Tag Archives: ஸ்ரீரங்கம்

அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில், ஸ்ரீரங்கம்

அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில், ஸ்ரீரங்கம்-620 006, திருச்சி மாவட்டம்.

+91 – 431 – 243 2246 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.15 மணி முதல் 1 மணி வரை, பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ரங்கநாதர்
உற்சவர் நம்பெருமாள்
தாயார் ரங்கநாயகி
தல விருட்சம் புன்னை
தீர்த்தம் சந்திர தீர்த்தம் மற்றும் 8 தீர்த்தங்கள்
ஆகமம் பாஞ்சராத்திரம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவரங்கம்
ஊர் ஸ்ரீரங்கம்
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

இத்தல ரங்கநாதர் திருப்பாற்கடலினின்று தோன்றியவர். இவரை பிரம்மா நெடுங்காலமாகப் பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த அரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார். இராவணன் சீதையை கடத்திச் சென்ற போது, அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான். இராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த அரங்கநாதரை அளித்தார் இராமர். விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்டு திரும்ப எடுக்கும்போது தரையை விட்டு வரவில்லை. அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும், “காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம்என்றார். விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர், தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை(இலங்கை) நோக்கிப் பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மசோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டிவழிபட்டான். அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.