “நம்பெருமாள்” என்று இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.
மூலவர் திருவேங்கடமுடையான் என்ற சீனிவாசப்பெருமாள். ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
கோயிலின் சிறப்பம்சமே இராசிக்கட்டமும், இராசிக்கு அதிபதியும் இருப்பதுதான். எனவே இராசி நட்சத்திரம் தெரியாமல் இருக்கும் பக்தர்கள் இத்தலம் வந்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்தால் அவரவர்களுக்குரிய பலன் கிடைக்கிறது.