அருள்மிகு காட்கரையப்பன் (வாமனர்) திருக்கோயில், திருக்காக்கரை

அருள்மிகு காட்கரையப்பன் (வாமனர்) திருக்கோயில், திருக்காக்கரை-683 028, எர்ணாகுளம் மாவட்டம் கேரளா மாநிலம்

காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காட்கரையப்பன் (அப்பன்)
தாயார் பெருஞ்செல்வநாயகி, வாத்ஸல்யவல்லி
தீர்த்தம் கபில தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருக்காக்கரை
மாவட்டம் எர்ணாகுளம்
மாநிலம் கேரளா

மகாபலிச்சக்கரவர்த்தி என்பவன் கேட்டவர்க்கு கேட்டதை எல்லாம் கொடுப்பவன். இவன் அசுர குலத்தில் பிறந்தாலும் மிகவும் நல்லவன். ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் இடறி விட்டான். தர்மம் செய்வதில் தன்னை விட தலை சிறந்தவர் யாருமில்லை என்ற அகந்தை அவனிடம் ஏற்பட்டு விட்டது. நல்லவனிடத்தில் அகந்தை ஏற்பட்டால் ஆபத்து. இதை உணர்ந்த மகாவிஷ்ணு அதை வளரவிடாமல் தடுக்கவே வாமனராக(குள்ள) வடிவெடுத்து வந்தார்.

அருள்மிகு பிரகலாத வரதன் (லட்சுமி நரசிம்மன்) திருக்கோயில், அஹோபிலம்

அருள்மிகு பிரகலாத வரதன் (லட்சுமி நரசிம்மன்) திருக்கோயில், அஹோபிலம்– 518 545, கர்நூல் மாவட்டம் ஆந்திர மாநிலம்.

+91- 8519 – 252 025 (மாற்றங்களுக்குட்பட்டது)

மலை அடிவாரக்கோயில்: காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரை, மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். மலைக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை, மதியம் 3 மணி முதல் இரவு 6 மணிவரை திறந்திருக்கும்.

மூலவர் மலையுச்சி அஹோபில நரசிம்மர்

அடிவாரம் பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மன்

உற்சவர் 9 உற்சவ மூர்த்திகள்
தாயார் மலையுச்சி இலட்சுமி

அடிவாரம் அமிர்தவல்லி, செஞ்சுலட்சுமி

தீர்த்தம் மலையுச்சி பாவநாசினி

அடிவாரம் இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், பாபநாச தீர்த்தம், கஜதீர்த்தம், பார்க்கவ தீர்த்தம்

பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருச்சிங்கவேள் குன்றம்
ஊர் அஹோபிலம்
மாவட்டம் கர்நூல்
மாநிலம் ஆந்திரம்

இரணியகசிபுவின் மகன் பிரகலாதன். இவனுக்கு நாராயணனின் மீது அளவுகடந்த பக்தி. ஆனால், தந்தையோ, தானே கடவுள் என்று கூறி வந்தான். ஒருமுறை உன் நாராயணனைக் காட்டு என இரணியன் கூற,”அவர் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார், அகில உலகத்தையும் அவரே காத்து வருகிறார்என நாராயணனின் புகழ் பாடினான். கோபம் கொண்ட இரணியன், தன் கதாயுதத்தால் ஒரு தூணை ஓங்கி அடித்தான். தூண் பிளவுபட்டு, நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை அழித்தார். இந்த அவதாரம் இத்தலத்தில் நிகழ்ந்தது. முன்பு பிரகலாதன் இங்கு வாழ்ந்த அரண்மனைப்பகுதி தற்போது காடாக மாறிவிட்டது.