துன்பங்கள் விலக

துன்பங்கள் விலக

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே! – பெஞ்சமின்.

ஏமாற்றங்கள், சோர்வு, சிக்கல்கள், ஏழ்மை,
இன்னும் எத்தனையோ துன்பங்கள் உள்ளன. பெரும்பான்மையான துன்பங்கள் பிறக்கும் இடம் என்ன என்றால் பிறரை எதிர் பார்த்தல்“, தான் செய்ய வேண்டிய கடமையை உணராது இருத்தல், அல்லது உணர்ந்து செய்யாது இருத்தல், பிறரை எதிர்பார்த்து, இவர் என்னுடைய நன்மைக்காக
இவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று எதிர் பார்ப்பதில்தான்.
ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கு ஏதோ ஒன்று தேவை. ஒரு குடும்பத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். கணவன் நினைப்பார், மனைவி இம்மாதிரிதான் நடந்துக்கொள்ள வேண்டும் என்று. அதேப்போல மனைவியும் தனது கணவன் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று எண்ணுவார். இவ்வாறு எல்லை கட்டிக் கொண்ட பிறகு உண்மையாக அதை விட நல்லதாக இருந்தால் கூட, நாம் எல்லை கட்டிய அளவிட்ட நிலையிலே இருந்து அது மாறி இருக்கும் போது அதை ஏற்றுக் கொள்ளமுடியாத நிலை ஏற்படுகிறது. விளைவு எப்போதுமே பிணக்கு, தவிப்பு, துன்பம், ஏமாற்றம் இவைகள்தான்.
எதிர்பார்த்தலில் பெறவேண்டும் பெறவேண்டும் என்கிற ஆசை அதிகரித்து ஓங்கி நிற்கிறது.

வேதாத்திரி மகரிஷி

துன்பங்கள் 3 வகை:

1. நமது செயலால் நாமே எற்படுத்திக் கொள்ளும் துன்பங்கள். இதன் காரணத்தைக் கண்டுபிடித்து நாமே மாற்றிக் கொள்ளலாம்.
2.
முன்வினையால் எற்படும் துன்பங்கள்.
3.
இயற்கை காரணமாக நம்மையும் மீறி வரும் துன்பங்கள்.

பின்னர் வரும் இருவகையான துன்பங்களைக் களைய நம்மால் இயலாது. ஆகவே இறைவனைச் சரணடையுங்கள். கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று மனமுருக வேண்டுங்கள்.

அங்காளம்மன் முத்தனம் பாளையம் திருப்பூர்
அழகிய சிங்க பெருமாள் திருவேளுக்கை, காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
எறும்பீஸ்வரர் திருவெறும்பூர் திருச்சி
கஜேந்திர வரதன் கபிஸ்தலம் தஞ்சாவூர்
கடம்பவனேஸ்வரர் குளித்தலை கரூர்
கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர் ) கரைவீரம் திருவாரூர்

காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர்

மதுரை

மதுரை

நவநீதேஸ்வரர் சிக்கல் நாகப்பட்டினம்
இலட்சுமி கோபாலர் ஏத்தாப்பூர் சேலம்

தீர்க்க சுமங்கலியாக இருக்க

தீர்க்க சுமங்கலியாக இருக்க

கணவன் மனைவிக்கு கணவராக மட்டுமல்ல காதலனாக, தோழனாக இருக்க வேண்டும். மனைவியும் கணவனிடம் வேலைக்காரியாக, மனவியாக, தாசியாக, தாயாக இருக்க வேண்டும். துன்பத்தையும், இன்பத்தையும் பங்கு போட்டுக்கொள்ளும் இல்வாழ்வில் விட்டுக்கொடுத்து போகவேண்டும். உங்கள் துணைவருக்கு பிடிப்பது போல் உங்களை மாற்றிக்கொள்ளுங்க. பிடிவாத குணம் இருக்க கூடாது. வேலைக்கு போயிட்டு வரும் ஆண்களிடம் வீட்டுக்கு வந்தவுடன் படபடவென்று வீட்டில் நடந்த சண்டைகளைக் கொட்டக்கூடாது. எந்த நேரத்தில் என்ன விசயம் பேசினாலும் பொறுமையுடன், இனிமையாகவும் அமைதியாகவும் எடுத்துச் சொல்ல வேண்டும். மாத கடைசியில் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி கேட்டு சித்திரவதை செய்யக்கூடாது. எந்த ஒரு சூழ்நிலையிலும் இருவரும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது. அலுவல் முடிந்து கணவர் வீடு வரும்போது முகத்தில் புன்னகை ஏந்தி ஆர்வமுடன் அவரை வரவேற்க வேண்டும். தொலைக்காட்சி நாடகத் தொடர்களைப் பார்க்காதீர்கள். அதில்தான் கணவனைக் கொடுமைப்படுத்துவது எப்படி என்று தெரியாதவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறார்கள்.
சந்தேகம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படியே ஏதாவது சந்தேகம் வந்தாலும் மனம் விட்டு ஒளிவு மறைவில்லாமல் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள். எந்த விஷயங்கள் நடந்தாலும் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே இருக்கட்டும். சிறு தவறுகள் நடந்தாலும் சகிப்பு தன்மையுன் ஏற்றுக்கொள்ளுங்க.
சின்ன சின்ன சண்டைகள் இல்லற வாழ்க்கையில் வருவது இயல்பு தான். ஒருவர் கோபமாக இருக்கும் பொழுது மற்றவர் எதிர்த்து பேசாமல் மொளனமாக இருப்பது மேல். பேசப் பேச கோபம் தான் அதிகமாகும். நிம்மதி குறைந்துவிடும்.
கணவன் கோபித்தால் பொருத்துக்கொள்ளுங்கள். குறை சொல்வதை தவிர்க்கவும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். அனுசரித்து போங்கள். கணவனிடம் குடும்ப நபர்களைப் பற்றி இடித்துறைக்காதீர்கள். வீட்டில் யார் மனதும் புண்படும் வகையில் நடவாதீர்கள். அகங்காரத்தை தவிற்கவும். சூழலுக்கேற்ப பழகவும். குடும்பத் தேவையறிந்து செலவு செய்யப் பழகுவதுடன் சிக்கனமாக இருக்கவும். இப்படியெல்லாம் நடந்துகொண்டால் கணவனின் மனம் நோகாது. (மனைவிக்கு மட்டும்தானா? கணவனுக்கும் அறிவுரைகள் உண்டு)

கணவனுக்கு விரக்தி, இரத்த அழுத்தம் அணுகாது. அதனால் அவன் தற்கொலை முயற்சிக்கு முயலமாட்டான். மனவியும் தீர்க்க சுமங்கலியாக இருக்கலாம்.

அத்துடன் கணவன் சிரஞ்சீவியாக இருக்க, கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்தல் நலம்.

ஆபத்சகாயேஸ்வரர் பொன்னூர் நாகப்பட்டினம்
அமிர்தகடேஸ்வரர் திருக்கடையூர் நாகப்பட்டினம்

கருநெல்லிநாதர் (சொக்கப்பன்)

திருத்தங்கல்

விருதுநகர்