அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், மேட்டு மகாதானபுரம்
அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், மேட்டு மகாதானபுரம் -639 106, கிருஷ்ணராயபுரம், கரூர் மாவட்டம்.
*********************************************************************************************************
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர்: – கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம்
மாநிலம்: – தமிழ்நாடு
பெருமிழலை நகரை ஆண்ட மன்னரின் பெயர் சிவபெருமான். இவரிடம் பணிபுரிந்தவர் குரும்பநாயனார். இவர் 63 நாயன்மார்களில் ஒருவர். அந்த ஊர் மக்கள் பக்தியில் சிறந்து விளங்கினர். குரும்பநாயனார் சுந்தரமூர்த்தி நாயனாரை வணங்கி வந்தார். அவரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டார். இவர் ஆடி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் குரும்ப இனத்தில் பிறந்தார்.
தினமும் சிவனடியார்களுக்கு வேண்டிய உணவு, உடை மற்றும் பொருட்களை ஒரு கம்பளியில் கட்டி எடுத்துவந்து ஊர் எல்லையில் கொடுத்து அனுப்புவதை முதல் கடமையாகக் கொண்டிருந்தார்.
குரும்ப இனத்தவரின் தொழில் ஆடு மேய்ப்பது ஆகும். ஆட்டின் முடியில் செய்த கம்பளியில் அந்த பொருட்களை எடுத்து வருவார். எல்லாரிடமும் பணிவாக நடந்து கொள்வார்.
இறைவனின் பாதங்களைத் தன் நெஞ்சில் வைத்து வணங்குவதே தன் கடமை என எண்ணி வாழ்ந்து வந்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் மீது அன்புகொண்டு வணங்கி வந்ததால் இவருக்கு அட்டமாசித்திகள் கிடைத்தன. “நமசிவாய” என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓயாமல் ஓதி வந்தார்.
அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை
அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை, பொள்ளாச்சி – 642104, கோயம்புத்தூர் மாவட்டம்.
*********************************************************************************************************
+91 – 4253 282 337, 283 173
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர்: – மாசாணியம்மன்(மயானசயனி) தீர்த்தம்: – கிணற்றுநீர் தீர்த்தம்
பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்:- உம்பற்காடு
ஊர்: – பொள்ளாச்சி, ஆனைமலை
மாநிலம்: – தமிழ்நாடு
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை நன்னன் எனும் அரசன் ஆட்சி செய்தான். அவன் ஆழியாற்றின் கரையில் மாமரம் ஒன்றை வளர்த்து வந்தான். அம்மரத்தின் காய், கனிகளை யாரும் பறிக்கவோ, பயன்படுத்தவோ கூடாது எனவும் கட்டளையிட்டிருந்தான்.
ஓர்நாள், ஆழியாற்றில் குளித்துக்கொண்டிருந்து இளம்பெண் ஒருத்தி, ஆற்றில் மிதந்து வந்த அம்மரத்தின் கனியை உண்டுவிட்டாள். இதையறிந்த மன்னன், அவளுக்கு மரண தண்டனை கொடுத்தான். ஊர்மக்கள் எதிர்த்தனர். ஆனால், மன்னன் தண்டனையை நிறைவேற்றி விட்டான்.
வருத்தம் கொண்ட மக்கள் மயானத்தில் அவளை சமாதிப்படுத்தி, அவ்விடத்தில் அவளைப் போலவே சயனித்த நிலையிலான உருவத்தை செய்து வைத்தனர். காலப்போக்கில் அவளே ஊர்காக்கும் அம்மனாக இருந்திட, மக்கள் இவ்விடத்திலேயே கோயில் எழுப்பி விழிபட்டனர்.