Tag Archives: திருச்சி

பூமிநாதர் திருக்கோயில், திருச்சி

அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில், திருச்சி

+91 431 2711 3360

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பூமிநாதர்
உற்சவர்
அம்மன் ஜெகதாம்பிகை
தல விருட்சம் மகிழம், வன்னி, அத்தி, வில்வம், குருந்தை ஆகிய பஞ்ச விருட்சங்கள்
தீர்த்தம்
ஆகமம்/பூஜை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்
ஊர் திருச்சி
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியை ஆண்ட மன்னன் ஒருவனுக்கு, ஒருமுறை நிர்வாக ரீதியான பிரச்னை ஏற்பட்டது. பல முயற்சிகள் செய்தும், பிரச்னையை சரிசெய்ய முடியவில்லை. அப்போது, மகான் ஒருவர் மன்னனைச் சந்தித்தார். அவனிடம் மன்னன் தன் பிரச்னையைத் தெரிவித்தான். மகான் அவனது அரண்மனை கட்டுமானத்தில் பிரச்னை இருப்பதாகச் சொல்லி, சிவனை வழிபட பிரச்னை தீரும் என்றார். எனவே, மன்னன் இலிங்க பிரதிட்டை செய்து வழிபட்டான். இவருக்கு பூமிநாதர்என பெயர் சூட்டப்பட்டது. இதன்பிறகு பிரச்னை தீர்ந்தது. பிற்காலத்தில் அம்பிகை சன்னதி எழுப்பப் பட்டது. இவளை ஜெகதாம்பிகை என்பர்.

அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், இந்திரா நகர், திருச்சி

அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், இந்திரா நகர், திருச்சி

 

அமைதியான சூழ்நிலையில் அமைந்த திருக்கோயிலில், அலர்மேல் மங்கை சமேதராக எழுந்தருளியுள்ளார், ஸ்ரீநிவாசப் பெருமாள்.

திருச்சி இந்திரா நகரில் அமைந்துள்ள இக்கோயிலுக்குள் கொடி மரம், பலி பீடம் கடந்து சென்றால், கருடாழ்வார், ஸ்ரீநிவாசப்பெருமாளை இருகரம் கூப்பி வணங்கும் நிலையில் நின்று கொண்டிருக்கிறார். அருகில் நெய் விளக்கு ஏற்றி வழிபட, நம் குறைகளை சரி செய்ய பெருமாளுக்கு இவர் பரிந்துரை செய்வதாக நம்பிக்கை.

சுமார் ஆறடி உயரத்தில் நின்ற நிலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீநிவாசப்பெருமாள், திருப்பதி திருமலையில் எப்படிக் காட்சித் தருகிறாரோ அதே அம்சத்தில் இங்கே எழுந்தருளி அருள்புரிவதால், இவரை சனிக்கிழமைகளில் கற்கண்டு சமர்ப்பித்து வழிபட, பிரச்னைகள் விலகி சகல பாக்கியங்களும் கிட்டும் என்கிறார்கள். பெருமாளின் இடதுபுறம் தனிச்சன்னதியில் அலர்மேல் மங்கைத் தாயார் அருள்புரிகிறாள்.

தாயாரையும் பெருமாளையும் தரிசித்தபின், திருச்சுற்று வலம் வரும்போது லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணர், லட்சுமி ஹயக்ரீவரை தரிசிக்கலாம். பக்கத்தில் ஆதிசேஷன் சிறிய சன்னதியில் காட்சி தருகிறார்.

கிழக்கு பார்த்த ஆழ்வார் மண்டபத்தில் பக்த ஆஞ்சநேயர் நின்ற நிலையில் கைகூப்பிய வண்ணம் தனிச்சன்னதியில் அருள் பாலிக்கிறார். இவருக்கு வலப்புறத்தில் சுவாமி தேசிகன் தனிச்சன்னதியில் காட்சிதர, அதற்கு அடுத்த சன்னதியில் சக்கரத்தாழ்வார் பதினாறு திருக்கரங்களுடன் எழுந்தருளியுள்ளார்.

இத்திருக்கோயிலில் திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவம் போல் புரட்டாசியில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. மேலும், பங்குனி உத்திரத் திருக்கல்யாணம், வைகுண்ட ஏகாதசி திருநாள், பரமபத வாசல் திறப்பு, பகல்பத்து, ராப்பத்து உற்சவம், விசாக கருட சேவை உற்சவம் ஆகியவை மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தெற்கே மூன்று கி.மீ. தூரத்தில் சாத்தனூர் செல்லும் வழியில் இந்திரா நகரில் இக்கோயில் உள்ளது.